Monday, April 7, 2008

ஒகேனககல் மீது கன்ன்ட இனவெறியர்கள் படையெடுப்பு

நால்திசையிலிருந்தும் பகைவர்கள் நம் மீது தாக்குதல் நடத்திக்க்கொண்டிருக்கிறார்கள்.உயிரை பணயம் வைத்து கடலில் மீன் பிடிக்க செல்லும் நமது மீனவர்களை அன்றாடம் கொன்று குவிக்கிறது சிங்கள வெறிப்படை.முல்லைபெரியாறை முடக்கி வைத்து தென் தமிழக மக்களை பட்டினியில் கொலை செய்ய முயற்சிக்கிறது மலயாள ஆளும் வர்க்கமும் அரசும்.பாலாறை இதடுத்து நிறுத்தி நம்மக் படுகொலை செய்ய துடிக்கிறது ஆந்திர அதிகார வர்க்கமும் அரசும்.இவற்றிற்கு எல்லாம் மேலாக கன்னட வெறியர்கள் நம்மீது நடத்துகின்ற தாக்குதல்கள் அன்றாடம் தொடர்கதையாகிகொண்டிருக்கிறது.காவிரி சிக்கலை காரணம் காட்டி கலவரங்களை நடத்திகொண்டிருந்தவர்கள்.இன்று நமது ஒகேனக்கல்லை ஆக்கிரமிக்கும் பயங்கரவாத நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

உயரத்திலிருந்து வேகமாக விழுந்து தண்ணீர் தரையை தழுவுவதால் தெறித்தெழும் நீர்த்திவலைகள் புகை கூட்டம் போல் ஊரையே சூழ்ந்துகொல்லும்.இதனால் புகை நல்கும் கல் என அழகு தமிழ் பெயர் கொண்ட நமது பகுதி ஒகேனக்கல் என மாற்றப்பட்டு அந்நியர் ஆகிரமிப்புக்கு ஆளாகி நிற்கிறது.பார்ப்பனர்.நாயக்கர்,மராத்தியர்,ஆங்கிலேயர் என தொடர்ச்சியாக அந்நியரிடம் அடிமைப்பட்டுகிடந்த நமது தாய் தமிழ்நாட்டின் பல் ஊர்களின் பெயர்கள் இன்று தமிழில் இல்லை.பேரை வைத்து ஊரை அறிவது என்றால் தமிழ்நாட்டின் எந்த பகுதியும் நமக்கு சொந்தமாயிராது.மக்கள் பணத்தை வாரியிறைத்து திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க செய்ததை சாதனையாக தம்பட்டம் அடிக்கும் தமிழக அரசு நமது பகுதிகளின் பெயர்களை தமிழ் படுத்தமுடியாமல் இருப்பது வெட்க்கக்கேடு

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிராக கன்னடர்கள் போராடுவதாகவும்.அது காவிரியிலிருந்து வரும் தண்ணீரினால் உருவான சிக்கல் போலவும் பொய் பேசி திரிகின்றார் தமிழக முதல்வர்.குடிநீர் திட்டத்துக்கு எதிராக அல்ல.ஒகேனக்கல் பகுதியே கன்னடர்களுக்குதான் சொந்தம் என் வம்பு செய்கின்றனர் கன்ன்ட வெறியர்கள்

1993 - இல் பரிசல்துறையை தங்களுடையது என சொலி தகறாரை ஆரம்பித்தவர்கள்.2005 - இல் வனத்துறை.காவல்துறை சார்ந்த ஆயுதபடையுடன் கன்னட அரசியல்வாதிகளும் அத்துமீறி உரிமை கொண்டாட தொடங்கினர்.கன்னட இன வெறியர்களும் அரசியல்வாதிகளும்.ஆளும் வர்க்கமும் சேர்ந்து ஒகேனக்கல் மீட்ப்பு படை என்கிற அமைப்பை உருவாக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.கன்னட மக்களிடம் இனவெறியை தூண்டுவதன் மூலம்தான் கன்ன்ட ஆளும் வர்க்கங்களும்.அரசியல் கட்சிகளும் உயிர் வாழ முடியும் என்கிற நிலை அங்கு உள்ளது. உழவு தொழில் அழிந்து அங்குள்ள உழவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில்.மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப்ப கொள்ளையர்களின் இலாபத்துக்கு கர்நாடக வளமும்.மக்களும் பலியாகும் நிலையில் அவர்கள் இனவெறியை விதைத்து மக்களை திசை திருப்புகிறார்கள்.

இன்றைக்கு தேர்தல் வெற்றிக்காக கர்நாடக பாரதீய ஜனதாவும் அதன் தலைவன் எடியூரப்பாவும் ஒகேனக்கலை கைப்பற்றுவோம் என் இன் தீவிரவாதத்தை தூண்டி விட்டுள்ளனர்.ஒகேனக்கல் மட்டுமல்லாது கிருட்டிணகிரி.தர்மபுரி மாவட்டங்களும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடுகின்றனர்.ஒரே இந்தியா.ஒரே நாடு என் தம்பட்டம் அடிக்கும் காவிக் காலிகள் கன்னட இனவெறி போதை ஏற்றிகொண்டு பாரத மாதாவின் நிர்வாண நடனத்தை ரசித்துகொண்டிருக்கின்றனர்

தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க கன்னட வெறியர்கள் தொடர்ந்து செய்து வரும் இத்தாக்குதல் நடவடிக்கையை மூடி மறைத்து ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தால் கர்நாடகம் பாதித்து விடும் என்று அஞ்சி கன்னட வெறியர்கள் போராடுவதாக நம் மக்களை ஏமாற்றுகின்றன தமிழக அரசும் ஓட்டுபொறுக்கி அரசியல் கட்சிகளும்

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் முதல் பாதிக்கப்படுவதும்,பறிபோய்கொண்டிருப்பதும் தமிழக உரிமைகளும்,பகுதிகளுமே ஆகும்.நமது பகுதிகள் பிற மாநிலங்களுக்கு போன போது எந்த பகுதியாக இருந்தால் என்ன? எல்லாம் இந்தியாவுக்குள்தானே இருக்கிறது என் எக்த்தாளம் பேசினாராம் காமராசர்.எல்லாம் இந்தியா தான் என்றால் ஏன் எல்லைகள் மொழிவழியில் பிரிக்கபட்டன? என்று இந்த மரமண்டைகளுக்கு உறைக்கவே இல்லை.தமிழ்நாட்டின் எல்லையோரமான 830 கி.மீ அளவிலுல்ல பகுதிகள் அணைத்திலும் கறாரான வரய்றுப்பு எதுவும் இல்லாமல் எல்லா இடங்களிலும் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.தமிழ்நாட்டில் இருந்த எந்த அரசுகளும் இதற்காக சின்ன நடவடிக்கை கூட எடுக்கவில்லை ஏன்.?

ஏனென்றால் தமிழக அரசின் அதிபதிகளான டி.வி.எஸ் குழுமம்,பொள்ளாச்சி மகாலிங்கம்.வகையறா தரகு முதலாளிகள்.அரசியல்வாதிகள் தங்களது வணிக நிறுவனங்களையும் சொத்துக்களையும் கர்நாடகா,கேரளா,ஆந்திரா என் அண்டைமாநிலங்கள் முதல் இந்தியா முழுவதும் பரப்பி வைத்துள்ளனர்.இங்கே தமிழ்நாட்டின் உரிமைக்குரல் ஓங்கி ஒலித்துவிட்டால் வெளி மாநிலங்களில் இருக்கும் இவர்களின் சொத்துக்கள் சூரையாடப்படும்.இவர்களின் வாணிகம் பாதிக்கப்பட்டும் கொள்ளை வருமானம் பறிபோய்விடும்.

ஆதலாதான் இப்பெருச்சாளிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு கட்சி நடத்துகின்ற அணைத்து ஓட்டுபொறுக்கிகளும்,அவர்களின் அரசும் தமிழ் மக்கள் உரிமை பறிபோகும்போதும் சரி தமிழர்கள் கொல்லப்படும்போதும் சரி தமிழர்களை காக்க போராடாமல் இல்லாத இந்தியாவை காக்க வேண்டுமென கூச்சலிடுகிறார்கள். [red[பராளுமன்ற சாக்கடையில் படுத்துபுரளும் இடதுசாரிகளில் சிபிஎம் கட்சியானது முழுக்க முழுக்க தமிழ் இன விரோதியாகவே உள்ளது.

தமிழ்நாட்டின் நதிநீர் சிக்கல்.எல்லை சிக்கல் போலவே ஒகேனக்கல் சிக்கலும் தமிழக மக்களின் வாழ்வாதார குடியுரிமை சிக்கலாகும்.தமிழக உழவர்களின் வாழ்வுரிமை சிக்கலாகும்.இதனை டெல்லியின் அடிமையான தமிழக் முதலாளிகலின் அரசும் அதன் ஓட்டுபொறுக்கி கட்சிகளும் தீர்த்துவிட்டாது,திசை திருப்பி நீடிக்கவே செய்ய்யும்.எனவே நமது எல்லைகலளையும்.பகுதிகளையும் உரிமைகளையும் பாதுக்காக்க வேண்டுமென்றால் இவைகளை பலிகொடுத்து தங்களது பணப்பைகளை நிரப்பும் கொள்ளைக்கார முதலாளிகளையும்,அவர்களுக்கு துணைபோகும் அரசையும் அவர்களின் கட்சிகளையும் எதிர்த்து போராடி ஒழிக்க வேண்டும்.மக்களின் நலனில் அக்கறையுள்ள புரட்சிக்ர அரசையும் அதிகாரத்தையும் படைக்க வேண்டும்.தமிழக் உழவர் - தொழிலாளர் தலைமையில் நான் ஒன்றாக அணிதிரள வேண்டும்.

ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்.