இந்தியப் புரட்சி,மற்றும் மார்க்சிய லெனிய அரசியலின்
ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக தங்களைக் காட்டிக்
கொள்ளும் ‘மக்கள் கலை இலக்கிய கழகத்தின்’
இணையப் புரட்சியாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக
எழுதிக்கொண்டு இருக்கிறோம்.அந்த வகையில் இது
அடுத்த பதிவு.ஈழத்துக்கு எதிராகவும்,பொதுவாகவே
தமிழர்களுக்கு எதிராகவும்,பார்ப்பன வன்மத்தைக்
கொட்டும் இவர்களை கடுமையாகவே விமர்சிக்க
வேண்டி இருக்கிறது.புரட்சியின் மீதும்,மக்களின்
மீதும் உண்மையான நேசம் கொண்ட மனிதர்கள்
இவர்களின் கீழும் திரண்டிருப்பதை நாம் அறிந்தே
இருக்கிறோம்.இந்த பதிவுகளை அடிப்படையாக
வைத்து கேள்விகளை எழுப்பும் நிலையில் கூட
தங்களின் கீழ் இருக்கும் மனிதர்களை இவர்கள்
வைத்திருக்கமாட்டார்கள் என்பதும்,ஏறக்குறைய
ரஜினி ரசிகர்மன்ற உறுப்பினர்களைப் போலவே
அவர்களை தலைமை வழிநடத்தும் என்பதும் கூட
நாம் அறிந்ததுதான்.எனினும் உண்மையான
மக்கள் நேசம் கொண்ட மனிதர்கள்,இவைகளை
பரிசீலித்து தங்களை மாற்றிக்கொண்டால் அதுவே
நமக்கு கிடைத்த வெற்றிதான்.
சில மாதங்களுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள்
தலைவர் திருமாவளவனை விமர்சித்து ஒரு கட்டுரை
இவர்களின் புதிய ஜனநாயகம் இதழில் வந்திருந்தது.
ஆர்வத்துடன் படித்தபோது அதில் ஒரு விசயம் மிகக்
கவனமாக தவிர்க்கப்பட்டிருந்தது.அப்போதைக்கே
அதை கவனித்தாலும் உடனடியாக எதிர்வினை எழுத
வேண்டாம் என்று கருதியதால் விட்டு விட்டோம்.
மீண்டும் சமீபத்தில் வினவு இணையத்தில் வந்த
முத்துக்குமார் தொடர்பான கட்டுரையில்தான் அந்த
விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.முத்துக்குமார்
மன்னித்து விடு ..சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள்
தோற்றுப்போனோம் என்ற கட்டுரையை வாசித்த
போது ஓநாய் வடிக்கும் கண்ணீர்தான் நினைவில்
வந்தது.சரி விசயத்துக்கு வந்துவிடலாம்.துவக்க
காலங்களில் திருமா தலித் மக்களிடம் வளர்த்த
சுயமரியாதை,அரசியல் உணர்வை எல்லாம்,
தூய வர்க்க அரசியலின் பெயரால் நிராகரிப்பது
சரியல்ல என்ற எண்ணமே இருந்து வந்தது.
அதையும் தாண்டி திருமாவளவனை கைவிட
வேண்டும் என்கிற முடிவுக்கு வரத் தூண்டியது
முத்துக்குமாருக்கும்,ஈழ மக்களுக்கும் அவர்
இழைத்த துரோகத்தின் பிறகுதான்.
காலவரையறையின்றி,கல்லூரிகளை மூட உத்தரவிட்ட
தமிழகஅரசை எதிர்த்து,முத்துக்குமாரின் விருப்பப்படி
அவரது உடலை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போராட
முடிவுசெய்து,சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள்
மீது,திருமா தனது கட்சியினரை வன்னியரசோடு
அனுப்பி,தாக்குதல் நடத்தியதும்,உடலைக் கைப்பற்றி
அடக்கம்செய்ததுமான துரோகம் நிகழ்ந்தேறிய பின்பே
முத்துக்குமார் விரும்பிய எழுச்சி நிகழாமல் போனது.
முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றும் முயற்சி
நடந்தபோது இந்த வீராதி வீரர்கள் எதைப் பிடுங்கிக்
கொண்டு இருந்தார்கள் என்பதுதான் நமது கேள்வி.
வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு
இன்றைக்கு வந்து ஓநாய் கண்ணீர் வடிப்பவர்களை
என்ன செய்வது ? தெளிவாக புரிந்துகொண்டால்
முத்துக்குமார் விரும்பிய எழுச்சி நிகழாமல் போக
வேண்டும் என்று விரும்பியவர்களின் அணியில்,
ஆளும்வர்க்கத்தின் பக்கமே இவர்கள் நின்றார்கள்
என்பதை அறிய முடியும்.திருமாவின் துரோகத்தை
புதிய ஜனநாயகம் இதழில் எழுதாமல் விட்டுவிட்டு
இணையத்தில் மட்டும் எழுதும் உள் அரசியலும்
ஒன்றை தெளிவுபடுத்துகிறது.
இதழில் எழுதினால் இவர்களின் கீழ் இருக்கும் மக்கள்,
ஏன் வன்னியரசை எதிர்த்துப் போராடவில்லை என்று
கேள்வி எழுப்புவார்கள்.இவர்களின் வீரம் சந்தி
சிரித்து விடும்.இணையத்தில் எழுதினால் கேள்வி
எழுப்புபவர்களை இவர்களின் வழக்கமான திசை
திருப்பல்,முத்திரை குத்தல்,மன உளைச்சலுக்கு
உள்ளாக்கல் பாணி விவாத முறையில் ஏமாற்ற
முடியும் என்பதுதானே இவர்களின் திட்டம்.
இவர்கள்தான் இந்திய அரசை எதிர்த்து ஆயுதப்
புரட்சி செய்யப்போகிறவர்கள் என்றால் எதைக்
கொண்டு சிரிப்பது? இவர்கள் செய்யப்போகும்
இந்திய புரட்சியின் நிலைதான் இப்படி சந்தி
சிரிக்கிறது என்றால்,அரசு சாரா நிறுவனங்களின்
(N.G.O) தவப்புதல்வர்களான சில புலம்பெயர்
தமிழர்களைக் கொண்டும்,சில இலங்கை
மார்க்சியர்களைக் கொண்டும் இவர்கள்
செய்ய விரும்பும் இலங்கைப் புரட்சியின்
நிலையை நினைத்தால் மயக்கமே வருகிறது.
தேசிய இன உணர்வு இருந்தால் முல்லைத்தீவில் போர்
நடந்தபோது ஏன் யாழ்ப்பாணம் அமைதியாக இருந்தது
என்று ஒரு அடிமுட்டாள்தனமான கேள்வியை எழுப்பி
இருந்தார் சமீபத்தில் ஒரு விவாதத்தில் மக இக வை
சேர்ந்த ஒருவர்.அவர்களிடம் நாம் ஒரு கேள்வியை
கேட்க வேண்டி இருக்கிறது.முல்லைத்தீவில் போர்
நடந்தபோது உங்களின் தோழமைச்சக்திகளான,வர்க்க
அரசியலின் வாரிசுகளான இலங்கை மார்க்சியர்கள்,
புலிகள் கட்டுப்பாட்டில் இல்லாதிருந்த,கிழக்கு
பகுதியையும்,யாழ்ப்பாணத்தையும்,கொழும்பையும்
ஏன் அமைதியாகவே வைத்திருந்தனர் என்கிற
கேள்விக்கு பதில் என்ன? கருணாவை,டக்ளசை,
பேரினவாத சிங்கள அரசை எதிர்த்து,ஒரு
ஆர்பாட்டத்தைக் கூட நடத்த வக்கற்றவர்கள்,
சிங்களர்களோடு சேர்ந்து புரட்சி செய்ய போகிறார்கள்
என்றால் என்ன சொல்வது?
திருமாவைக் கண்டு மான் கராத்தே காட்டிய மக இக
வும், இலங்கை அரச பயங்கரவாதிகள் முன்னால்
செயலற்று நின்றவர்களும்,இந்திய புரட்சியையும்,
இலங்கை புரட்சியையும் நடத்துவோம் என்று
சொல்வதைக் கேட்டால்,முடியல முடியல என்று
வடிவேழுவின் இம்சை அரசன் வசனத்தைதான்
சொல்ல வேண்டி இருக்கிறது.மேலும் இங்கே
ஒரு விசயத்தையும் பதிவு செய்யத் தோன்றுகிறது.
1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இழந்து
வெளியேறிய புலிகள்,2002 ஆம் ஆண்டு போர்
நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின் யாழ்ப்பாணத்துக்கு
வந்து கூட்டம் நடத்தியபோது 60.000 ஆயிரம்
மக்கள் புலிகளின் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
இந்த நிகழ்வை வைத்தே சொல்லி விடலாம்.
தமிழர்கள் தங்களின் பாதுகாவலர்களாகவும்,
தங்களின் உரிமைகளுக்காக நேர்மையாக
போராடுபவர்களாகவும் புலிகளை மட்டுமே
ஏற்கிறார்கள் என்று.
சமீபத்தில் தோழர் விடுதலை இராசேந்திரன் இவர்களைப்
பற்றி எழுதிய கட்டுரையை படித்தபோதுதான் இவர்கள்
வழக்கமாகவே மான் கராத்தேகாரர்கள்தான் என்பது
புரிந்தது.மோடிக்கு எதிராக இவர்கள் நிகழ்த்திய
பாதுகாப்பான புரட்சி பற்றி படிக்கையில் புல்லரிப்பே
வந்துவிட்டது.ஒரு உண்மையும் கூட நினைவுக்கு
வந்தது.ஈழம் தொடர்பான போராட்டங்களில் மூன்று
பேரை சிறைக்கு அனுப்பிவிட்டு,ஆயிரக்கணக்கில்
எங்கள் தோழர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்று
கூசாமல் பொய் சொன்னவர்கள்தானே இவர்கள்.
ஈழத் துரோகிகளான திராவிட முன்னேற்ற கழகத்திடம்
இருந்து நன்கொடை பெற்றார்கள் என்று பெரியார்
திராவிடர் கழகத்தின் மேல் கடுமையான
விமர்சனம் வைத்திருந்தார்கள் சமீபத்தில்.
திமுக போலவே ஈழத் துரோகிகளான பாட்டாளி மக்கள்
கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளரையும்,
விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலப் பொதுச்
செயலாளரையும் தில்லைக்கோவில் தொடர்பான
கூட்டதில் மேடையேற்றியது மட்டும் புரட்சிகர
நடவடிக்கையோ?பெரியாரிய தோழர்களுக்கு எதிரான
பார்ப்பன வன்மம்தானே விமர்சனம் என்கிற பெயரில்
வந்து விழுந்திருக்கிறது.சூத்திரனுக்கு ஒரு நீதி,
பார்ப்பானுக்கு ஒரு நீதி என்கிற மனுதர்ம வாரிசுகள்
தங்களுக்கு ஒரு நீதியும்,மற்றவர்களுக்கு ஒரு
நீதியும் வைத்திருப்பார்கள் என்பது இயல்புதானே.
சோவியத் வீழ்ந்தால் அமெரிக்கச்சதி காரணம்,
புலிகள் வீழந்தால் மட்டும் அகக்காரணஙகள் என்பது
வரை இவர்களின் நீதி இப்படித்தான் இருக்கிறது.
திமுகவோடு சேர்ந்துதான் தமிழின ஓர்மையை
காப்பாற்ற முடியும் என்கிற பெரியார் திராவிடர்
கழகத்தின் கருத்தோடு நாம் உடன்பட முடியாது
என்பதையும் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.
இவர்களின் எழுத்துகளை தொடர்ந்து வாசித்துக்கொண்டு
இருப்பவர்களால் ஒரு விசயத்தை எளிதாக உணர
முடியும்.தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்துக்
கொண்டிருக்கும் தேசிய இன அடையாளம் பற்றிய
விழிப்புணர்வால் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டிருக்கும்
இயல்பான பதற்றத்தை அதிலும் காண முடியும்.
ராமதாஸ் போன்ற அப்பட்டமான ஓட்டுப்பொறுக்கி
அரசியல்வாதியை தமிழ்த்தேசியவாதியாக்கி,தலித்
மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக கவிதை
எழுதுகிறோம் என்ற பெயரில்,தமிழ் அடையாளத்தை
இழிவு செய்த பார்ப்பன குயுக்தி மூளையின்
திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
இன்றைக்கு அதே ராமதாசின் கட்சியை சேர்ந்தவரை
மேடையில் ஏற்றுகையில் மட்டும் தலித்துகள் மீதான
அக்கறை காணாமல் போய் விடுகிறதே ஏன்?
மேலும் இவர்கள் என்றைக்காவது இந்திய அரசு,
இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் தேசிய
இனங்கள் மீது நிகழ்த்தும் தாக்குதலை வைத்துக்
கொண்டு,இந்திய தேசியத்தின் மீதும்,இந்தியன்
என்கிற அடையாளத்தின் மீதும் சேறடிக்கிற
வேலை செய்திருக்கிறார்களா என்றால்,இல்லை
என்பதே பதிலாக இருக்கிறது.
அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.சுலபமாகச்
சொல்லி விடலாம்.இந்தியாவெங்கிலும் இருக்கிற
எல்லா தேசிய இன மக்களோடும் வசித்தாலும்,அந்த
மக்களில் இருந்து அந்நியப்பட்டவர்களாகவும்,அந்த
மக்களையே சாதி ஒடுக்குமுறையால் சுரண்டுபவர்
-களாகவும்,இந்தியா என்கிற கட்டமைப்பின் வழியாக
மட்டுமே தங்கள் மேலாதிக்கத்தை உறுதிபடுத்திக்
கொள்ள முடியும் என்கிற யதார்த்தத்திலும் இருக்கும்
பார்ப்பனர்கள் மணிரத்தினம் பட கதாநாயகன் போல
இந்தியப்பாசத்தில் பொங்குவது இயல்பான ஒன்றுதான்.
அந்த பார்ப்பன தேசிய பக்திக்கு எதிராக தேசிய இன
அடையாளம் பற்றிய விழிப்புணர்வு எங்கு எழுந்தாலும்
அதை சிறுமைப்படுத்துவதை,கம்யூனிஸ்ட் கட்சிகளில்
இருக்கும் பார்ப்பனர்கள் செய்துகொண்டுதான் உள்ளனர்.
இந்தியதேசியத்தாலும்,இந்திய அடையாளத்தாலும்,இந்திய
நிலப்பரப்பில் இருக்கும்,தேசிய இனங்கள் தங்கள்
அடையாளத்தை இழந்துகொண்டிருப்பதை எப்படி ஏற்க
முடியும் என்கிற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை
இந்த பார்ப்பன தேச புரட்சியாளர்களிடமிருந்து.விட்டால்
இந்திராகாந்தி சோசலிசம் என்கிற வார்த்தையை
அரசியல் சட்டதின் முகப்பில் சேர்த்துவிட்டார்.அதனால்
நாம் சோசலிச கட்டத்தில் இருந்து பொதுவுடைமை
கட்டத்துக்கு போய்க்கொண்டு இருக்கிறோம்.அதனால்
தேசிய இன மொழி,பண்பாட்டு அடையாள அழிப்பைப்
பற்றி கவலைப்படை தேவையில்லை என்று பதில்
சொன்னாலும் சொல்வார்கள்.மொத்தத்தில் இந்திய
தேசிய இனங்கள் தங்களின் தேசிய விடுதலைக்கான
போராட்டங்களை முன்னெடுப்பதும்,தங்கள் தேசிய
இன அடையாளங்கள் உறுதிபடுத்திக்கொள்வதுமே
இப்போதைக்கு தேவையாக இருக்கிறது.
இந்திய மாவோயிஸ்டுகளோடு இணைந்து நிறக வேண்டிய
தேவை வந்தாலும்,மீண்டும் இந்திய கட்டமைப்பில்
இணைய வேண்டி வந்தாலும் கூட தங்களின் தேசிய
அடையாளம் பற்றிய முழு விழிப்புணர்வு கொண்ட
தேசிய இனங்களால் மட்டுமே தங்களை காத்துக்
கொள்ள முடியும்.சாதியையும் மதத்தையும்
வைத்துக்கொண்டு என்னதான் பொதுவுடைமையக்
கொண்டு வந்தாலும்,அதிலும் பார்ப்பனர்கள் மததையும்
சாதியையும் கொண்டு வந்து தங்கள் மேலாதிக்கத்தை
நிலை நிறுத்திகொண்டு விடுவார்கள் என்கிற
பெரியாரின் எச்சரிக்கையை நினைவுபடுத்திக்கொள்ள
வேண்டி இருக்கிறது.இந்தியதேசியத்துக்கும்,இந்திய
அடையாளத்துக்கும் பார்பனியத்துக்கும் உள்ள
உறவை இயங்கியல் ரீதியாக புரிந்துகொண்டு,இந்திய
அடையாள நிராகரிப்போடு தேசிய இனங்கள்
இயங்குவது மட்டுமே சரியான விசயமாக இருக்க
முடியும்.
இந்திய வரலாற்றில் நிலவிய எல்லா அரசு வடிவங்களிலும்
தங்களின் மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்வதில் பார்ப்பன
சமூகம் காட்டி வந்திருக்கும் அதீத திறமையை வரலாறு
முழுக்க கண்டு வந்திருக்கிறோம் நாம்.சோசலிசத்தின்
பெயரால் இந்தியாவிலும் ஒரு அதிகாரவர்க்க ஆட்சி
நிறுவப்பட்டால் அதிலும் தங்களின் மேலாதிக்கத்தை
நிறுவிக்கொள்வதில் பார்ப்பனர்களுக்கு சிரமங்கள் இருக்க
போவதில்லை.அதே நேரம் மிகைப்படுத்தப்பட்ட
பார்ப்பன எதிர்ப்பையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டி
இருக்கிறது.பிறப்பின் அடிப்படையை வைத்து பார்ப்பனர்
என்று அவதூறு செய்யப்படும் கிஷன்ஜீயிடமிருந்தே
இந்திய இடதுசாரிகளிடம் இலகுவாக காண முடியாத
சோவியத் யூனியன் பற்றிய நேர்மையான விமர்சனங்கள்
வருகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது.
சோவியத் யூனியனில் அதிகாரவர்க்க ஆட்சியை
அமைக்க துணைபோனதாக லெனினையும்,அதிகார
வர்க்க ஆட்சியை அமைத்ததாக ஸ்டாலினையும்,
அவர் விமர்சித்திருப்பது.தங்கள் பிரதேசங்களில்
உருவாக்கி இருக்கும் மக்கள் புரட்சிகர கமிட்டிகளில்
ஜனநாயகபூர்வமான தேர்தல்களை நடத்துவது,நாங்களும்
தவறு செய்கிறவர்கள்தான் எங்களையும் எதிர்த்துப்போராட
கற்றுக்கொள்ளுங்கள் என்று மக்களுக்கு பயிற்றுவிப்பதை
எல்லாம் நாம் ஆரோக்கியமான முன்னெடுப்புகளாக
கருத முடியும்.
இவர்களின் பார்ப்பன வன்மத்துக்கு உதாரணமாக மேலும்
சில விசயங்களைப் பார்த்துவிட்டு இந்தப் பதிவை
முடித்துக் கொள்ளலாம்.ஜெயராம் பற்றிய கட்டுரையில்
காகிதப்புலி சீமானின் தம்பிகள் போலிஸ் பாதுகாப்போடு
ஜெயராம் வீட்டைத் தாக்கியதாக எழுதி இருக்கிறார்கள்.
இந்தக் காகிதப்புலிகள் முத்துக்குமார் விசயத்தில்,
வன்னியரசிடம் மான் கராத்தே காட்டி ஓடியது ஒரு
புறம் இருக்கட்டும்.தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும்
அவ்வப்போது தமிழக போலிசை சந்திருந்தால் கூட
தமிழகப் போலிசைப் பற்றி இவர்களுக்குத் தெரிந்து
இருக்கும்.அரசிடம் அனுமதி பெற்று நடத்தும்
ஆர்ப்பாட்டங்களைத் தவிர வேறு எதுவும் செய்யாத
புரட்சியாளர்களாயிற்றே இவர்கள்.சேலம் ரயில்வேக்
கோட்டம்,முல்லைப்பெரியாறு,ஈழத்தமிழர்களுக்கான
போராட்டங்கள் எதிலாவது கலந்துகொண்டிருந்தால்
தமிழக போலிசின் இந்தியப்பாசம் புரிந்திருக்கும்.
சேலம் கோட்ட பிரச்சணையாகட்டும்,முல்லைப்
பெரியாறு பிரச்சனையாகட்டும் கேரள முதலமைச்சர்,
மத்திய அமைச்சர் யாருடைய கொடும்பாவிகளையும்,
ஏன் சிங்கள ராஜபக்ஸேவின் கொடும்பாவியைக்கூட
எரிக்க விட்டதில்லை தமிழக போலிஸ்.தள்ளுமுள்ளு
நடந்த பிறகே எரிக்க முடியும்.அதே நேரம் தமிழக
அமைச்சர்களின் கொடும்பாவிகள் கேராளாவில்
போலிஸ் பாதுகாப்புடன் எரிக்கப்படுவதை தொலைக்
காட்சிகளில் நன்றாகவே பார்க்க முடிந்தது.அரச
விசுவாசத்திலும்,இந்திய விசுவாசத்திலும் நாயினும்
கீழான தமிழகபோலிஸ் சீமானின் தம்பிகளுக்கு
பாதுகாப்பு கொடுத்தது என்று எழத புறநானூற்று
வீரம் தேவையில்லை பார்ப்பன சாணக்கியனின்
குயுக்தியே போதும் .
மலையாளிகள் தமிழனது உருவத்தையும் வடிவத்தையும்
கேலி செய்வதற்க்கும்,தமிழர்கள் மலையாளிகளின்
ஆளுமையையும் பண்பையும் கேலி செய்வதற்கும்
பாரிய வேறுபாட்டை கண்டு பிடித்திருக்கிறார்கள்
முன்னது நகைச்சுவையாம்,பின்னது காழ்ப்புணர்வாம்.
எது நகைச்சுவை? தமிழர்களை சுத்தமற்றவர்களாக,
பிச்சை எடுப்பவர்களாக சித்தரிப்பது நகைசுவையா?
உருவத்திலும் வடிவத்திலும் தமிழர்களுக்கும்,
மலையாளிகலுக்கும்,என்ன வேறுபாடு உள்ளது.
நிறம்தான் வேறுபடும்.நிறத்தை வைத்துதான்
தமிழர்களை இழிவு செய்கிறார்கள் என்பதுதானே
உண்மை.அதை சொல்வதில் இருந்து எது
இவர்களைத் தடுக்கிறது.நிறத்தின் அடிப்படையிலும்
சுத்தத்தின் அடிப்படையிலும்,தீண்டத்தகாத மனநிலை
கொண்டு தமிழர்களை இழிவு செய்வதை,மலையாள
சமூகம் பார்ப்பன அடிமைத்தனத்தில் இருந்து
விடுபடாதன் நீட்சியாகப் பார்ப்பதுதானே சரியாக
இருக்க முடியும்.அதை வெறுமனே நகைச்சுவை
என்று எழுதி தங்களின் பார்ப்பன விசுவாசத்தை
காட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்தப்
புரட்ச்ச்ச்ச்யாளர்கள் என்பதுதான் உண்மை.
மேலும் தமிழர்களை கிண்டல் செய்வார்களாம்,
சித்தரிப்பார்களாம் என்று எதற்கெடுத்தாலும்
ளாம் போடுகிறார்கள்.ஏன் எதையும் அவர்கள்
செய்வதே இல்லையா? கிண்டல் செய்கிறார்கள்,
சித்தரிக்கிறார்கள் என்று கூட எழுத மறுக்கும்
இவர்கள்.அவற்றை வாதத்துக்காக உண்மையென்று
வைத்துக்கொண்டாலும் என்று எழுதி இருக்கிறார்கள்.
எந்த அளவுக்கு தமிழர்களை மடையர்களாக
பார்ப்பன குயுக்தி மூளை கருதுகிறது என்பதற்கு
இதுவே சாட்சியாகும்.ஜெயராம் பிரச்சனையில்
மிகச்சரியான நிலைப்பாடு ஏற்கனவே தமிழக
அரசியல் வழியாக சமூகத்தில் பரவலாககொண்டு
செல்லப்பட்டுவிட்டது என்பதால் இத்தோடு
நிறுத்திக்கொள்ளலாம்.
மற்றபடி தமிழ்த்தேசியர்களாக இவர்களே ஒரு பட்டியலை
வைத்துக்கொண்டு அவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை
இவர்கள் ஏன் இதை செய்யவில்லை என்றெல்லாம்
கேட்பதற்கு நம்மிடம் ஒரே பதில்தான் இருக்கிறது.
மார்க்சியம் பேசுவதாலேயே மக இக வினர் மார்க்சியர்
ஆகிவிட முடியாது என்பது எத்தகைய உண்மையோ,
அத்தகைய உண்மைதான் தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள்
எல்லோரும் தமிழ்த்தேசியவாதிகள் ஆக முடியாது
பலமுறை இவர்களை விமர்சித்தாகிவிட்டது,புரட்சிகர
அரசியல்,ஈழம்,இடஒதுக்கீடு,எல்லாவற்றிலும்
இவர்கள் அம்பலப்பட்டு போயிருக்கிறார்கள்
என்பதால் மீண்டும் அதிகம் கிளற வேண்டியதில்லை.
தேனொழுகும் வார்த்தைகளில் இந்திய தேசிய
இனங்களின் பாட்டாளிவர்க்க ஒருங்கிணைவு
பேசினாலும்,அதன் உள்ளடக்கமாக பார்ப்பன
ஒருங்கினைவும்,மேலாதிக்கமும் நிலை
நிறுத்தப்படும் என்பதாலேயே எழுத்தாளர் ஞாநி
போன்றவர்கள் இவர்களை பாராட்டுகிறார்கள்
என்பதே போதும் இவர்களின் அரசியல்
யாருக்கானது என்பதை உணர்த்த.
Tuesday, February 23, 2010
புரட்சிக்குள் ஒளியும் பார்ப்பன தேசிய பக்தர்கள்

Subscribe to:
Comments (Atom)