Saturday, October 18, 2008

தொடரும் இந்திய அரசின் துரோகம்

இன்று தமிழீழ் மக்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சிகளின் கூட்டம்,மத்திய அரசுக்கு எச்சரிக்கை என்பனவெல்லாம் நடைபெற நாம் எவ்வளவு பெரிய விலைகளை கொடுத்துள்ளோம் தெரியுமா தமிழர்களே ?சிங்கள வெறிப்படையாள நமது அன்புக்குரிய தமிழக மீனவர்கள் 800பேர் கொல்லப்பட்டுள்ளனர்.15,000 மீனவர்கள் சிறைபிடித்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். மனித தனமைய்ற தாக்குதலாலும் 500 முறை துப்பாக்கி சூடு நடத்தியதாலும் இதுவரை 2000 - த்துக்கும் அதிகமான நமது மீனவர்கள் உழைத்து வாழ முடியாத அளவு ஊனமாக்கப்பட்டுள்ளனர்.

2-7-08 அன்று நமது கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நமது மீனவர்களை சிங்கள வெறிப்படை சுற்றி வளைத்து சிறைபிடித்தது. கை கால்களை கட்டி தலைமன்னாரில் உள்ள இராணுவ முகாமில் அடைத்தது. மழையானாலும் புயலானாலும் கடலோடு போராடி உயிர் வாழும் நமது மானமிக்க மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தது. இராக்கில் அமெரிக்க காட்டுமிராண்டிப் படைகள் செய்தது போன்ற இந்த இழி செயலை கண்டித்து இந்திய அரசு என்ன செய்தது.?அமெரிக்காவின் கொள்ளைக்காக அழிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் அடியாள வேலை செய்யும் இந்திய பொறியாளர்கள் கொல்லப்பட்டபோது கொதித்தெழுந்த இந்திய அரசு நமது தமிழக மீனவர்களை காக்க என்ன செய்தது. ?
படுபாதகம் செய்யும் சிங்கள வெறிப்படைக்கு வெகுமானங்களை வாரி வழங்கியது. 1500 கோடி நிதி உதவியையும்,பல கோடி மதிப்புள்ள நவீன ஆயுதங்களையும் அள்ளிக்கொடுத்ததொடு தேர்ந்தெடுக்கப்பட்ட 265 இராணுவ வல்லுனர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தது இந்திய அரசு.இந்தியாவின் பண உதவி,படை உதவி,ஆயுத உதவியுடன்தான் இன்று ஈழ் தமிழ் மக்களையும் தமிழக மீனவர்களையும் கொன்று குவிக்கிறது சிங்கள வெறிப்படை.இந்தியாவின் கூட்டாளியாக இருந்து கொண்டுதான நமது மீனவர்களை சுட்டுக் கொல்கிறது சிங்கள வெறிப்படை.

இந்திய அரசின் தமிழின விரோத நடவடிக்கைக்கு காரணம் என்ன ?சிங்கள வெறிப்படைக்கு தமிழினத்தை பலிகொடுத்து கொண்டிருப்பதன் பின்னணி என்ன ?இந்தியாவின் இராணுவ கொள்கையும்,வெளிநாட்டு கொள்கையும்,அதன் பொருளாதார கொள்கையோடு பின்னி பிணைந்தது.இந்திய பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் தரகு முதலாளிகளின் லாபத்தை அடிப்படையாக கொண்டது. மனிதகுலத்தின் எதிரியான உலக மேலாதிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கொள்ளைக்காக உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்க துடிப்பதை போலத்தான் தெற்காசிய பேட்டை ரவுடியான இந்தியாவும் தனது அருகிலுள்ள சின்னஞ்சிறு நாடுகளை தன் பிடிக்குள் வைத்துக்கொள்ள துடிக்கிறது. இந்தியா இத்தனை காலமும் நேபாளத்தை கேள்விகேட்க்க நாதியின்றி சுரண்டியது,இன்னமும் பூடான்.சிக்கிம்,வங்க தேசம் போன்ற நாடுகளை தனது வேட்டைக்காடாக கொண்டுள்ளது. இதை போலத்தான் இலங்கையையும் தனது சுரண்டல் கரங்களால் சுற்றி வளைத்துள்ளது.

இலங்கையின் மொத்த வருமானமும் அந்நாட்டின் சுற்றுலாதுறையையும்,பெருந்தோட்ட தொழில்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இவை இரண்டிலும் இந்திய தரகு முதலாளிகளே ஏகபோக சக்ரவர்த்திகளாக உள்ளனர். தவிர இலங்கையில் பெட்டிக்கடையில் விற்கப்படும் தீப்பெட்டி முதல் தொலைக்காட்சி பெட்டி வரையும்,மோட்டார் சைக்கிள்,கார்,கனரக வாகனம் என அனைத்து பயன்பாட்டு பொருட்க்களையும் விற்று கொள்ளையடிக்கிறார்கள் இந்திய முதலாளிகள். கூடவே இன்று போரின் நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு உணவு பொருட்க்கள் முதல் உயிர் காக்கும் மருந்துப் பொருட்க்கள் என அணைத்தையும் பன்மடங்கு விலை ஏற்றி விறபதன் மூலம் கொழுத்த லாபமடைகிறார்கள் இந்திய முதலாளிகள்.

இந்தியாவின் இத்துணை கொள்ளைக்கும் துணையாக உள்ளது இலங்கையின் சிங்கள வெறி அரசு. அமெரிக்காவின் கொள்ளைக்கு துணை போவதன் மூலம் அம்பானிகள் கொழுப்பதை போல இந்தியாவின் கொள்ளைக்கு துணையாக நின்று லாபமடைகின்றனர் சிங்கள முதலாளிகள். இந்த கொள்ளையை மூடி மறைப்பதற்காகத்தான் சிங்கள மக்களிடம் பேரினவாத வெறி ஊட்டி வளர்க்கப்படுகிறது. ஈழதமிழர்களுக்கு கல்வி,வேலை வாய்ப்பு கிடைக்காமல் செய்து அனைத்தும் சிங்களவர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது.வங்கி கடன் முதல் வணிகம் வரைக்கும் சிங்களவர்க்கே என ஒதுக்கப்படுகிறது. ஈழத்தமிழர்களின் நிலங்கள் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு சிங்களர்களுக்கே வழங்கப்படுகிறது. சிங்களர்கள் வாழ வேண்டும் என்றால் ஈழத்தமிழர்கள் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

சிங்களவர்கள் இடையே விதைக்கப்பட்ட இந்த வெறிதான் இந்திய சிங்கள முதலாளிகளின் கொள்ளைக்கான அடித்தளம்.இந்த வெறி அணையாமல் பாதுகாப்பதில்தான் இந்திய சிங்கள ஆளும் வர்க்கங்களின் லாபம் குடி கொண்டுள்ளது இதற்காகத்தான் சிங்கள வெறிப்படைக்கு இந்திய அரசு பணத்தையும்,படையையும் கருவிகளையும் வாரி வழங்குகிறது. இந்திய முதலாளிகளின் லாப வெறிக்காக சிங்கள வெறியர்களோடு கூட்டு சேர்ந்து தமிழினத்தை கொன்று குவிக்கும் இந்திய அரசு இலங்கையில் அமைதியை நிலை நாட்டுமா ? ஈழ் தமிழினத்தை பாதுகாக்குமா ? இந்தியா இதுவரை செய்ததை எல்லாம் மறக்கலாமா ?

விடுதலை புலிகளின் முன்னணி போராளியான தளபதி கிட்டுவை நடுக்கடலில் சுற்றி வளைத்து கொன்றது இந்திய அரசு. விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளான குமரப்பா,புலேந்திரன் உட்பட 12 பேரை சிங்கள வெறிப்படையிடம் ஒப்படைத்து கொலை செய்ய வைத்தது இந்திய அரசு. 1987 இல் அமைதிப்படை என்கிற பேரில் 6000 ஆயிரம் ஈழத்தமிழர்களை கொன்றொழித்தது இந்திய அரசு. பல ஆயிரம் ஈழ் தமிழ் பெண்களை மானபங்கம் செய்தது இந்திய அரசு.இதற்கு மேலும் இந்திய அரசு அமைதி நடவடிக்கை என்கிற பெயரில் ஈழத்தை சூறையாட அனுமதிக்கலாமா?

இன்று ஈழத்தமிழர்க்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்ப்பட்டுள்ள வீரமிக்க எழுச்சிக்கு முன்னால் எதுவும் செய்ய முடியாமல் மண்டியிட்டுள்ள அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன.மத்திய அரசின் ஆயுட்க்காலம் முடியும் தருணத்தில் எம்பிக்கள் பதவி விளக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கின்றன. கூடவே இந்திய அரசு தலையிட்டு அமைதி தீர்வை நிலைநாட்ட வேண்டும் என ஈழ விடுதலைக்கு குந்தகம் விளைவிக்கின்றன. இந்தியாவிடம் அப்படி என்ன அமைதி தீர்வு உள்ளது. இறுதிக்கும் இறுதியாக இந்தியா முன் வைப்பது ஈழத்தமிழர்களும் சிங்கள வெறியர்களும் இணைந்திருக்கும் ஒற்றை ஆட்சியே !! ஈழத்தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லாத மாநில தகுதியே! இதற்கு ஈழ தமிழர்கள் தங்களின் உரிமை போராட்டத்தை கை விட்டு அடிமைகாளாக அடங்கி போவதே !இதற்காகவா ஈழ தமிழ் மக்கள் ஆண்டுகாலமாக போராடுகிறார்கள்? பல இலட்சம பேரை பலிகொடுத்திருக்கிறார்கள் ?எனவே ஈழ் ஆதரவு என்கிற பெயரில் நடக்கும் சதியினை முறியடித்து தனி தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு என்று தாயக தமிழர்கள் உறுதியாக குரல் எழுப்புவோம்

5 comments:

ஸ்டாலின் குரு said...

ஆர்குட்டில் விவாதம் வேண்டி அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கும் அன்பர்களுக்காக இந்த தலைப்பு :)))))

bagat said...
This comment has been removed by the author.
bagat said...

உங்களுடன் விவாதிக்க வேண்டும் ஸ்டாலின் குரு அவர்களே
விவாதத்தை துவங்கலாமா ?
உங்களுடைய தளத்திலேயே விவாதிக்கலாமா ?
உங்க‌ளுடைய விருப்பப்படியே பதிலுக்கு காத்திருக்கிறோம்.

சர்வதேசவாதிகள் said...
This comment has been removed by the author.
சர்வதேசவாதிகள் said...
This comment has been removed by the author.