Wednesday, March 5, 2008

சாளரபட்டியில் சாதி வெறியாட்டம்

சாளரபட்டியில் சாதி வெறியாட்டம்
திட்டமிட்டே தூண்டப்படும் சாதிவெறி தாக்குதல்களால் கோவை ஈரோடு மாவட்டங்கள் போர்க்களமாக மாறிக் கொண்டிருக்கின்றன.
ஈரோடு நம்பியூரில் மண்டபத்தை வாடகைக்கு கேட்ட அருந்ததிய தோழர் மாரியப்பனை சாதியை சொல்லி விரட்டி அடித்தது ஆதிக்க சாதி வெறி கூட்டம்.
பாதிக்கபட்ட தாழ்த்தபட்டோர் மீது வழக்குகள் போட்டும் ,ஊருக்குள் நுழைய தடைவிதித்தும் ஆதிக்க சாதியினருக்கு துணை நின்றது காவல்துறை.உண்மையை மக்களிடம் கொண்டு செலல முயன்ற தாழ்த்தபட்டோருக்கு தடைவிதித்தும்.சாதிவெறியர்களின் கடையடைப்பு - ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கியும் துரோகம் இழைத்தது அரசு நிர்வாகம்.
கோவை சட்டகல்லூரியில் தாழத்தபட்ட மாணவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்துகிறது.சாதி வெறிபடை தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மதியழகன் மீதே வழக்கு போட்டது காவல்துறை.சமரச பேச்சு நாடகம் ஆடி பூசி மெழுகியது கல்லூரி நிர்வாகம்.
கோவை சட்டகல்லூரியில் தாழத்தபட்ட மாணவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்துகிறது.சாதி வெறிபடை தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மதியழகன் மீதே வழக்கு போட்டது காவல்துறை.சமரச பேச்சு நாடகம் ஆடி பூசி மெழுகியது கல்லூரி நிர்வாகம்.
பற்றிய நெருப்பு படர்ந்து மற்றுமொரு சாதி பேயாட்டம் உடுமலை - சாளரப்பட்டியில் நடந்துவிட்டது.இன்னமும் நீடிக்கும் இரட்டைகுவளை முறையை நீக்ககோரியும்,ஆன்டவனை கும்பிட கோவிலுக்குல்லும்- அரசுக்கு சொந்தமான சமுதாய கூடத்துக்குள்ளும் தங்களை அனுமதிக்க கோரியும் வட்டாச்சியரிடம் மனு கொடுத்தனர் அருந்ததிய மக்கள்.
வன்னிய ஆண்டைகளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.தங்களின் சாதிகார ஏழைகளை எல்லாம் வெறியேற்றி தூண்டிவிட்டனா.அருந்ததிய மக்களின் குடிசைகள் அணைத்தும் உடைத்துகொளுத்தபட்டன.5 வயது பாலகன் விக்னேசு முதல் 80 வயது பாட்டி வரை எல்லோரும் அடித்து நொறுக்கப்பட்டனர்.
குறைந்தபட்ச மனிதநேயத்தோடு ஒரு குவளை முறையை நடைமுறைப்படுத்திய மேல்சாதிகாரரின் கடையும் நொறுக்கப்பட்டு அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டது.

இவை அணைத்துக்கும் மேலாக அருந்ததிய மக்களுக்கு பால்.தண்ணீர்.மளிகை பொருள் எதையும் தரக்கூடாது என்றும் த்டைவிதித்து அம்மக்களின் வாழும் உரிமையையும் பறித்துவிட்டனர் சாதி வெறி பிடித்த பயங்கரவாதிகள்.
தேர்ந்தெடுத்த வன்முறை தாக்குதலாலும்.திட்டமிட்ட சதிசெயல்களாலும் சாதியகொடுமைகளை நிகழ்த்தும் குற்றவாளிகளை தண்டிக்காமல் பாதிக்கபட்டவர்களுக்கு எந்த உதவியும் வெளியில் இருந்து கிடைக்காமல் தடுத்தது அரசு.உதவிட ஓடிவந்த தாழ்த்தபட்ட மக்களின் தலைவர்கள் 10 பேரை கைது செய்து சிறையிலடைத்தது காவல்துறை.
மறைமுகமாக காவல்துறையும் - அரசும் துணையிருப்பது போதாது என்றும் தங்களின் வெறியாட்டத்துக்கு ஆதரவாக வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் காட்டுகூச்சல் போடுகின்றனர் சாதி ஆதிக்க வெறியர்கள்
ஏன் இந்த வெறியாட்டம் ?எதற்காக அரசு துணை போகிறது?

குமுறிகொண்டிருந்த தமிழ்தேச மக்களின் இன மான் உணர்வு எரிமலையாய் இன்று வெளிவர தொடங்கி இந்திய - தமிழக அரசுகளை அச்சுறுத்துகிறது.ஈழத்தமிழர்களுக்கு உத்வுவது இந்தியாவுக்கு செய்யும் துரோகம் என்னும் பூச்சாண்டி மிரட்டல்களை எல்லாம் தமிழர்கள் காலில்போட்டு மிதித்து நசுக்க தொடங்கிவிட்டனர்.நதிநீர் சிக்கலானாலும்,கச்சதீவு உரிமை மீட்பு போராட்டமானாலும் தமிழர்கள் ஒன்று திரள தொடங்கி விட்டனர்.இராமன் பாலம் போன்ற மத மாயைகளை உடைத்து தமிழர்களின் பகுத்தறிவு பயணம் தொடங்கிவிட்டது.
இத்தணை உணர்வுகளுக்கும்.இதற்கான போராட்டங்களுக்கும் முக்கிய காரணமானவர்கள் தாழ்த்தபட்ட மக்களே.மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களோடு களம் காண்பவர்கள் சட்டகல்லூரி மாணவர்களே.
தமிழ்தேசம்.தன்மானம்,என்ற உணர்வுகளை வளரவிட்டால் இந்திய சிறைசாலை இருக்குமா?தமிழக மண்ணையும் மக்களையும் கொள்ளை அடிக்க முடியுமா?அரசும்.அரசியல்வாதிகலும் கொழுத்து திரிய முடியுமா?
என்ன செயலாம் என்று திகைத்து நின்ற இவர்களை சாதி வெறி ஆதிக்கவாதிகள் காப்பாற்ற தொடங்கியுள்ளனர்.

சாதிவெறி ஆதிக்கவாதிகள் ஏன் பேயாட்டம் போடுகின்றனர்?
நிலங்களை வைத்துகொண்டு,வேளாண் தொழிலை அடிப்படையாககொண்ட இவர்களின் கொட்டம் இன்று ஆட்டம் காண தொடங்கிவிட்டது.பன்னாட்டு விதை,உரம்.பூச்சி மருந்து கொள்ளையாலும்.ரிலயன்ஸ் ஃப்ரெஷ் போன்ற காய்கறி வணிகத்தில் கால்பதித்த கொள்ளையர்களாலும் இவர்களின் பண்ணையார்த்தனம் சவப்பெட்டிக்கு அனுப்பப்படுகிறது.
இன்னொருபுறம் பனியன் மற்றும் விசைத்தறி தொழில்சார்ந்த வேலை வாய்ப்புகளை நோக்கி தாழ்த்தபட்ட மக்கள் பண்ணைகளில் இருந்து வெளியேறிகொண்டிருக்கின்றனர்.இதனால் சாதி ஆதிக்கவாதிகள் தங்களின் சுகபோக வாழ்வும் சுரண்டலும் பறிபோவதை கண்டு பதறி துடிக்கிறார்கள்.
நெடிய போராட்டத்தின் மூலம் பெற்ற குறைந்தபட்ச கல்வி மற்றும் சீர்த்திருத்த வாய்ப்புகளால் தாழ்த்தபட்ட மக்கள் விழிப்படைந்து தங்களுக்குல் அமைப்பாக தொடங்கியுள்ளனர்.இதனால் மக்கள் விரோதிகளான ஓட்டுபொறுக்கி கட்சிகளின் ஆயுள் எண்ணப்படுகிறது
எனவே சாதிவெறி ஆதிக்கவாதிகளும்,ஓட்டுபொறுக்கி கட்சிகளுக்ம் சேர்ந்துகொண்டு தாழ்த்தபட்ட மக்கள் மீது போர் தொடுக்கின்றன.நம்பியூரில் அருந்ததிய மக்களுக்கு எதிராக சாதி ஆதிக்கவாதிகளோடு தி.மு.க அ.தி.மு.க காங்கிரசு,பா.ம.க,தே.மு.தி.க,கொங்கு பேரவை என அணைத்து கட்சிகளும் கூட்டு சேர்ந்து ஆட்டம் போட்டன.மக்கள் சாதிசண்டையில் சிக்கிகொள்வது ஆளும்வர்க்க கொள்ளைக்கு வசதியாக இருப்பதால் அரசும்.காவல் துறையும் சாதி வெறியர்களுக்கு தூபம் போடுகிறது.

சாதி வெறியாட்டட்தில் ஈடுபடும் உயர்சாதி உழைக்கும் மக்களே
உயர்சாதி திமிர் உங்கள் கண்ணை மறைப்பது தெரியவில்லையா?உங்களின் வாழ்க்கையை பறித்தவர்களுக்கு நீங்களே அடியாள் படையாக இருப்பது வெட்க்ககேடு இல்லையா?
உங்களின் வேளாண் தொழிலும்.சிறு தொழிலும் அழிந்து நீங்கள் பஞ்சைபராரியாக மாற யார் காரணம்?உங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்காமல் கல்வியை விலை பேசுவது யார் ?இட ஒதுக்கீடு தடுக்கப்படுவது எப்படி?
உலகமயமாக்கல் என்ற பெயரில் நமது வளங்கள் கொள்ளை போகின்றன.அதன் வேலை வாய்ப்புகளையும்.வசதிகளையும் பார்ப்பன -உயர்சாதி பணக்காரர்கள் பங்குபோட்டுகொள்கின்றனர்.
இதை அறியாமல் நீங்களோ சாதி திமிரால் உங்களின் பிள்ளைகளுக்கு பிறக்கும்போதே கல்லறைகளை சம்பாதித்து தருகிறீர்கள்.

ஆனால் தாழ்த்தபட்ட மக்கள் உங்களுக்கும் சேர்த்து இட ஒதுக்கீட்டுக்காக போராடுகிறார்கள்.
சாதிய கொடுமைகளை எதிர்ப்பதன் மூலம் உங்களை நாகரீக மனிதர்களாக மாற்றுகிறார்கள்.
இந்த மண்ணையும் மக்களையும் காக்கும் போராட்டங்களில் முன்னனியில் இருக்கிறார்கள்.
ஆதிக்க சாதி உழைக்கும் மக்களே
உயர்சாதி திமிரை ஒழிப்போம்
சாதிவெறி ஆதிக்கவாதிகளை புறக்கணிப்போம்
தாழ்த்தபட்ட தமிழரோடு உழைக்கும் தமிழராய் ஒன்றினைவோம்
அரசு மற்றும் ஆதிக்கசாதிவாதிகளின் சதியை முறியடித்து
புரட்சி தமிழ்தேசம் படைப்போம்

புரட்சிகர இளைஞர் முன்னனி - கோவை

1 comment:

மோதிப்பார் said...

எங்களுக்கு ஒரு கவிதை தான் நியாபகம் வருகிறது

பள்ளரென்றும் பறையரென்றும்
பாகுபாடு தந்துவிட்டு
ஆதிமுதல் சாதி காட்டி
அல்லல் எமக்குத் தந்ததென்ன?

பிரம்மனவன் யோனிவழி
பிறந்தவர்கள் நாமென்றால்
பிரம்மனவன் பிறப்பின்வழியும்
எதுவென்றே நீர் கூறுவீரோ?

எம் உழைப்பில் காணா தீட்டை நீயும்
உறவில் மட்டும் உணர்வதென்ன? - நாம்
உழைத்துக் கொடுத்த காசு சுத்தம்!
உழைப்போர் என்றும் அசுத்தமா?

சூத்திரரும் வந்து சென்றால் வீட்டு
வாசல் திண்ணைதனை மாட்டு
மூத்திரத்தால் கழுவிடும் நீ - உம்
மனதை என்று சுத்தம் செய்வாய்