Sunday, December 30, 2007

எரியும் பனிக்காடு நாவல் முன்வைக்கும் அரசியல் ஒரு பார்வை

சாதீ ....... மண்ணை பொன்னாக்கும் மாய வித்தைகாரன் உழைப்பாளி.அவனின் குருதியை குடித்துகொலுக்க உருவாக்கப்பட்டது கொடுஞ்சாதி.அடித்தும் உதைத்தும் - எரித்தும் கொலை செய்து,பெண்களை மானபங்கபடுத்தி அடிமைத்தனத்தை நிலைனிறுத்துகிறது உயர்சாதி.இவ்வகையான அச்சுறுத்தல்கள்,அழிவு நடவடிக்கைகள் மீது அமர்ந்துகொன்டு கொள்ளையடிக்கிறான் பண்ணை - முதலாளிஆகவேதான் இங்கு சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான வர்க்க போராட்டமானது சாதி ஒழிப்பு போராட்டத்திலிருந்து தவிர்க்கமுடியாதது என்பதை வலியுறுத்துகிறது வரலாறு.தமிழ்தேச வரலாற்றில் அழியாத வலியாக நிளைத்திருக்கிறது வெண்மனி சம்பவம்,சாணிபால் சவுக்கடி மூலம் தங்களின் மனித மாண்பை மறுத்து உழைப்பை சுரண்டிய தஞ்சை பண்ணைகளுக்கு எதிராக தடந்தோள் உயர்த்தினர் தாழ்த்தப்பட்ட மக்கள் சினந்து செங்கொடியின் கீழ் அணிதிரண்ட மக்களை ஒடுக்க சதிதிட்டம் தீட்டியது பண்ணை கூட்டம்.இந்த ஓநாய்கூட்டத்தில் ஒருவனான கோபாலகிருட்டின நாயுடு 1968 திசம்பர் 25 இல் அப் படுபாதக செயலை செய்து முடித்தான்.உரிமைக்காக போராடிய தாழ்த்தப்பட்ட மக்களில் பிள்ளைகள் பெண்கள் ஆண்கள் என 44 பேரை ஒரு குடிசையில் அடைத்து உயிரோடு எரித்தான்.ஆண்டுகள் 40 ஆகிறது சாதிய கொடுமை தடையின்றி மேலவளவு பாப்பாபட்டி,கீரிப்பட்டி நாட்டார்மங்கலம்,கண்டதேவி,திண்ணியம்,செகுடந்தாழி.காளப்பட்டி ....... என தொடர்ந்து தலை விரித்தாடுகிறது.பட்டியலிடப்படும் இவ்வரலாற்று பதிவுகளை காட்டிலும் வெளிவராது புதைந்து கிட்டப்பவை ஏராளம்.அவற்றில் ஒன்றைத்தான் தோண்டி எடுத்து நமக்கு வழங்குகிறது எரியும் பனிக்காடு நாவல்

குறையா வளமுடைய நமது பெருங்காடுகளை அழித்து வெள்ளையனின் கொள்ளைக்காக உருவாக்கப்பட்டவை தேயிலை தோட்டங்கள்.மலைக்காடுகலில் கொடிய மிருகங்கலுக்கும்,நச்சு நோய்கலுக்கும் இலட்ச்சக்கனக்கானவர்களை பலிகொடுத்து உருவாக்கபட்டவைகள்தான் இன்றைய எஸ்ட்டேட்டுகள்.பலியிடப்பட்டவர்களில் பெரும்பானமையோர் தாழ்தப்பட்ட மக்கள்.அமெரிக்காவின் இயற்கையை சூறையாட கருப்பின மக்களை அடிமையாக கொன்டு சென்றதை போல் வெள்ளையர்கள் இங்கு தாழ்த்தப்பட்ட மக்களையும் ஏழைகளையும் அடிமையாக்கி எஸ்ட்டேட்டுகளை உருவாக்கினர்,தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா மலேசியா,சிங்கப்பூர்,இலங்கை மொரீசியஸ் என உலகின் பலநாடுகலுக்க்ம் தமிழ்நாட்டு மக்கள் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.சங்கிலி தொடராக நீளும் வரலாற்றின் ஒரு முனையை நம் கையில் கொண்டு வந்து தருகிறது நாவல்.வால்பாறை எஸ்ட்டேட்டுகளில் நடைபெற்ற அடிமைமுறை கொடுமைகள் நம்மை நடுங்க செய்கின்றன.வெள்ளைத்தோல் திமிரோடு ஆங்கிலேய ஆண்டைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது புரிந்த வண்புனர்சிகலும் வன்கொடுமைகலும் நம்மை பதைபதைக்க வைக்கின்றன.நூல் நேரடியாக சொல்வதை காட்டிலும் அதிகமாக நம்மை சிந்திக்க தூண்டுகிறது.ஈராயிரம் ஆண்டுகலுக்கும் மேலாக பார்ப்பனிய சாதி அடிமை தளையை தகற்பதற்க்கான வழியை திறந்து வைத்தது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் என்கிற மதிப்பீட்டில் இடியாய் இறங்குகிறது இவ்வரலாற்று உண்மை.ஆங்கில ஏகாதிபத்தியம் தனது கொள்ளை அதிகாரத்திற்கான படை மற்றும் அரசு துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய மக்களை கடைநிலை பணிகளில் அமர்த்திவிட்டு எண்ணிலடங்கா மக்களை நாடற்றவர்களாகவும் நாதியற்றவர்களாகவும் மாற்றி அடிமைகளாக ஆக்கியதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.


வெள்ளை ஏகாதிபத்தியம் புகுத்திய தொழில்துறையும் அதன் சீர்திருத்த நடவடிக்கையும் சரி இன்றைய உலகமயமாக்கலின் விளைவுகளான தரகு உற்பத்தி முறையும் சரி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவையோ விடுதலையையோ வழங்கவில்லை மாறாக சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் அவல நிலையைதான் உருவாக்கியுள்ளது.கதையின் களமான வால்பாறை எஸ்ட்டேட்டுகளிலிருந்து ஆயிரக்கனக்கான குடும்பங்கள் வேலை பறிக்கப்பட்டு வெளியேற்றப்படுவது இன்றைய தொடர் கதையாகி உள்ளது.பணமுதலைகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்கலுக்காகவும் வேளான் மண்டலங்கலுக்காகவும் நகரங்கள் நவீனமயமாக்கலுக்கும் - கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் வளமான பகுதிகளிலிருந்தும் விரட்டியடிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.மறுப்பவர்களும்,போராடுபவர்களும் கொலை செய்யப்படுவது சாதாரணமாகிவிட்டது.பாதிக்கப்படுவோரில் முதல் இடத்தில் இருப்பது தாழ்த்தப்பட்ட மக்களே,தொடரும் இச்சாதிகொடுமைகளை இல்லாதொழிப்பது எப்படி? இந்தியா முழுவதும் சாதிகள் உள்ளன ஆனாலும் இந்தியா எங்குமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஓரணியில் திரட்ட முடியுமா?இதோ கர்நாடகாவிலும் மகாராட்டிரத்திலும் தமிழர்கள் என்ற வகையில் தாகுதளுக்குள்ளாவோரில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட மக்களே,இவர்களை தாகுகிறவர்களில் பெரும்பாலோர் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களே,பிழைப்புக்காக அசாமுக்கு சென்ற தாழ்த்தப்பட்ட மக்களை கொல்வதும் அசாமின் பழங்குடி மக்களே

ஏன்? ஏனென்றால் ஒவ்வொரு மொழி வழி தேசிய இனத்திலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் அதனடிப்படையிலான உழைப்பு சுரண்டலையும் எதிர்த்து தங்களின் சொந்த ஆதிக்க சக்திகலுக்கு எதிராக போராடுகிறார்கள்.இப்போராட்டம் கூலி உயர்வு போராட்டமாகவோ,அரசியல் போராட்டமாகவோ,ஆயுத போராட்டமாகவோ இருக்கலாம் ஆனால் வெளிபகுதியிலிருந்து உழைக்கும் மக்கள் இங்கு உள்நுழையும்போது நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது.தமிழ்நாட்டில் சாதி சமூக கொடுமைகலுக்கு உள்ளாகும் உழைக்கும் மக்களுக்கு திருப்பூர் போன்ற தொழில்நகரங்கள் வடிகாலாக உள்ளது.ஆனால் பிழைப்பு தேடி வரும் பிற தேசிய இன மக்களின் வரத்தும் - குறைந்த கூலியில் அவர்கள் உழைக்க வேண்டியிருப்பதும் தமிழக உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் நெருக்கடியை உருவாக்க தொடங்குகிறது.இது மாதிரியான நிலைமைகள் ஒவ்வொரு தேசிய இனத்திலும் உள்ள சாதி ஆதிக்க சக்திகளையும்.சுரண்டல் பேர்வழிகளையும் ஊட்டம்பெற செய்கிறது.உழைக்கும் மக்களிடையே நிகழும் சாதிய மோதல்களோடு மொழி- இன மோதல்களையும் உருவாக்கி ஆளும் வர்க்கங்கள் இலாபம் அடைய வழி வகுக்கிறது.எனவே சாதியை ஒழிப்பதும் - மனித மாண்பை மீட்ப்பதும் வேலை வாய்ப்பை தேடி சொந்த மண்னை விட்டு வெளியேறுவதன் மூலம் நடைபெறக்கூடியதல்ல.


சொந்த மண்ணின் மீது நமது உரிமையை நிலைநாட்டுவதிலும் அதற்கான அதிகாரத்தை அடைவதிலும் நடைபெறக்கூடியதாகும்.சொந்த மண்ணை மீட்ப்பதற்கு தடையாகவும் அதிக்கசக்திகளிடம் பலியாகியும் கிடக்கும் மேல்சாதி மக்களிடையே உள்ள உயர்சாதி திமிரை ஒழிக்க போராடுவதன் மூலம் நிறைவேறகூடியதாகும்.வேற்பட்ட - ஏற்றத்தாழ்வான - இயற்கை வளங்களை வாழ்வாதாரமாக கொண்ட தனித்தனியாக சொந்த நிலபரப்பை உடைய ஒவ்வொரு தேசிய இனத்திற்குள் மட்டுமே நடைபெற கூடியதாகும்.மக்களின் செல்வங்களை சூறையாடும் தரகு - பார்ப்பனியத்தை வீழ்த்தி தமிழ்தேசிய விடுதலை புரட்சியை முன்னெடுப்பதன் மூலமே சாத்தியமாகும்.

No comments: