தமிழக மக்களே எச்சரிக்கை
பாழும் வயிற்றுப் பாட்டுக்காக
வாழும் நிலத்தை பறிகொடுப்பதா
பெற்ற் தாயை விட்டு பிழைப்பவர் போல
பிறந்த மண்ணை விற்றுப் பிழைப்பதா
மண்ணையும் மானத்தையும் இழந்து விட்டு
நடுத்தெருவில் நாய்கள் போல திரிவதா
பண முதலைகலுக்காக மக்களை பலிகொடுக்கும்
மானங்கெட்ட அரசுகளை விட்டு வைப்பதா
என நெல்லை தூத்துக்குடி மக்கள் உயிர் வாழும் உரிமைக்கான போராட்டத்தில் குதித்துள்ளனர்
40000 குடும்பங்கலை விரடியடித்துவிட்டு அவர்களின் 12000 ஏக்கர் நிலப்பரப்பை பிடுங்கி மேற்கு வங்க மக்களை கொன்று குவித்த டாடாவுக்கு தாரைவார்க்க துடிக்கிறது துரோகி கருணானிதியின் தமிழக அரசு
இப்பகுதி எங்கும் பரவி கிடக்கும் டைட்டானியம் டை-ஆக்ஸைடு என்ற மதிப்பு மிக்க இயற்க்கை கனிம வளத்தை கொள்ளையடிக்கவே இக் கொலைகார கூட்டணி அலைபாய்ந்துகொண்டிருக்கிறது நெல்லை தூத்துக்குடியில் மட்டுமல்ல தமிழ்நாடு எங்கும் இயற்க்கை செல்வங்கள் கொட்டிக் கிடக்கிறது.
நெய்வேலியில் நிலக்கரி நரிமணத்தில் பெட்ரோல் தஞ்சை முதல் பாண்டிச்சேரி வரையிலான கற்கறையை ஒட்டிய பகுதிகலில் புதைந்து கிடக்கும் எண்ணற எண்ணெய் கிண்னற்கள்.வட தமிழகமெங்கும் விறவிக் கிடக்கும் கிரானைட் கல் பாறைகள்.தேயிலை தோட்டங்கலுக்காக அழிக்கப்பட்டதையும் தாண்டி செழித்துக் கிடக்கும் காடுகள்,சந்தனம் மற்றும் விலை உயர்ந்த மரங்கள்.அரிய மூலிகை செடிகள் .வளமான விளை நிலங்கள்.ஆறுகள் மற்றும் நீராதாரங்கள்.வசதியும் வாய்ப்பும் நிறைந்த துறைமுகங்கள் மீன் மற்றும் கடல் வளங்கள்.தூத்துக்குடி முத்து பல நிறத்தில் மின்னி விலை போகும் குமரி கடல் மணல்.பலவகை கணிம தாதுக்கலை கொண்டு மலைகலாஇ உயர்ந்து கிடக்கும் குமரி மாவட்ட மணவாலக் குறிசியின் மணல் குவியல்கல் என எங்கும் எத்திசையும் தமிழ்நாடு முழுவதும் இயற்க்கை செல்வங்கள் இறைந்து கிடக்கின்றன.
எல்லாமே அள்ள அள்ள குறையாத அமுத சுரபிகள்.வெட்ட வெட்ட கொட்டிக்கொண்டேயிருக்க்கும் செல்வ சுனைகள்.இவைகலை ஒன்று விடாமல் விழுங்குவதற்க்காகத்தான் பணக்கார நாய்கள் அரசோடு பல தொழில் ஒப்பந்தங்களை போடுகின்றன
டைட்டானியத்துக்காக 12000 ஏக்கரை பட்டாப் போட டாட்டா துடிப்பது போல அடுத்தடுத்து தமிழ்நாடு முழுவதையும் பல பண முதலைகல் பங்கு போட்டுக்கொல்லும்,கார் தொழ்ற்சாலை க்லர் ஃபிலிம் தொழிற்சாலை.செல்போன் தொழிற்சாலை மென் பொருள் பூங்கா ,மருந்து ரசாயன தொழிற்சாலை.பெப்சி கோக் என எண்ணற்ற சிறப்பு பொருளாதார மண்டலங்கலை அமைக்கவும் உணவு மற்றும் காய்கறிக்கான விவசாய சிறப்பு மண்டலங்களமைக்கவும் பணவெறியர்கலுக்கு மொத்த தமிழகமும் தேவை
பல்லாயிரக்கனக்கான நிலப்பரப்பில் தொழில் தொடங்கி சில நூறு பேர்கலுக்கு வேலை தருவார்களாம் .முழுக்க முழுக்க எந்திரமயமாக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப உற்ப்பத்தியில் பள்ளிக்கூடத்தையே தாண்டாத கோவன ஆண்டிகளான நமக்கென்ன வேலை கிடைக்கும்? ஐ ஐ டி, ஐ ஐ எம் போன்ற உயர் தொழில்நுட்ப படிப்புகலை தங்கலுக்கு மட்டுமே உடையது என பட்டாப் போட்டுக்கொண்ட பணக்கார நாய்கள் பார்ப்பனர்கள் உயர் சாதியினர் இவ்வேலைகலை கைப்பற்றிக்கொண்டு பணமுதலைகலுக்கு சேவை செய்து சொகுசு கார்கலில் பவனி வருவார்கள்.
இருப்பதை இழந்துவிட்டு நாம் எங்கு போவது, இதோ பிழைப்பு தேடி கூலிகலாக போன பீகார் மக்களை சுட்டுக்கொல்கிறார்களே அசாமில் அதை போல நாமும் நாடோடிகளாக்கப்பட்டு பிற இனத்தவரிடம் குட்டுப்பட்டு சூடுபட்டு சாக வேண்டியத்துதான்.இப்போதே கருனாடகாவிலும் மராட்டியத்திலும் தமிழர்கள் அடிவாங்கி உதைவாங்கி அனாதைகளாக செத்துக்கொண்டிருக்கிறார்கள் இதை உணர்ந்துதான் நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்கள் தலைமுறை தலைமுறையாக தங்களை தாலாட்டி சீராட்டி வளர்த்த தாய் மண்னை எந்த நாயும் தொடுவதற்க்கு விடமாட்டோம் என பொங்கியெழுந்து போராடுகின்றனர்.
ஆனால் அரசும் ஆளும் வர்க்கங்கலும் ஓட்டுப் பொறுக்கி கட்சிகலும் நிலக் கொள்ளையை தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு உருவாக்கம் முன்னேற்றம் எனக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிகின்றனர்.டாட்டா பிர்லா அம்பானிகலின் பங்காளியாக பெருத்துவிட்ட கருணாநிதி தமிழ்நாட்டை துண்டு போட்டு விற்பதுதான் முன்னேற்றத்துக்கான பாதை என்றும் இதற்கெதிராக போராடினால் எனது அனுகுமுறை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என மிரட்டுகிறார்.
குறுகிய கால அரசியல் கொள்ளை மூலமே எண்ணற்ற எஸ்டேட்டுகல் பழத்தோட்டங்கள், பங்களாகள், நட்ச்சதிர உணவகங்கள் என மக்களின் சொத்துக்கலை அபகரித்த செயலலிதா டாட்டாவின் நிலக் கொள்ளையை எதிர்ப்பதாக நாடகமாடுகிறார்,
மகன்.மருமகள் என அடுத்தடுத்து குடும்பத்தயே கட்சி பதவிகலில் அமர்த்தி குறுநில மன்னர் போல் ஆட்டமாடும் ராமதாசு மக்களிடம் நிலங்கலை கொடுக்க கூடாது என்றும்,அரசிடம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் ஆலை தொடங்க ஆலோசனைகலை கூறியும் குழப்பி மீன் பிடிக்க நினைக்கிறார்.
மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மக்களை படுகொலை செய்து டாட்டாவுக்கு அடியாள் படையாக செயல்படும் சி.பி.எம். கட்சி இங்கு மவுனமாக இருந்து கொண்டு எஜமானனை பாதுகாத்து மக்களுக்கு துரோகம் செய்கிறது.
தன்மானம் மிக்க தமிழ் மக்களே
தனியார்மயம்.தாராளமயம்.உலகமயம்,என்னும் அழிவு பாதை மூலம் பண முதலைகல் மக்களின் உழைப்பால் விளைந்த பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விழுங்கி விட்டன.லாப வெறி பேயாய் பிடித்து மக்களின் நிலங்கலையும்.இயற்க்கை வளங்களையும் சூறையாட தொடங்கி விட்டன.கொள்ளையர்களின் பிடியில் மண்ணை இழந்தால் என்னவாகும்?
திருப்பூரின் பனியன் தொழில் முதலாளிகலை பாருங்கள்.விவசாயிகலாக இருந்து பனியன் தொழிலில் அடி எடுத்து வைத்தவர்கள் லாப வெறி பிடித்து கோவை-ஈரோடு மாவட்டங்கலின் நிலம் அணைத்தையும் நஞ்சாக மாற்றியதோடு புகழ் பெற்ற நொய்யல் ஆற்றையும் அழித்துவிட்டனர்.தங்களதுசொந்த ரத்தங்கலான விவசாயிகளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று விடுகின்றனர்,இன்மண்ணில் பிறந்தவர்கலின் பேராசையால் இத்துணை பெருங்கேடுகள் விளைந்தபோது அந்நியர்கள் என்ன செய்வார்கள் எண்ணிப்பாருங்கள் ஆகவே டாட்டாவின் நிலக்கொள்ளைக்கு எதிராக போராடுவது நெல்லை தூத்துக்குடிக்கு மட்டுமேயான பிரச்சனையல்ல,விமான நிலைய விரிவாக்கம்.சாலை விரிவாக்கம்,உள் கட்டுமான சீரமைப்பு.சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என தமிழ் நாட்டையே சூறையாடும் மொத்த தமிழ்தேசிய பிரச்சனை.
எனவே கண் முணே நமது வாழ்க்கை களவாடப்படுவதை கண்டு
பொங்கி எழட்டும் தமிழ்த்தேசம்
இந்திய சிறையை நடுநடுங்கச் செய்யட்டும் நமது போராட்டம்
தமிழக மக்களே மேற்கு வங்க மக்களை கொன்று குவித்த டாட்டாவோடு கருணாநிதி கூட்டுநிலக் கொள்ளையர்கலின் பிடியில் தமிழ்நாடுதாய் மண்ணை காக்க சூழுரைப்போம்தமிழ் தேச விடுதலையை முன்னெடுப்போம்
Saturday, January 12, 2008
Friday, January 11, 2008
இந்தியா ஒரு பல்தேசிய அரசு சமூகம்
இந்தியா ஒரு பல்தேசிய அரசு சமூகம்
அரசு சமூகம் என்பது தேசிய சமூகத்திலிருந்து வேறுபட்டதாகும்.தேசிய சமூகத்தில் மக்கள் ஒரு பொதுமொழியை கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அரசு சமூகத்தில் அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமிலை.இங்கு பொது மொழி என்று குறிப்பிடப்படுவது மக்கள் பேசும் மொழியேயன்றி அரசு நிர்வாகத்தில் இருக்கும் மொழி அல்ல.
இந்தியா ஒரு தேசிய சமூகமல்ல என்பதில் விவாதத்துக்கு இடமில்லை.இங்கு பல்வேறு மொழிகளை பேசுகின்ற தேசிய இனங்கள் இருக்கின்றன.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவான தேசிய இனம்,மத்திய காலத்திலும் அதன் பின்னரும் உருவான தேசிய இனங்கள்.சமீபத்தில் தேசிய இனங்களாக உருவாகிய உருவாகி வருகிற மக்கள் சமூகங்கள் என பற்பல உள்ளன.
உதாரணமாக தமிழ்த் தேசிய இனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவான மிக பழமையான தேசிய இனம்.தெலுங்கு கன்னடம்,மராத்தி,குஜராத்தி.ஒரியா வங்காளி,மலையாளம்.பஞ்சாபி,அசாமி.காஸ்மீரி போன்றவை மத்திய காலத்திலும் அதன் பின்னரும் உருவான தேசிய இனங்கள்.எவ்வாறாயினும் இவை எல்லாம் வளமான வளர்ச்சியடைந்த மொழியையும் இலக்கியங்களையும் கொண்டுள்ள தேசிய இனங்களாகும்.
இவை எல்லாம் மைய அரசின் கீழான மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருப்பினும் மைய அரசு இவற்றின் தேசிய தகுதியை அங்கீகரிக்கவில்லை.இவற்றின் மொழிகள் பிரதேச மொழிகள் என்றே குறிப்பிடப்படுகின்றன.இவற்றின் பிரதேச எல்லைகளை மைய அரசு அம்மக்களின் சம்மதம் இன்றியே மாற்றி அமைக்கும் அதிகாரம் பெற்றுள்ளது,
இவை தவிர வட இந்தியாவில் இருக்கும் உத்திரபிரதேசம்,மத்தியபிரதேசம்.ராஜஸ்தான்.பீகார் போன்ற மாநிலங்கள் மொழி வழியில் அமைக்கப்பட்ட மாநிலங்கள் அல்ல.
அதே போல வடகிழக்கு இந்திய பிரதேசங்கலும் மொழிவழி நிர்வாக அமைப்புகளாக பிரிக்கபட்டவை அல்ல.இவற்றில் எண்ணற்ற தேசிய இனங்களும் தேசிய இனங்களாக உருவாகி வரும் மக்கள் சமூகங்கலும் உள்ளன. அவற்றில் பல வளர்ச்சியடைந்த மொழியையும் இலக்கியங்களையும் கொண்டுள்ள தேசிய இனங்களாகும்.எனினும் அவற்றை மொழிவழி மாநிலங்களாககூட மைய அரசு அனுமதிக்கவில்லை.
மிகக்கடுமையான மக்கள் போராட்டங்கலுக்கு பிறகு மணிபுரி,திரிபுரா.மேகாலயா,நாகலாந்து.மிஜோ. போன்ற மாநிலங்கள் அமைக்கபட்டுள்ளதுடன்.மணிபுரி.நேபாளி,கொங்கணி மொழிகளுக்கு பிரதேச மொழித் தகுதி அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ளது.மணிபுரி மக்கள் தொகை 8 லட்சம்.நாகலாந்து மக்கள் தொகை 8 லட்சம்.மிஜோரம் 5 லட்சம்.கொங்கணிகள் 15 லட்சம்.நேபாளிகள் 14 லட்சம்.இவற்றில் மணிபுரியும் நேபாளியும் வளர்ச்சிய்டைந்த மொழிகள்.நாகலாந்தில் தற்போதுதான் பொதுமொழி ஒன்று (நாக்மிஸ்) உருவாகி வருகிறது.எனினும் இவர்களுடைய கடுமையான போராட்டங்களினால் தனிமாநிலங்களாக அங்கீகரிக்கபட்டிருக்கிறார்கள்,இவற்றை விட பன்மடங்கு மக்கள் தொகையை கொண்ட வளர்ச்சியடைந்த மொழியையும் இலக்கியங்களையும் கொண்டுள்ள பற்பல மக்கள் சமூகங்கள் வட iந்தியாவில் மாநில தகுதிகூட மறுகபட்டுள்ள நிலையில் உள்ளன.
உத்திரபிரதேசத்தில் மைதிலி கடிபோலி மொழிகள் பேசும் மக்கள் தனிதனி மாநிலங்களாக அமையும் தகுதி படைத்தவர்கள்.போஜ்புரி,மைதிலி,மகதி மொழி பேசும் மக்கள் 160 லட்சம் பேர் பீகாரில் உள்ளனர்.மேலும் பிலி மொழி பேசுவோர் 53 லட்சம்.முண்டாரி மொழி பேசுவோர் 12 லட்சம்,கோண்டி மொழி பேசுவோர் 52 லட்சம்,குருக் மொழி பேசும் ஓராக்கள் 17 லட்சம்,காரிபோலி பேசும் மக்கள் 16 லட்சம்,போடோக்கள் 6 லட்சம், தோக்கிரிகள் 13 லட்சம் கோர்காலியர்கள் 14 லட்சம், துளுவர்கள் 11 லட்சம், சந்தால் மொழி பேசுவோர் 2 கோடி என் எண்ணற்ற தனிதனியான மொழியையும் பண்பாட்டையும் கொண்டுள்ள மக்கள் சமூகஙகள் வடமாநிலங்களில் உள்ளன.
வடமாநிலங்களில் குறைந்தபட்சம் இரண்டுடஜன் மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கபட வேண்டுமென்று ராகுல் சாங்கிருத்தியாயன் கோரினார் என்பது அங்குள்ள தேசிய இனங்களின் எண்ணிக்கையை புரிந்துகொள்ள உதவுவதாகும்,ஆனால் நாகா,மிஜோ,மணிபுரிகளை விட அதிகமான மக்கள் தொகை கொண்ட மிக பல மக்கள் சமூகங்கள் தேசிய இனங்களாக அங்கீகரிக்கபடவில்லை என்பதோடு அவற்றுக்கு மாநில நிர்வாக தகுதிகூட வழங்கபடவில்லை,எனினும் தங்கள் மொழிகலுக்கு அரசியல் சட்ட தகுதி கோருவது,மாநில நிர்வாக தகுதி கோருவது என்ற வெவ்வேறு வடிவில் வெவ்வேறு அளவில் இந்த மக்கள் சமூகங்களில் கோரிக்கைகலும் போராட்டங்களும் தற்போது எழுந்துகொண்டிருக்கின்றன.
இவ்வாறு இந்தியா பழமையான வளர்ச்சிய்டைந்த பல்வேறு தேசிய இனங்களையும் சமீபத்தில் தேசிய இனங்களாக வள்ர்ச்சியடைந்த வளர்சியடைந்து வருகிற எண்ணற்ற மக்கள் சமூக்ங்களையும் கொண்ட ஒரு பல்தேசிய அரசு சமூகமாக இருக்கிறதேயன்றி தேசிய சமூகமாக இல்லை.
இவ்வாறு வேறுபட்ட வளர்சி மட்டங்களுடனும் வரலாறுடனும்,கலை, இலக்கிய,பண்பாட்டுடனும் திகழும் தேசிய இனங்கள் அணைத்தும் முழுமையான நவீன தேசங்களாக வளரும் கட்டத்தில் வரலாற்று போக்கில் இருக்க்கின்றன,இந்த நிகழ்சிபோக்கின் வரலாற்று கட்டத்தின் நிறைவின் ஊடாகவே இந்தியாவில் சனனாயக புரட்சி வெற்றியடைய முடியும்
நன்றி தோழர் கே.எம்.

Saturday, January 5, 2008
தமிழர்களாக வாழ்வது குற்றம் என்றால் துணிவுடன் அதை தொடர்ந்து செய்வோம்

நமக்கு மிக அருகாமையிலே மாபெரும் மனித படுகொலை நடந்துகொண்டிருக்கிறது.கொல்லப்படுபவர்கள் நமது சகோதர தேசிய இனமான ஈழத்தமிழ் மக்கள் .அமெரிக்கா.இந்தியா,பாகிஸ்தான்,சீனா என உலகப்பயங்கரவாதிகளோடு கூட்டு சேர்ந்து கொண்டு சிங்கள வெறிப்படை ஈழத் தமிழர்களை கொன்றொழிக்கிறது.
ஈழத்தமிழ் சமூகத்தை அழிவிலிருந்து காப்பதற்கு உயிரை கொடுத்து போராடுகின்றனர் விடுதலைப்புலிகள்.
நாம் ஈழ சகோதரர்களுக்காகப் போராடவில்லை,அவர்களின் துன்பத்தை கண்டு இரக்கப்படுகிறோம்.அவர்களின் மரணத்துக்காக அழுகிறோம்.அழுவதற்கு கூட அடிமைகளுக்கு உரிமை இல்லை என்று உத்தரவு போடுகின்றன இந்திய - தமிழக அரசுகள்.
ஆனால் சிங்கள வெறிப்படைக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிகொண்டும்,எப்படியெல்லாம் சித்திரவதை செய்து ஈழத்தமிழரை கொலை செய்யலாம் என்றும் என்னவெல்லாம் கொடுமைகள் செய்து ஈழத்தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தலாம் என்றும் சிங்கள வெறியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கிறது இந்திய அரசு.
இதை தட்டி கேட்க வக்கில்லாமல் கூட்டணி அமைத்து கொட்டமடிக்கிறது தமிழக அரசு.
இனியும் நாம் இந்தியனாக இருக்க வேண்டுமா ?
தன்மான போராளி தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணை காவிகூடாரமாக மாற்றியே தீருவோம் என்று இந்து மதவெறி பயங்கரவாதிகள் தமிழ்நாட்டை தாக்க தொடங்கியுள்ளனர்.கையெடுத்து கும்பிடவோ,மனமுருகி வேண்டி ஏமாறவோ கூட லாயக்கற்று கடலுக்குள் இருக்கும் மணற்திட்டை இராமன் பாலமென கூறி மக்களை மடையர்களாக்குகின்றனர்.இதை காரணம் காட்டி கருநாடக எல்லையில் இரண்டு தமிழர்களை உயிரோடு எரித்து கொலை செய்தனர்.தமிழக முதல்வரின் தலைக்கு விலை வைத்தனர்.தமிழ்நாட்டை இன்னொரு குஜராத்தாக மாற்றத் துடிக்கின்றனர்.
இதனை கண்டிக்கவோ,காரணமானவர்களை தண்டிக்கவோ நீதிதுறை.காவல் துறை போன்ற எந்த துறைக்கும் திராணியில்லை.
ஆனால் நாங்கள் இந்துவுமில்லை இந்தியனுமில்லை - நாங்கள் தமிழர்கள் என தமிழ்நாடு போர்குரல் உயர்த்தியவுடன் பார்ப்பன உச்சிகுடிமிகளின் நீதிமன்றம் கோபத்தில் தாண்டவமாடியது.தமிழர்கள் தன்மானம் பகுத்தறிவு பேசுவது குற்றம்: பார்ப்பன கட்டுகதைகளை நம்ப வேண்டும்.இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பதற்கு முட்டாளாக இருக்க வேண்டும் என உத்தரவு போட்டது.
ஈராயிரம் ஆண்டுகலுக்கும் மேலாக நம்மை ஒடுக்கி சுரண்டி கொழுத்து வரும் பார்ப்பனியத்தின் அதிகார குடுமியை அறுத்தெறிய வேண்டாமா?
இனியும் நாம் இந்துவாகவும் இந்தியனாகவும் இருக்க வேண்டுமா?
சட்டமன்றம்.பாராளுமன்றம்,நீதிமன்றம்,நடுவர் மன்றம் என எந்த மன்றத்துக்கு போனாலும் காவிரியில் கடுகளவு நீரும் தரமாட்டோம் என அடாவடி செய்கிறது கருநாடக அரசு.
கடலிலே கொட்டினாலும் தமிழர்களின் தவித்த வாய்க்கு துளி நீரையும் தராமல் முல்லை பெரியாறையும்.பவானியையும் முடக்கியே தீருவோம் என வஞ்சகம் செய்கிறது கேரள அரசு.
தட்டி கேட்க நாதியில்லாத தமிழர்களுக்கு நாங்கள் மட்டும் தண்ணீர் தர முடியுமா என் பாலாறை தடுத்து நிறுத்துகிறது ஆந்திர அரசு.
எந்த சிக்கலையும் தீர்க்கவிடாமல் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது இந்திய அரசு,கையாலாகாத்தனத்தோடு பல்லை இளிக்கிறது தமிழக அரசு.
இனியும் நாம் இந்தியனாக இருக்க வேண்டுமா?
இதுவரை நாம் இழந்த்தது போதாதா?
கச்சத்தீவை இலங்கையிடம் இழந்தோம்
பச்சை தமிழனின் பச்சை துரோகத்தால் பீர்மேடு,தேவிகுளம் பகுதிகளை இழந்தோம்.
தங்கவயல் வெங்காலூரை கருநாடகத்திடம் இழந்தோம்.
வளமிக்க நமது காடுகளை எல்லாம் தேயிலை தோட்ட கொள்ளையர்களிடம் இழந்தோம்.
விலைமதிக்க முடியாத மலைகலை எல்லாம் சிமென்ட் மற்றும் கிராணட் கொள்ளையர்களிடம் இழந்தோம்.
இன்று செல்வம் கொழிக்கும் கடல் வளங்களையும்.மீன்பிடிதொழிலையும் பணக்கார கடல்கொள்ளையர்களிடம் இழந்துகொண்டிருக்கிறோம்.நரிமணம் பெட்ரோலையும் நெய்வேலி நிலகரியையும் அதிலிருந்து பெறப்படும் மின்சாரத்தையும் இழந்துகொண்டிருக்கிறோம்.
உயிர் வாழ்வதற்கு ஒரே ஆதாரமான விளைநிலங்களையும் பணமுதலைகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்கலுக்காக இழந்து கொண்டிருக்கிறோம்.
நம் மண்ணையும் வாழ்வையும் பறித்துகொலுக்கும் இந்திய அரசு நமது தன்மானத்திற்கு சவால் விடுகிறது.மொழி இன உரிமைகளை பேசுவது இந்திய ஒற்றுமைக்கு எதிரானது என்று இல்லாத ஒன்றை காட்டி மிரட்டுகிறது.உயிர் வாழும் உரிமைக்காக போராடும் நமது ஈழச் சகோதரர்களை பயங்கரவாதிகள் என கொச்சப்படுத்துகிறது.ஈழ தமிழர்களுக்கு உத வேண்டிய நமது கடமையை பயங்கரவாதம் என கூறி கடுமையாக நசுக்குகிறது.
இந்த ஈனசெயல்கலுக்கெல்லாம் இந்திய அரசின் எடுபிடியான தமிழக அரசு துணை போகிறது.
இனியேனும் விழிப்போம்.இழந்தத்தை மீட்ப்போம்.இருப்பதை காப்போம்.
நொடிகளின் இடைவெளியில் வாழ்ந்தாலும் மின்னலாய் மின்னுவதன்றி அடிமை சாசனத்துக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம் என முழங்குவோம்
ஈழ விடுதலையை ஆதரிப்போம்
சிங்கள வெறி படைக்கு துணை போகும் இந்திய அரசை எதிர்ப்போம்
இராமன் பாலம் மற்றும் இதிகாச குப்பைகளை எரிப்போம்
பார்ப்பன குடுமிகளின் உச்ச நீதிமன்றத்தை ஒழிப்போம்
காவிரி,முல்லை பெரியாறு,பவானி.பாலாறு உரிமைகலுக்காக உயிரையும் கொடுப்போம்.
தமிழர் வாழ்வுக்கு தடையாக இருக்கும் இந்திய சிறையை தகர்ப்போம்
தன்மான புரட்சி தமிழ் தேசம் படைப்போம்

Wednesday, January 2, 2008
மொழி.தமிழ் ஒரு பார்வை மற்றும் சில தகவல்கள்
மொழி என்பது மக்கள் வாயில் வழங்கும் ஒலித்தொகுதியேயன்றி அவரினும் வேறான ஓர் உயரி அல்லது உருவம் அன்று.மக்கள் தம் தாய்மொழியை பேசினால் அன்றேல் அது வாளும் அன்றேல் மாளும்.ஒரு மொழி வழக்கிற்க்கு இன்றியமையாத சார்பு அல்லது நிலைக்களம் அதை பயன்பாட்டிலிருத்தும் மக்களே. - மொழிஞாயிறு தேவனேய பாவாணர்
மொழி என்பது நம்முடைய சிந்தனை,புலன் உணர்வு மனவெழுச்சி மற்றும் நம் சமுதாயப் பண்புகளை மதிப்பிட பயன்பட கூடிய கருவி மட்டுமல.மொழி அது அடிப்படையில் ஒரு சமூகத்தின் அடையாளம். - எட்வர்ட் சேப்பியர்
மொழியே நம் சிந்தனையின் விளக்கு - சான் டூவர்ட் மில்.
மொழி என்பது நம் சிந்தனை மற்றும் உணர்வை மேம்படுத்துவது அல்ல.அது நம்முடைய உண்மையை பற்றிய பார்வையையும் தீர்மானிக்கிறது. - பெஞ்சமின் வார்ட்.
மொழி என்பது ஒரு முக்கியமான கருவி அது கருத்தையும் சிந்தனையையும் பறிமாறிகொள்ள பயன்படுகிறது மட்டுமல்ல இது நட்பு,கலாசாரம் மற்றும் வணிகம் அணைத்தையும் தொடர்புபடுத்தும். ஒரு மொழியின் முகாமையான பயன்பாடு என்பது உயர்ந்த எண்ணங்களை ஊட்டுவதும்.ஊக்கமூட்டுவதும்,மற்றும் உயர்த்துவதும் மொழியே.
உலகில் கிட்டத்தட்ட 7000 மொழிகள் உள்ளன,இந்த நூற்றண்டின் இறுதிக்குள் 3000 மொழிகள் அழியும் தருவாயில் உள்ளது - யுனெஸ்கோ
உலகில் உள்ள மொழிகள்
ஆப்பிரிக்கா 2092
அமெரிக்கா 1002
ஆசியா 069
ஐரோப்பா 239
பசிபிக் 1310
ஆசியாவிற்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்காவில் அதிக மொழிகள் பேசப்படுகிறது,அமெரிக்காவில் குறைந்த நபர்களினால் அதிக மொழிகள் பயன்படுத்தப்படுகிறது,ஆசியாவில் அதிக மொழிகள் பெருவாரியான மக்களால் பேசப்படுகிறது.இந்தியாவில் உள்ள மொழிகள் 1961 ஆம் ஆண்டு கணக்குபடி மொத்த தாய்மொழிகள் 1652.இவை 826 மொழி கூட்டங்களாக வகுகப்பட்டன.இந்தியாவின் தேசிய மொழிகளாக 15 ,இவற்றுள் 380 தாய்மொழிகள் அடங்குகின்றன.தேசிய மொழிகள் என்று தகுதி பெறாத பெருமொழிகள் 17 இவற்றில் 241 தாய்மொழிகள் அடங்குகின்றன.71 தாய்மொழிகள் ஐந்து லட்சம் பேர் பேசுகின்றனர்.857 தாய்மொழி ஒரு இலட்ச்சம் பேருக்கும் குறைவானோரால் பேசப்படுகிறது.இந்திய மொழிகள் அல்லாத தாய்மொழிகள் 103.இதில் 244 தாய்மொழிகளை வகைப்படுத்த 60 மொழிபிரிவுகளாகவும் மீதியுள்ள 613 வகைப்படுத்த முடியாத தாய்மொழிகளாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன
14 தேசிய மொழிபேசுவோர் எண்ணிக்கை விழுக்காட்டில் 1991 கணக்கெடுப்பின்படி
சமஸ்கிருதம் 0.000
மணிப்பூர் 0.002
காசுமீர் 0.001
நேப்பாளி 0.01
சிந்தி 0.07
தெலுங்கு 0.15
கொங்கனி 0.16
கன்னடம் 0.37
மலையாளம் 0.43
தமிழ் 0.43
பஞ்சாபி 0.44
உருது 0.50
மராத்தி 0.76
குஜராத்தி 0. 90
ஒரியா 1.04
அசமி 1.47
செவ்வியல் மொழிக்கான வரயறை அம்மொழிக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்க வேண்டும்,அது வேறெந்த பாரம்பரியத்திலிருந்து பிரிந்து வந்ததாக இருக்க கூடாது.தன்னை சார்ந்து நிற்கும் மொழிகளுக்கு அடிப்படையை கொடுத்திருக்க வேண்டும்.வேறு எந்த மொழியும் இதன் மீது பலகாலம் ஆதிக்கம் செலுத்தியிருந்தபோதிலும் இது தன் நிலையில் தளர்ச்சி பெற்றிருக்க கூடாது.தானாக உருவாகி இருக்க வேண்டும் அதற்கென்று பழமையான செல்வாக்கான இலக்கியங்கள் இருக்க வேண்டும்.தமிழ் மொழி
தொனமை முன்மை எண்மை ஒண்மை
தனிமை இனிமை தாய்மை தூய்மை
செம்மை மும்மை கலைமை தலைமை
இளமை வளமை முதுமை புதுமை
ஆகிய 16 இயன்மொழி கூறுகளை கொண்ட நம் தமிழ் செவ்வியல் மொழிகளை காட்டிலும் உயர்வானது.
தாய்மொழி பிறப்பின் அடிப்படையில் அல்லது மூதாதையரிடமிருந்து இயல்பாக வருவது.சுருங்கசொல்லின் ஒரு தாயின் இடத்தை பிடித்து.தாயை போலிருந்து ஒருவரை உருவாக்கி அவரை முழுமையாக வெளிப்படுத்த,அடையாளப்படுத்தும் மொழியே தாய்மொழி.
மொழியியல் புலமையின் தந்தை என போற்றப்படும் டாக்டர் எமினே தமிழ்மொழியின் கட்டமைப்பு குறித்து கூறுகையில் உலகத்து மொழிகலிலேயே அதிக வேற்சொற்களையுடைய மொழி தமிழ் என்று கூறுகிறார்.
மொழித்தூய்மை நடந்த மொழிகளில் சில எடுத்துக்காட்டுகள்
துருக்கு மொழியில் - அரபும்,பாரசீகமும்
ருசிய மொழியில் - பிரெஞ்ச்
பிரஞ்ச் மொழியில் - இலத்தீனும் பிறமொழிகளும்
இவைகளெல்லாம் களையெடுக்கப்பட்டு மொழித்தூய்மை செய்யப்பட்டன.
மலையாளத்தில் குஞ்சன நம்பியார் தலைமையில் கி.பி 18 ஆம் நூற்றாண்டில் மொழித்தூய்மை மேற்கொள்ளப்பட்டது.சமஸ்கிருதம் கலக்காதது பச்சை மலையாளம் எனப்பட்டது.
கன்னடத்தில் கி.பி 9 ம் நூற்றாண்டில் நிருதுங்க வர்மன் எனும் மன்னனால் தனிக்கன்னடம் எழுப்பப்பட்டது.தனிகன்ன்டம் அல்லது அச்சகன்ன்டம் என்று அது அழைக்கப்பட்டது.
தெலுங்கில் 18ம் நூற்றாண்டில் தூய தெலுங்கு இயக்கமே நடந்த்தது, அது அச்ச தெலுங்கு என்பபட்டது.தனி தெலுங்குகான நிகண்டே வெளியிடப்பட்டது.
மும்பை தமிழராய்.இலங்கைத் தமிழராய்,மலேசிய தமிழராய்.சிங்கப்பூர் தமிழராய்.மொரீசியஸ் தமிழராய்.வெங்காளூருத் தமிழராய்.பிஜி தீவு தமிழராய்.ஆப்பிரிக்க தமிழராய் இப்படை மொழி மறந்து வெற்று தமிழராய்.உலகெல்லாம் ஈனத்தனமாய் நடத்தப்படும் ஏதிலி தமிழராய்.ஏன் இன்று தாய்தமிழகத்திலேயே அடிமை தமிழராய் நடத்தப்படுகிறோம்.எல்லாம் மொழி மறந்த்ததால் வந்த விளைவு.தமிழ் மொழி உணர்வுள்ள தமிழராய் என்று மாறுகிறோமோ அன்றுதான் தமிழர்க்கு விடுதலை

Subscribe to:
Comments (Atom)