Saturday, October 18, 2008

தொடரும் இந்திய அரசின் துரோகம்

இன்று தமிழீழ் மக்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சிகளின் கூட்டம்,மத்திய அரசுக்கு எச்சரிக்கை என்பனவெல்லாம் நடைபெற நாம் எவ்வளவு பெரிய விலைகளை கொடுத்துள்ளோம் தெரியுமா தமிழர்களே ?சிங்கள வெறிப்படையாள நமது அன்புக்குரிய தமிழக மீனவர்கள் 800பேர் கொல்லப்பட்டுள்ளனர்.15,000 மீனவர்கள் சிறைபிடித்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். மனித தனமைய்ற தாக்குதலாலும் 500 முறை துப்பாக்கி சூடு நடத்தியதாலும் இதுவரை 2000 - த்துக்கும் அதிகமான நமது மீனவர்கள் உழைத்து வாழ முடியாத அளவு ஊனமாக்கப்பட்டுள்ளனர்.

2-7-08 அன்று நமது கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நமது மீனவர்களை சிங்கள வெறிப்படை சுற்றி வளைத்து சிறைபிடித்தது. கை கால்களை கட்டி தலைமன்னாரில் உள்ள இராணுவ முகாமில் அடைத்தது. மழையானாலும் புயலானாலும் கடலோடு போராடி உயிர் வாழும் நமது மானமிக்க மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தது. இராக்கில் அமெரிக்க காட்டுமிராண்டிப் படைகள் செய்தது போன்ற இந்த இழி செயலை கண்டித்து இந்திய அரசு என்ன செய்தது.?அமெரிக்காவின் கொள்ளைக்காக அழிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் அடியாள வேலை செய்யும் இந்திய பொறியாளர்கள் கொல்லப்பட்டபோது கொதித்தெழுந்த இந்திய அரசு நமது தமிழக மீனவர்களை காக்க என்ன செய்தது. ?
படுபாதகம் செய்யும் சிங்கள வெறிப்படைக்கு வெகுமானங்களை வாரி வழங்கியது. 1500 கோடி நிதி உதவியையும்,பல கோடி மதிப்புள்ள நவீன ஆயுதங்களையும் அள்ளிக்கொடுத்ததொடு தேர்ந்தெடுக்கப்பட்ட 265 இராணுவ வல்லுனர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தது இந்திய அரசு.இந்தியாவின் பண உதவி,படை உதவி,ஆயுத உதவியுடன்தான் இன்று ஈழ் தமிழ் மக்களையும் தமிழக மீனவர்களையும் கொன்று குவிக்கிறது சிங்கள வெறிப்படை.இந்தியாவின் கூட்டாளியாக இருந்து கொண்டுதான நமது மீனவர்களை சுட்டுக் கொல்கிறது சிங்கள வெறிப்படை.

இந்திய அரசின் தமிழின விரோத நடவடிக்கைக்கு காரணம் என்ன ?சிங்கள வெறிப்படைக்கு தமிழினத்தை பலிகொடுத்து கொண்டிருப்பதன் பின்னணி என்ன ?இந்தியாவின் இராணுவ கொள்கையும்,வெளிநாட்டு கொள்கையும்,அதன் பொருளாதார கொள்கையோடு பின்னி பிணைந்தது.இந்திய பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் தரகு முதலாளிகளின் லாபத்தை அடிப்படையாக கொண்டது. மனிதகுலத்தின் எதிரியான உலக மேலாதிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கொள்ளைக்காக உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்க துடிப்பதை போலத்தான் தெற்காசிய பேட்டை ரவுடியான இந்தியாவும் தனது அருகிலுள்ள சின்னஞ்சிறு நாடுகளை தன் பிடிக்குள் வைத்துக்கொள்ள துடிக்கிறது. இந்தியா இத்தனை காலமும் நேபாளத்தை கேள்விகேட்க்க நாதியின்றி சுரண்டியது,இன்னமும் பூடான்.சிக்கிம்,வங்க தேசம் போன்ற நாடுகளை தனது வேட்டைக்காடாக கொண்டுள்ளது. இதை போலத்தான் இலங்கையையும் தனது சுரண்டல் கரங்களால் சுற்றி வளைத்துள்ளது.

இலங்கையின் மொத்த வருமானமும் அந்நாட்டின் சுற்றுலாதுறையையும்,பெருந்தோட்ட தொழில்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இவை இரண்டிலும் இந்திய தரகு முதலாளிகளே ஏகபோக சக்ரவர்த்திகளாக உள்ளனர். தவிர இலங்கையில் பெட்டிக்கடையில் விற்கப்படும் தீப்பெட்டி முதல் தொலைக்காட்சி பெட்டி வரையும்,மோட்டார் சைக்கிள்,கார்,கனரக வாகனம் என அனைத்து பயன்பாட்டு பொருட்க்களையும் விற்று கொள்ளையடிக்கிறார்கள் இந்திய முதலாளிகள். கூடவே இன்று போரின் நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு உணவு பொருட்க்கள் முதல் உயிர் காக்கும் மருந்துப் பொருட்க்கள் என அணைத்தையும் பன்மடங்கு விலை ஏற்றி விறபதன் மூலம் கொழுத்த லாபமடைகிறார்கள் இந்திய முதலாளிகள்.

இந்தியாவின் இத்துணை கொள்ளைக்கும் துணையாக உள்ளது இலங்கையின் சிங்கள வெறி அரசு. அமெரிக்காவின் கொள்ளைக்கு துணை போவதன் மூலம் அம்பானிகள் கொழுப்பதை போல இந்தியாவின் கொள்ளைக்கு துணையாக நின்று லாபமடைகின்றனர் சிங்கள முதலாளிகள். இந்த கொள்ளையை மூடி மறைப்பதற்காகத்தான் சிங்கள மக்களிடம் பேரினவாத வெறி ஊட்டி வளர்க்கப்படுகிறது. ஈழதமிழர்களுக்கு கல்வி,வேலை வாய்ப்பு கிடைக்காமல் செய்து அனைத்தும் சிங்களவர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது.வங்கி கடன் முதல் வணிகம் வரைக்கும் சிங்களவர்க்கே என ஒதுக்கப்படுகிறது. ஈழத்தமிழர்களின் நிலங்கள் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு சிங்களர்களுக்கே வழங்கப்படுகிறது. சிங்களர்கள் வாழ வேண்டும் என்றால் ஈழத்தமிழர்கள் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

சிங்களவர்கள் இடையே விதைக்கப்பட்ட இந்த வெறிதான் இந்திய சிங்கள முதலாளிகளின் கொள்ளைக்கான அடித்தளம்.இந்த வெறி அணையாமல் பாதுகாப்பதில்தான் இந்திய சிங்கள ஆளும் வர்க்கங்களின் லாபம் குடி கொண்டுள்ளது இதற்காகத்தான் சிங்கள வெறிப்படைக்கு இந்திய அரசு பணத்தையும்,படையையும் கருவிகளையும் வாரி வழங்குகிறது. இந்திய முதலாளிகளின் லாப வெறிக்காக சிங்கள வெறியர்களோடு கூட்டு சேர்ந்து தமிழினத்தை கொன்று குவிக்கும் இந்திய அரசு இலங்கையில் அமைதியை நிலை நாட்டுமா ? ஈழ் தமிழினத்தை பாதுகாக்குமா ? இந்தியா இதுவரை செய்ததை எல்லாம் மறக்கலாமா ?

விடுதலை புலிகளின் முன்னணி போராளியான தளபதி கிட்டுவை நடுக்கடலில் சுற்றி வளைத்து கொன்றது இந்திய அரசு. விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளான குமரப்பா,புலேந்திரன் உட்பட 12 பேரை சிங்கள வெறிப்படையிடம் ஒப்படைத்து கொலை செய்ய வைத்தது இந்திய அரசு. 1987 இல் அமைதிப்படை என்கிற பேரில் 6000 ஆயிரம் ஈழத்தமிழர்களை கொன்றொழித்தது இந்திய அரசு. பல ஆயிரம் ஈழ் தமிழ் பெண்களை மானபங்கம் செய்தது இந்திய அரசு.இதற்கு மேலும் இந்திய அரசு அமைதி நடவடிக்கை என்கிற பெயரில் ஈழத்தை சூறையாட அனுமதிக்கலாமா?

இன்று ஈழத்தமிழர்க்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்ப்பட்டுள்ள வீரமிக்க எழுச்சிக்கு முன்னால் எதுவும் செய்ய முடியாமல் மண்டியிட்டுள்ள அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன.மத்திய அரசின் ஆயுட்க்காலம் முடியும் தருணத்தில் எம்பிக்கள் பதவி விளக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கின்றன. கூடவே இந்திய அரசு தலையிட்டு அமைதி தீர்வை நிலைநாட்ட வேண்டும் என ஈழ விடுதலைக்கு குந்தகம் விளைவிக்கின்றன. இந்தியாவிடம் அப்படி என்ன அமைதி தீர்வு உள்ளது. இறுதிக்கும் இறுதியாக இந்தியா முன் வைப்பது ஈழத்தமிழர்களும் சிங்கள வெறியர்களும் இணைந்திருக்கும் ஒற்றை ஆட்சியே !! ஈழத்தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லாத மாநில தகுதியே! இதற்கு ஈழ தமிழர்கள் தங்களின் உரிமை போராட்டத்தை கை விட்டு அடிமைகாளாக அடங்கி போவதே !இதற்காகவா ஈழ தமிழ் மக்கள் ஆண்டுகாலமாக போராடுகிறார்கள்? பல இலட்சம பேரை பலிகொடுத்திருக்கிறார்கள் ?எனவே ஈழ் ஆதரவு என்கிற பெயரில் நடக்கும் சதியினை முறியடித்து தனி தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு என்று தாயக தமிழர்கள் உறுதியாக குரல் எழுப்புவோம்

Monday, April 7, 2008

ஒகேனககல் மீது கன்ன்ட இனவெறியர்கள் படையெடுப்பு

நால்திசையிலிருந்தும் பகைவர்கள் நம் மீது தாக்குதல் நடத்திக்க்கொண்டிருக்கிறார்கள்.உயிரை பணயம் வைத்து கடலில் மீன் பிடிக்க செல்லும் நமது மீனவர்களை அன்றாடம் கொன்று குவிக்கிறது சிங்கள வெறிப்படை.முல்லைபெரியாறை முடக்கி வைத்து தென் தமிழக மக்களை பட்டினியில் கொலை செய்ய முயற்சிக்கிறது மலயாள ஆளும் வர்க்கமும் அரசும்.பாலாறை இதடுத்து நிறுத்தி நம்மக் படுகொலை செய்ய துடிக்கிறது ஆந்திர அதிகார வர்க்கமும் அரசும்.இவற்றிற்கு எல்லாம் மேலாக கன்னட வெறியர்கள் நம்மீது நடத்துகின்ற தாக்குதல்கள் அன்றாடம் தொடர்கதையாகிகொண்டிருக்கிறது.காவிரி சிக்கலை காரணம் காட்டி கலவரங்களை நடத்திகொண்டிருந்தவர்கள்.இன்று நமது ஒகேனக்கல்லை ஆக்கிரமிக்கும் பயங்கரவாத நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

உயரத்திலிருந்து வேகமாக விழுந்து தண்ணீர் தரையை தழுவுவதால் தெறித்தெழும் நீர்த்திவலைகள் புகை கூட்டம் போல் ஊரையே சூழ்ந்துகொல்லும்.இதனால் புகை நல்கும் கல் என அழகு தமிழ் பெயர் கொண்ட நமது பகுதி ஒகேனக்கல் என மாற்றப்பட்டு அந்நியர் ஆகிரமிப்புக்கு ஆளாகி நிற்கிறது.பார்ப்பனர்.நாயக்கர்,மராத்தியர்,ஆங்கிலேயர் என தொடர்ச்சியாக அந்நியரிடம் அடிமைப்பட்டுகிடந்த நமது தாய் தமிழ்நாட்டின் பல் ஊர்களின் பெயர்கள் இன்று தமிழில் இல்லை.பேரை வைத்து ஊரை அறிவது என்றால் தமிழ்நாட்டின் எந்த பகுதியும் நமக்கு சொந்தமாயிராது.மக்கள் பணத்தை வாரியிறைத்து திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க செய்ததை சாதனையாக தம்பட்டம் அடிக்கும் தமிழக அரசு நமது பகுதிகளின் பெயர்களை தமிழ் படுத்தமுடியாமல் இருப்பது வெட்க்கக்கேடு

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிராக கன்னடர்கள் போராடுவதாகவும்.அது காவிரியிலிருந்து வரும் தண்ணீரினால் உருவான சிக்கல் போலவும் பொய் பேசி திரிகின்றார் தமிழக முதல்வர்.குடிநீர் திட்டத்துக்கு எதிராக அல்ல.ஒகேனக்கல் பகுதியே கன்னடர்களுக்குதான் சொந்தம் என் வம்பு செய்கின்றனர் கன்ன்ட வெறியர்கள்

1993 - இல் பரிசல்துறையை தங்களுடையது என சொலி தகறாரை ஆரம்பித்தவர்கள்.2005 - இல் வனத்துறை.காவல்துறை சார்ந்த ஆயுதபடையுடன் கன்னட அரசியல்வாதிகளும் அத்துமீறி உரிமை கொண்டாட தொடங்கினர்.கன்னட இன வெறியர்களும் அரசியல்வாதிகளும்.ஆளும் வர்க்கமும் சேர்ந்து ஒகேனக்கல் மீட்ப்பு படை என்கிற அமைப்பை உருவாக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.கன்னட மக்களிடம் இனவெறியை தூண்டுவதன் மூலம்தான் கன்ன்ட ஆளும் வர்க்கங்களும்.அரசியல் கட்சிகளும் உயிர் வாழ முடியும் என்கிற நிலை அங்கு உள்ளது. உழவு தொழில் அழிந்து அங்குள்ள உழவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில்.மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப்ப கொள்ளையர்களின் இலாபத்துக்கு கர்நாடக வளமும்.மக்களும் பலியாகும் நிலையில் அவர்கள் இனவெறியை விதைத்து மக்களை திசை திருப்புகிறார்கள்.

இன்றைக்கு தேர்தல் வெற்றிக்காக கர்நாடக பாரதீய ஜனதாவும் அதன் தலைவன் எடியூரப்பாவும் ஒகேனக்கலை கைப்பற்றுவோம் என் இன் தீவிரவாதத்தை தூண்டி விட்டுள்ளனர்.ஒகேனக்கல் மட்டுமல்லாது கிருட்டிணகிரி.தர்மபுரி மாவட்டங்களும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடுகின்றனர்.ஒரே இந்தியா.ஒரே நாடு என் தம்பட்டம் அடிக்கும் காவிக் காலிகள் கன்னட இனவெறி போதை ஏற்றிகொண்டு பாரத மாதாவின் நிர்வாண நடனத்தை ரசித்துகொண்டிருக்கின்றனர்

தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க கன்னட வெறியர்கள் தொடர்ந்து செய்து வரும் இத்தாக்குதல் நடவடிக்கையை மூடி மறைத்து ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தால் கர்நாடகம் பாதித்து விடும் என்று அஞ்சி கன்னட வெறியர்கள் போராடுவதாக நம் மக்களை ஏமாற்றுகின்றன தமிழக அரசும் ஓட்டுபொறுக்கி அரசியல் கட்சிகளும்

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் முதல் பாதிக்கப்படுவதும்,பறிபோய்கொண்டிருப்பதும் தமிழக உரிமைகளும்,பகுதிகளுமே ஆகும்.நமது பகுதிகள் பிற மாநிலங்களுக்கு போன போது எந்த பகுதியாக இருந்தால் என்ன? எல்லாம் இந்தியாவுக்குள்தானே இருக்கிறது என் எக்த்தாளம் பேசினாராம் காமராசர்.எல்லாம் இந்தியா தான் என்றால் ஏன் எல்லைகள் மொழிவழியில் பிரிக்கபட்டன? என்று இந்த மரமண்டைகளுக்கு உறைக்கவே இல்லை.தமிழ்நாட்டின் எல்லையோரமான 830 கி.மீ அளவிலுல்ல பகுதிகள் அணைத்திலும் கறாரான வரய்றுப்பு எதுவும் இல்லாமல் எல்லா இடங்களிலும் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.தமிழ்நாட்டில் இருந்த எந்த அரசுகளும் இதற்காக சின்ன நடவடிக்கை கூட எடுக்கவில்லை ஏன்.?

ஏனென்றால் தமிழக அரசின் அதிபதிகளான டி.வி.எஸ் குழுமம்,பொள்ளாச்சி மகாலிங்கம்.வகையறா தரகு முதலாளிகள்.அரசியல்வாதிகள் தங்களது வணிக நிறுவனங்களையும் சொத்துக்களையும் கர்நாடகா,கேரளா,ஆந்திரா என் அண்டைமாநிலங்கள் முதல் இந்தியா முழுவதும் பரப்பி வைத்துள்ளனர்.இங்கே தமிழ்நாட்டின் உரிமைக்குரல் ஓங்கி ஒலித்துவிட்டால் வெளி மாநிலங்களில் இருக்கும் இவர்களின் சொத்துக்கள் சூரையாடப்படும்.இவர்களின் வாணிகம் பாதிக்கப்பட்டும் கொள்ளை வருமானம் பறிபோய்விடும்.

ஆதலாதான் இப்பெருச்சாளிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு கட்சி நடத்துகின்ற அணைத்து ஓட்டுபொறுக்கிகளும்,அவர்களின் அரசும் தமிழ் மக்கள் உரிமை பறிபோகும்போதும் சரி தமிழர்கள் கொல்லப்படும்போதும் சரி தமிழர்களை காக்க போராடாமல் இல்லாத இந்தியாவை காக்க வேண்டுமென கூச்சலிடுகிறார்கள். [red[பராளுமன்ற சாக்கடையில் படுத்துபுரளும் இடதுசாரிகளில் சிபிஎம் கட்சியானது முழுக்க முழுக்க தமிழ் இன விரோதியாகவே உள்ளது.

தமிழ்நாட்டின் நதிநீர் சிக்கல்.எல்லை சிக்கல் போலவே ஒகேனக்கல் சிக்கலும் தமிழக மக்களின் வாழ்வாதார குடியுரிமை சிக்கலாகும்.தமிழக உழவர்களின் வாழ்வுரிமை சிக்கலாகும்.இதனை டெல்லியின் அடிமையான தமிழக் முதலாளிகலின் அரசும் அதன் ஓட்டுபொறுக்கி கட்சிகளும் தீர்த்துவிட்டாது,திசை திருப்பி நீடிக்கவே செய்ய்யும்.எனவே நமது எல்லைகலளையும்.பகுதிகளையும் உரிமைகளையும் பாதுக்காக்க வேண்டுமென்றால் இவைகளை பலிகொடுத்து தங்களது பணப்பைகளை நிரப்பும் கொள்ளைக்கார முதலாளிகளையும்,அவர்களுக்கு துணைபோகும் அரசையும் அவர்களின் கட்சிகளையும் எதிர்த்து போராடி ஒழிக்க வேண்டும்.மக்களின் நலனில் அக்கறையுள்ள புரட்சிக்ர அரசையும் அதிகாரத்தையும் படைக்க வேண்டும்.தமிழக் உழவர் - தொழிலாளர் தலைமையில் நான் ஒன்றாக அணிதிரள வேண்டும்.

ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்.

Wednesday, March 5, 2008

இந்திய தேசியம் பார்ப்பன தேசியமே

இந்திய தேசியம்,இந்திய தேசிய ஒருமைபாடு .பாரத தேசம் என்ற கூச்சல்கல் இடைவிடாது நமது செவிகளை தாக்கும் வண்ணம் எழுப்பப்பட்டு வருகின்றன பல்தேசிய அரசு சமூகமான இந்தியாவை ஒரு தேசிய சமூகமாக ஒரு பழமை வாய்ந்த தேசமாக காட்டும் முயற்சியில் 3500 ஆண்டுகலுக்கு முன் சிந்துவெளியில் வந்து குடியேறிய ஆரிய இனக்குழு தலைவன் ஒருவன் பெயரால் பாரத தேசம் என்று பெயரிட்டு அரசியல் சட்டத்திலும் பொறித்து கொண்டிருக்கிறார்கள் .ஆனால் இந்தியா ஒரு தேசிய சமூகம் அல்ல என்பது மட்டுமின்றி அது ஒரு அரசு சமூகமாக கூட இன்றைய எல்லைகலுடன் 1947 க்கு முன் இருந்தது இல்லை என்பதுதான் வரலாற்று உண்மையாகும் வெள்ளயர் காலனிய ஆதிக்கத்துக்கு முன் இந்தியாவில் இருந்த மிகப் பெரிய பேரசுகள் அசோக பேரரசு.துக்ளக் பேரரசு. ஒவ்ரங்கசிப் பேரரசு ஆகியவையே.இப்பேரரசுகள் கூட இந்தியாவின் இன்றைய பகுதிகல் அணைது பகுதிகலையும் கொண்டிருக்கவில்லை.அசாம் மற்றும் வட கிழக்கு பிரதேசங்கலும் தென்னிந்தியாவின் சில பகுதிகலும் இப்பேரரசுகலுக்கு உட்பட்டிருக்கவில்லை.இந்திய வரலாற்றில் இப்பேரரசுகளின் காலமும் குருகியதே.மற்ற பேரரசுகள் வ்ட இந்தியாவின் சில பகுதிகலிலோ,தென்னிந்தியாவின் சில பகுதிகலிலோ மட்டுமே இருந்தன.ஆங்கிலேயர் ஆட்சியில் பங்களாதேஸ்,நேபாளம், பூட்டான்,சிக்கிம்.பர்மா, பாக்கிஸ்தான்.இலங்கை ஆகிய நாடுகலும் சேர்ந்தே இந்தியாவாக இருந்தது, அசோகர் அக்பர் பேரரசுகளில் ஆப்கானிஸ்தானும் இருந்த்தது.வெள்ளயர்கலுக்கு முன்பு எந்த பேரரசிலும் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு பிரதேசங்களிருக்கவில்லை.

எனவே 1947க்க் பிந்திய இந்திய நாடு அதற்க்கு முன் இன்றைய எல்லைகலுடன் கூடிய அரசு சமூகமாக கூட இருந்தததில்லை.உண்மை இவ்வாறிறுக்க இந்தியா ஒரு பழம் பெரும் தேசிய சமூகம் எனக் காட்டும் முயற்ச்சியில் தரகு முதலாலித்துவ பார்ப்பனிய சக்திகல் கூட்டாக ஈடுபட்டுள்ளனர்,அவர்கலுக்கு வெவ்வெறு காரனங்கலுக்காக இந்தியாவை ஒரு தேசிய சமூகமாக காட்டுவது அவசியமாகிறதுதரகு முதலாலிகளை பொறுத்தவரை அவர்கள் ஏகாதிபத்தியங்கலுடன் கூடி குலவிக்கொண்டிருக்கும் வர்க்கம் அவர்கலுக்கு நாட்டு நலன் மக்கள் நலன் என்பதைவிட தமது பணப்பையின் நல்ன்தான் எப்பொழுதும் முக்கியமானது1857இல் நடை பெற்ற் மாபெரும் கிளர்ச்சியில் படை வீரர்கலும் விவசாயிகலும் குறுநில மன்னர்கலும் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சேட்டுகலும் தாக்கூர்கலும் ஏகாதிபத்திய கம்பெனிகலுடன் கூடி குலாவிக்கொண்டிருந்தததை வரலாறு கூறுகிறது இந்த லேவாதேவி வணிக கும்பலை சேர்ந்த தரகர்கள் தாம் பின்னர் ஏகாதிபத்தியங்கலுடன் சேர்ந்து இந்தியாவின் தொழில் துறையில் இறங்கினர்,ஏகாதிபத்தியயத்தை சார்ந்து இவற்கள் தொடங்கிய தொழில்கல் மற்றோரு வகையில் கொள்ளை லாபம் ஈட்டி தரும் தொழிகலே என்பதால் இவர்கலின் தரகுதனமை மாறிவிடவில்லை.இவ்ர்கலுடைய நலன் எப்போது நாட்டு நலன் மக்கள் நலன்கலுடனன்றி ஏகாதிபத்தியங்கலுடனே பிணைகப்பட்டிருக்கிறது இவ்வாறு தோன்றிய தரகு முதளாலிகலில் மிகப்பெர்ம்பாலோனோர் இந்து மேல்தட்டு சாதிகலை சார்ந்தவர்களக இருந்தார்கள்,இவர்கள் யாவருமேதேனும் ஒரு தேசிய இனத்துடன் கட்டுப்பட்ட சந்தை கொண்டவர்களாக இல்லை.மாறாக அணத்திந்திய சந்தை கொண்டவர்கள் .இவர்கலுடைய சந்தை நலன் பாதுகாக்கப்படுவதற்க்கு அணைத்திந்திய ஒற்றுமை பாதுகாக்கப்படுவது அவசியமாக இருக்கிறது

இதற்க்கு மாறாக பார்ப்பனிய சக்திகள் பார்ப்பன -சத்ரிய கூட்டின் மூலம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகலுக்கும் மேலாக சாதிமுறை சமுதாய அமைப்பையும் அதில் தமது தலைமையாதிக்கத்தையும் ஒட்டுண்ணி வாழ்க்கையையும் இந்தியா முழுவதும் கட்டிக்காத்து வந்துள்ளனர் இதுவரை ஆட்சியில் இருந்து வந்துள்ள எல்ல மன்னர்கலுமே அவர்கல் இந்து மதத்தினறாயினும் வேற்று மதத்த்வறாயினும் படையெடுத்துவந்து ஆட்சியை கைபற்றியவர்கலாயினும் சரி எல்லோருமே பார்ப்பனர்கலுடன் சேர்ந்து இந்து வர்ண் சாதி தர்மத்தையும் அதில் பார்ப்பனிய தலைமையாதிக்கத்தையும் ஒட்டுண்ணித்தனத்தையும் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்,இதை பாதுகாப்பதில் மவுரியர் ஆட்சியிலிருந்து நிலவிய குப்தர் சார்வாகனர்முகலாயர்.மராட்டியர் விஜயநகர அரசுகல் சேர சோழ பாண்டியர்கள் வெள்ளயர்கள் வரை யாரும் விதிவிலக்காயில்லை சுல்தான்கல் ஆட்சியில் முஸ்லிம் மதத்துக்கு மாறிய சூத்திரர்கல் தொடர்ந்தும் சூத்திரர்கலாகவே மதிக்கப்பட்டார்கள்ஷாஷகான் வேதங்கலும் கீதையும் குரான் போலவே இறை வழங்கிய மறைகள் எனக்கூறி மொழிபெயர்த்து பரப்பினார்வெள்ளையர் ஆட்சி இதற்க்கு சற்றும் குறைந்த்ததல்ல வாரன் கேஸ்டிங்ஸ் சாதி கோர்ட்டுகலை நிருவினார்மனு நூல் 1794 இல் இந்து சட்டம் என ஏற்றுக்கொள்ளப்பட்டதுஇவ்வாறு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாலர்கலுடன் கூட்டமைத்துக்கொண்டு தொடர்ந்து சாதியாதிக்க சமூக அமைப்பையும் அதில் தமது தலைமையாதிக்க ஒட்டுண்ணி வாழ்க்கையையும் பாதுகாத்து வந்துள்ள பார்ப்பன சக்திகலுக்கு இனியும் அதை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ள இந்து மதமும் அதன் அடிப்படையிலான இந்திய ஒற்றுமையும் பாதுகாக்கப்படுவது அவசியமாக படுகிறது

மொழிவழி அமைந்த மக்கள் சமூகங்கள் ,தேசிய இனங்கள் எழுச்சியுற்று அரசுரிமை பெற்ற நவீன தேசங்கலாக அமைந்து விடுமானால் அதில் ஒன்றுபட்ட இந்திய அரசியல் அமைப்பு மட்டுமல்ல இந்து பார்ப்பனிய மதமும் புதைகுழிக்கு சென்றுவிடும் அது அணைத்து இந்திய சந்தை கொண்ட தரகுமுதலாளிய வர்க்கத்தையும் இந்து பார்ப்பனிய சக்திகலையும் புதைகுழிக்கு அனுப்பிவிடும் எனவேதான் தரகு முதலாளிதுவ சக்திகலும் பார்ப்பனிய சக்திகலும் இடைவிடாது இந்திய தேசம் இந்திய தேசிய ஒருமைபாடு பழம்பெரும் பாரத தேசம் என்றெல்லாம் இடைவிடாது கூச்சலிட்டு வருகிறார்கள் அவர்கள் கூறுவதுபோல் இந்திய மக்களையெல்லாம் பிணைத்திருக்கும் அந்த ஒருமித்த பண்பாடு கலாசார ஒருமைபாடு என்பதுதான் என்ன ????????கூட்டி கழித்து பார்த்தால் பார்ப்பன சாதியை தலைமையிடமாக கொண்ட பலபடித்தான சாதியாதிக்க சமூக அமைப்பு அன்றி வேறல்ல.இந்தியாவில் இச்சாதிய அமைப்பு தலை முதல் கால் வரை பரவுயுள்ளது.அதை போலவே இச்சாதிய அமைப்புக்கு புணிதமலிக்கும் கீதையும் புரானங்கலும் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.

பார்ப்பனர் தலைமையிலான சாதியாதிக்க சமூக அமைப்புதான் பார்பனிய சமூக அமைப்பி.இச்சமூக அமைப்பு தெய்வீக தனமை பொருந்தியது.மீற முடியாதது.மீறக்கூடாதது என்ற விதிகளை ஆதாரமாக கொண்டு மனு,நாரதர் போன்றவர்கள் எழுதிய தர்ம சாத்திரங்கள் போதிக்கின்றன.இத்தர்ம சாத்திரங்களே சமுதாய சட்டங்கள்,சாதியாதிக்க நெறியை விதிக்கும் இச்சமுதாய சட்டங்களில் தலைமையிடம் வகிக்கும் பார்ப்பனர் மன்னுலக தேவர்.இச்சட்டங்களை ச்யல்படுத்தும் மன்னர் கடவுளின் அவதாரம் என்று பிரச்சாரம் செய்கின்றவையே புராணங்களும் இதிகாசங்களும் இவைதாம் இந்து மதத்தின் இலக்கியங்கள்.இந்த இலக்கியங்கள் மக்களை பார்ப்பனர் சத்திரியர்,வைசியர்.சூத்திரர் என்று நாண்கு வர்ணங்களாகவும் எண்ணற்ற சாதிகளாகவும் பிரிக்கின்றன.இதில் பார்ப்பான் எல்லோருக்கும் முதன்மையானவன்.சூத்திரனும் வர்ணமற்றவர்களான சண்டாளர்களும் எல்லோருக்கும் தாழ்ந்தவர்.முதல் மூன்று வருணத்தாரும் இருபிறப்பாளர்கள்.சூத்திரர்கள் அவர்களுக்கு அடிமை சேவகம் செய்யவே பிறந்தவர்கள்,இழி பிறவிகள்.அதனினும் இழி பிறவி சண்டாளன்,அதாவது சமுதாயத்தின் ஒட்டுண்ணிகள் உயர்பிறவிகள்உழைக்கும் மக்கள் இழி பிறவிகள்,இவை எல்லாம் இந்து இலக்கியங்கள் போதிக்கும் தர்ம நெறிகள்.இந்து இலக்கியங்கள் போதிக்கும் இந்த பார்ப்பனிய வரண சாதி தர்ம நெறிகளே இந்து பண்பாடு.இவைதாம் இந்திய மக்களை பிணைத்திருக்கும் கலாசார ஒருமைப்பாடு.ஒருமித்த கலாசாரம் என்பதெல்லாம் இதுதான்.இதுதான் இந்திய பண்பாடு இந்திய தேசிய பண்பாடு,பாரத பண்பாடு என்றெல்லாம் போற்றி புகழப்படுகிறது.

இந்திய தேசிய தலைவர்கள் என்பவர்களே இதை ஒப்ப்கொண்டிருக்கிறார்கள்.இந்திய தேசியத்தின் தந்தை காந்தி கூறினார் 'நான் ஒரு சனாதன இந்து .ஏனெனில் முதலாவதாக வேதங்களை நம்புகிறேன் புராணங்களை நம்புகிறேன் மற்றும் எல்லா இந்து மத ஆதார நூல்களையும் நம்புகிறேன்,இரண்டாவதாக நான் வர்ணாசிரமத்தையும் இன்றைய வடிவத்தில் அன்றி வேதங்கள் கூறி இருப்பதுபோல நம்புகிறேன்.மூன்றாவதாக நான் பசுவதை தடையை நம்புகிறேன்.நானகவதாக உருவ வழிபாட்டில் நான் நம்பிக்கையற்றவனாக இல்லை.தேச்சத்தந்தையின் நம்பிக்கைகளுக்கும் விருப்பத்துக்கும் மாராகவா ஒரு தேசம் உருவாகிவிட முடியும்?இந்திய தேசத்தின் சாரமே இந்து பார்ப்பனியம் என்பதை எல்லா இந்திய தேசிய தலைவர்களுமே ஒப்புகொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மொழியை திணித்ததும் இந்த தரகு முதலாளித்துவ - பார்ப்பனிய ஆதிக்க கூட்டே.தரகு முதலாளிகளுக்கு தமது அனைத்திந்திய சந்தை நலனை காக்கும் பொருளாதார காரணங்களுக்காக ஒரு பொது மொழி அவசியம்,அதே நேரத்தில் அந்த மொழி இந்து பார்ப்பனிய பண்பாட்டை பாதுகாக்ககூடியதாக இருப்பதும் அவசியம்.இந்து பார்ப்பனிய பண்பாட்டின் மொழியாக கடந்த இரண்ட்ட்யிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் மொழி சமஸ்கிருதம்.அது பார்ப்பனர்களால் பார்ப்பனிய சமுதாயத்தி கட்டிகாப்பதற்காக உருவாக்கப்பட்ட மொழி. சமஸ்கிருதம் என்றாலே செய்யப்பட்டது என்றுதான் பொருள்.இருபிறப்பாலர்களுக்காவே உருவாக்கப்பட்ட இந்த மொழி எப்பொழுதுமே மக்கள் மொழியாக இருந்ததில்லை.பார்ப்பனர்கள் மண்ணுலக தேவர்கள் என்றும் சத்திரியர்கள் கடவுளின் அவதாரங்கள் என்றும் தமக்கு தாமே கூறிகொண்டது போல அவர்களுக்காகவே அவர்கள் உருவாக்கிக்கொண்ட சமஸ்கிருத மொழிக்கு தேவ மொழி என்றும் அதன் எழதுததுவடிவுக்கு தேவநாகரி என்றும் பெயர் வைத்துகொண்டனர்.உழைக்கும் மக்களை சூத்திரர் சண்டாளர் என்று இழிவுபடுத்தி ஒடுக்கி வந்தது போலவே அவர்கள் பேசும் மொழிகளை சூத்திரபசை என்றும் நீச பாசை எனறும் இழிவுபடுத்தி ஓடுக்கினர்

பார்ப்பனியத்தின் தேசிய இன ஒடுக்குமுறை வடிவம் தரகு-முதலாளித்துவ பார்ப்பனிய சக்திகள் மேலை ஏகாதிபத்திய - பார்ப்பனிய கலாசாரத்தின் மேலாண்மையை நிறுவி தேசிய மக்களின் மொழி.கலை.இலக்கியம்.கலாசாரத்தினை நசுக்கி வருகின்ற்ன,தரகு முதலாளித்துவ -நிலபிரபுத்துவ வர்க்கங்களை சுற்றியுள்ள மிகசிறிய மேல்தட்டு சதவிகிதத்தினரின் கலாசாரம்தான் தரகு-பார்ப்பனிய கலாசாரம்,மேலை ஏகாதிபத்திய கலாசாரமும் பண்பாடும் மொழியும் வாழ்க்கைமுறையும் உயர்வாணவை விஞ்ஞானபூர்வமானவை.பார்ப்பனிய வாழ்க்கைமுறையும் தேவ மொழியும் கலை இலக்கியமும் நாகரிகமும் பண்பாடும் உயர்வானவை.புனிதமானவை,போற்றபட வேண்டியவை.அதே நேரத்தில் மிகபெரும்பான்மையாய் இருக்கும் தேசிய இன மக்களின்(உழைக்கும்) மொழி கலை,இலக்கியம் பண்பாடு அணைத்தும் இழிவானவை கைவிடபட வேண்டியவை,இது தரகு பார்ப்பனிய கலாசாரத்தின் சாரம்.தரகு-பார்ப்பனிய நெறிகள் தமது கலாசாரத்தின் ஆதிக்கத்தை நிருவியிர்ப்பதன் மூலம் தமது சொந்த தேசிய வரலாறு,தத்துவம்.பண்பாடு,மொழி.இலக்கியம் குறித்த அறியாமையையும்,தமது சொந்த தேசிய கலாசாரம் குறித்த தாழ்வு மனபான்மையையும் அணைத்து தேசிஅ இன மக்களிடையேயும் உருவாக்கி அவர்களை தமது கலாசார அடிமைகளாக்கியிருக்கின்றன

தேசிய இன மக்களின் வரலாறும்,பண்பாடும் பார்ப்பனிய வேத வரலாற்றின்.பண்பாட்டின் பகுதிகளாக கீழ்பட்டதாக ஆக்கபட்டிருக்கிறது,தேசிய மொழிகள் அனைத்தும் பார்ப்பனிய தேவமொழிக்கு கீழ்பட்டதாக்கபட்டிருக்கிறது.அனைத்து உழைக்கும் மக்களும் பார்பனர்களுக்கு கீழ்ப்பட்ட சாதிகலாக்கபட்டிருக்கிறார்கள்,வாழ்க்கைத்தரத்தில் கீழாகவும் கல்வியறிவற்ற பாமரர்கலாகவும் ஆக்கபட்டிருக்கிறார்கள்

தேசிய அரசுரிமை எல்லைகள் இந்து பார்ப்பனிய அரசு எல்லைகளால் விளுங்கபட்டுள்ளன, ஆங்கிலமும் இந்தி மொழியும் ஆதிக்கபீடத்தில் இருக்க தேசிய மொழிகள் பிராந்திய மொழிகளாக நசுக்கபடுகின்றன, தேசிய மொழிகளும் கலை இலக்கியங்களும் ஆங்கில -பார்ப்பனிய மொழி கலை இலக்கியங்களால் சிதைக்கபடுவதும்.ஆங்கில,பார்ப்பனிய வாழ்க்கைமுறையை மேற்கொள்வதும் பெருமைக்குரியதாக்கபட்டிருக்கின்றன

தேசிய இனமாக உருவாகி வரும் பழங்குடி மக்கள் சமூகங்களில் இந்து பார்ப்பனிய கலாச்சாரத்தையும்.இந்தி மொழி ஆதிக்கத்தையும் திணித்து அவர்களுடைய மொழி கலாச்சாரத்தை ஒழித்து கட்டுவதன் மூலம் அவர்களை இந்திய தேசியத்தின் அங்கமாக்கி வருகின்றன.மொத்தத்தில் தரகு-பார்ப்பனிய சக்திகள் தேசிய இன மக்கள் சமூகங்களை இந்திய தேசியத்தால் படிப்படியாக விழுங்கி வருகின்றன,தேசிய இன மக்களின் தேசிய தனித்தன்மைகளையும் உணர்வையும் அழித்து அவற்றின் சுய வளர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் முடமாக்கி அடிமைப்படுத்தி வருகின்றன.

சாளரபட்டியில் சாதி வெறியாட்டம்

சாளரபட்டியில் சாதி வெறியாட்டம்
திட்டமிட்டே தூண்டப்படும் சாதிவெறி தாக்குதல்களால் கோவை ஈரோடு மாவட்டங்கள் போர்க்களமாக மாறிக் கொண்டிருக்கின்றன.
ஈரோடு நம்பியூரில் மண்டபத்தை வாடகைக்கு கேட்ட அருந்ததிய தோழர் மாரியப்பனை சாதியை சொல்லி விரட்டி அடித்தது ஆதிக்க சாதி வெறி கூட்டம்.
பாதிக்கபட்ட தாழ்த்தபட்டோர் மீது வழக்குகள் போட்டும் ,ஊருக்குள் நுழைய தடைவிதித்தும் ஆதிக்க சாதியினருக்கு துணை நின்றது காவல்துறை.உண்மையை மக்களிடம் கொண்டு செலல முயன்ற தாழ்த்தபட்டோருக்கு தடைவிதித்தும்.சாதிவெறியர்களின் கடையடைப்பு - ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கியும் துரோகம் இழைத்தது அரசு நிர்வாகம்.
கோவை சட்டகல்லூரியில் தாழத்தபட்ட மாணவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்துகிறது.சாதி வெறிபடை தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மதியழகன் மீதே வழக்கு போட்டது காவல்துறை.சமரச பேச்சு நாடகம் ஆடி பூசி மெழுகியது கல்லூரி நிர்வாகம்.
கோவை சட்டகல்லூரியில் தாழத்தபட்ட மாணவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்துகிறது.சாதி வெறிபடை தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மதியழகன் மீதே வழக்கு போட்டது காவல்துறை.சமரச பேச்சு நாடகம் ஆடி பூசி மெழுகியது கல்லூரி நிர்வாகம்.
பற்றிய நெருப்பு படர்ந்து மற்றுமொரு சாதி பேயாட்டம் உடுமலை - சாளரப்பட்டியில் நடந்துவிட்டது.இன்னமும் நீடிக்கும் இரட்டைகுவளை முறையை நீக்ககோரியும்,ஆன்டவனை கும்பிட கோவிலுக்குல்லும்- அரசுக்கு சொந்தமான சமுதாய கூடத்துக்குள்ளும் தங்களை அனுமதிக்க கோரியும் வட்டாச்சியரிடம் மனு கொடுத்தனர் அருந்ததிய மக்கள்.
வன்னிய ஆண்டைகளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.தங்களின் சாதிகார ஏழைகளை எல்லாம் வெறியேற்றி தூண்டிவிட்டனா.அருந்ததிய மக்களின் குடிசைகள் அணைத்தும் உடைத்துகொளுத்தபட்டன.5 வயது பாலகன் விக்னேசு முதல் 80 வயது பாட்டி வரை எல்லோரும் அடித்து நொறுக்கப்பட்டனர்.
குறைந்தபட்ச மனிதநேயத்தோடு ஒரு குவளை முறையை நடைமுறைப்படுத்திய மேல்சாதிகாரரின் கடையும் நொறுக்கப்பட்டு அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டது.

இவை அணைத்துக்கும் மேலாக அருந்ததிய மக்களுக்கு பால்.தண்ணீர்.மளிகை பொருள் எதையும் தரக்கூடாது என்றும் த்டைவிதித்து அம்மக்களின் வாழும் உரிமையையும் பறித்துவிட்டனர் சாதி வெறி பிடித்த பயங்கரவாதிகள்.
தேர்ந்தெடுத்த வன்முறை தாக்குதலாலும்.திட்டமிட்ட சதிசெயல்களாலும் சாதியகொடுமைகளை நிகழ்த்தும் குற்றவாளிகளை தண்டிக்காமல் பாதிக்கபட்டவர்களுக்கு எந்த உதவியும் வெளியில் இருந்து கிடைக்காமல் தடுத்தது அரசு.உதவிட ஓடிவந்த தாழ்த்தபட்ட மக்களின் தலைவர்கள் 10 பேரை கைது செய்து சிறையிலடைத்தது காவல்துறை.
மறைமுகமாக காவல்துறையும் - அரசும் துணையிருப்பது போதாது என்றும் தங்களின் வெறியாட்டத்துக்கு ஆதரவாக வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் காட்டுகூச்சல் போடுகின்றனர் சாதி ஆதிக்க வெறியர்கள்
ஏன் இந்த வெறியாட்டம் ?எதற்காக அரசு துணை போகிறது?

குமுறிகொண்டிருந்த தமிழ்தேச மக்களின் இன மான் உணர்வு எரிமலையாய் இன்று வெளிவர தொடங்கி இந்திய - தமிழக அரசுகளை அச்சுறுத்துகிறது.ஈழத்தமிழர்களுக்கு உத்வுவது இந்தியாவுக்கு செய்யும் துரோகம் என்னும் பூச்சாண்டி மிரட்டல்களை எல்லாம் தமிழர்கள் காலில்போட்டு மிதித்து நசுக்க தொடங்கிவிட்டனர்.நதிநீர் சிக்கலானாலும்,கச்சதீவு உரிமை மீட்பு போராட்டமானாலும் தமிழர்கள் ஒன்று திரள தொடங்கி விட்டனர்.இராமன் பாலம் போன்ற மத மாயைகளை உடைத்து தமிழர்களின் பகுத்தறிவு பயணம் தொடங்கிவிட்டது.
இத்தணை உணர்வுகளுக்கும்.இதற்கான போராட்டங்களுக்கும் முக்கிய காரணமானவர்கள் தாழ்த்தபட்ட மக்களே.மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களோடு களம் காண்பவர்கள் சட்டகல்லூரி மாணவர்களே.
தமிழ்தேசம்.தன்மானம்,என்ற உணர்வுகளை வளரவிட்டால் இந்திய சிறைசாலை இருக்குமா?தமிழக மண்ணையும் மக்களையும் கொள்ளை அடிக்க முடியுமா?அரசும்.அரசியல்வாதிகலும் கொழுத்து திரிய முடியுமா?
என்ன செயலாம் என்று திகைத்து நின்ற இவர்களை சாதி வெறி ஆதிக்கவாதிகள் காப்பாற்ற தொடங்கியுள்ளனர்.

சாதிவெறி ஆதிக்கவாதிகள் ஏன் பேயாட்டம் போடுகின்றனர்?
நிலங்களை வைத்துகொண்டு,வேளாண் தொழிலை அடிப்படையாககொண்ட இவர்களின் கொட்டம் இன்று ஆட்டம் காண தொடங்கிவிட்டது.பன்னாட்டு விதை,உரம்.பூச்சி மருந்து கொள்ளையாலும்.ரிலயன்ஸ் ஃப்ரெஷ் போன்ற காய்கறி வணிகத்தில் கால்பதித்த கொள்ளையர்களாலும் இவர்களின் பண்ணையார்த்தனம் சவப்பெட்டிக்கு அனுப்பப்படுகிறது.
இன்னொருபுறம் பனியன் மற்றும் விசைத்தறி தொழில்சார்ந்த வேலை வாய்ப்புகளை நோக்கி தாழ்த்தபட்ட மக்கள் பண்ணைகளில் இருந்து வெளியேறிகொண்டிருக்கின்றனர்.இதனால் சாதி ஆதிக்கவாதிகள் தங்களின் சுகபோக வாழ்வும் சுரண்டலும் பறிபோவதை கண்டு பதறி துடிக்கிறார்கள்.
நெடிய போராட்டத்தின் மூலம் பெற்ற குறைந்தபட்ச கல்வி மற்றும் சீர்த்திருத்த வாய்ப்புகளால் தாழ்த்தபட்ட மக்கள் விழிப்படைந்து தங்களுக்குல் அமைப்பாக தொடங்கியுள்ளனர்.இதனால் மக்கள் விரோதிகளான ஓட்டுபொறுக்கி கட்சிகளின் ஆயுள் எண்ணப்படுகிறது
எனவே சாதிவெறி ஆதிக்கவாதிகளும்,ஓட்டுபொறுக்கி கட்சிகளுக்ம் சேர்ந்துகொண்டு தாழ்த்தபட்ட மக்கள் மீது போர் தொடுக்கின்றன.நம்பியூரில் அருந்ததிய மக்களுக்கு எதிராக சாதி ஆதிக்கவாதிகளோடு தி.மு.க அ.தி.மு.க காங்கிரசு,பா.ம.க,தே.மு.தி.க,கொங்கு பேரவை என அணைத்து கட்சிகளும் கூட்டு சேர்ந்து ஆட்டம் போட்டன.மக்கள் சாதிசண்டையில் சிக்கிகொள்வது ஆளும்வர்க்க கொள்ளைக்கு வசதியாக இருப்பதால் அரசும்.காவல் துறையும் சாதி வெறியர்களுக்கு தூபம் போடுகிறது.

சாதி வெறியாட்டட்தில் ஈடுபடும் உயர்சாதி உழைக்கும் மக்களே
உயர்சாதி திமிர் உங்கள் கண்ணை மறைப்பது தெரியவில்லையா?உங்களின் வாழ்க்கையை பறித்தவர்களுக்கு நீங்களே அடியாள் படையாக இருப்பது வெட்க்ககேடு இல்லையா?
உங்களின் வேளாண் தொழிலும்.சிறு தொழிலும் அழிந்து நீங்கள் பஞ்சைபராரியாக மாற யார் காரணம்?உங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்காமல் கல்வியை விலை பேசுவது யார் ?இட ஒதுக்கீடு தடுக்கப்படுவது எப்படி?
உலகமயமாக்கல் என்ற பெயரில் நமது வளங்கள் கொள்ளை போகின்றன.அதன் வேலை வாய்ப்புகளையும்.வசதிகளையும் பார்ப்பன -உயர்சாதி பணக்காரர்கள் பங்குபோட்டுகொள்கின்றனர்.
இதை அறியாமல் நீங்களோ சாதி திமிரால் உங்களின் பிள்ளைகளுக்கு பிறக்கும்போதே கல்லறைகளை சம்பாதித்து தருகிறீர்கள்.

ஆனால் தாழ்த்தபட்ட மக்கள் உங்களுக்கும் சேர்த்து இட ஒதுக்கீட்டுக்காக போராடுகிறார்கள்.
சாதிய கொடுமைகளை எதிர்ப்பதன் மூலம் உங்களை நாகரீக மனிதர்களாக மாற்றுகிறார்கள்.
இந்த மண்ணையும் மக்களையும் காக்கும் போராட்டங்களில் முன்னனியில் இருக்கிறார்கள்.
ஆதிக்க சாதி உழைக்கும் மக்களே
உயர்சாதி திமிரை ஒழிப்போம்
சாதிவெறி ஆதிக்கவாதிகளை புறக்கணிப்போம்
தாழ்த்தபட்ட தமிழரோடு உழைக்கும் தமிழராய் ஒன்றினைவோம்
அரசு மற்றும் ஆதிக்கசாதிவாதிகளின் சதியை முறியடித்து
புரட்சி தமிழ்தேசம் படைப்போம்

புரட்சிகர இளைஞர் முன்னனி - கோவை

Saturday, January 12, 2008

சிறப்பு பொருளாதார மண்டலங்கள்

தமிழக மக்களே எச்சரிக்கை

பாழும் வயிற்றுப் பாட்டுக்காக
வாழும் நிலத்தை பறிகொடுப்பதா

பெற்ற் தாயை விட்டு பிழைப்பவர் போல
பிறந்த மண்ணை விற்றுப் பிழைப்பதா

மண்ணையும் மானத்தையும் இழந்து விட்டு
நடுத்தெருவில் நாய்கள் போல திரிவதா

பண முதலைகலுக்காக மக்களை பலிகொடுக்கும்
மானங்கெட்ட அரசுகளை விட்டு வைப்பதா

என நெல்லை தூத்துக்குடி மக்கள் உயிர் வாழும் உரிமைக்கான போராட்டத்தில் குதித்துள்ளனர்

40000 குடும்பங்கலை விரடியடித்துவிட்டு அவர்களின் 12000 ஏக்கர் நிலப்பரப்பை பிடுங்கி மேற்கு வங்க மக்களை கொன்று குவித்த டாடாவுக்கு தாரைவார்க்க துடிக்கிறது துரோகி கருணானிதியின் தமிழக அரசு

இப்பகுதி எங்கும் பரவி கிடக்கும் டைட்டானியம் டை-ஆக்ஸைடு என்ற மதிப்பு மிக்க இயற்க்கை கனிம வளத்தை கொள்ளையடிக்கவே இக் கொலைகார கூட்டணி அலைபாய்ந்துகொண்டிருக்கிறது நெல்லை தூத்துக்குடியில் மட்டுமல்ல தமிழ்நாடு எங்கும் இயற்க்கை செல்வங்கள் கொட்டிக் கிடக்கிறது.

நெய்வேலியில் நிலக்கரி நரிமணத்தில் பெட்ரோல் தஞ்சை முதல் பாண்டிச்சேரி வரையிலான கற்கறையை ஒட்டிய பகுதிகலில் புதைந்து கிடக்கும் எண்ணற எண்ணெய் கிண்னற்கள்.வட தமிழகமெங்கும் விறவிக் கிடக்கும் கிரானைட் கல் பாறைகள்.தேயிலை தோட்டங்கலுக்காக அழிக்கப்பட்டதையும் தாண்டி செழித்துக் கிடக்கும் காடுகள்,சந்தனம் மற்றும் விலை உயர்ந்த மரங்கள்.அரிய மூலிகை செடிகள் .வளமான விளை நிலங்கள்.ஆறுகள் மற்றும் நீராதாரங்கள்.வசதியும் வாய்ப்பும் நிறைந்த துறைமுகங்கள் மீன் மற்றும் கடல் வளங்கள்.தூத்துக்குடி முத்து பல நிறத்தில் மின்னி விலை போகும் குமரி கடல் மணல்.பலவகை கணிம தாதுக்கலை கொண்டு மலைகலாஇ உயர்ந்து கிடக்கும் குமரி மாவட்ட மணவாலக் குறிசியின் மணல் குவியல்கல் என எங்கும் எத்திசையும் தமிழ்நாடு முழுவதும் இயற்க்கை செல்வங்கள் இறைந்து கிடக்கின்றன.

எல்லாமே அள்ள அள்ள குறையாத அமுத சுரபிகள்.வெட்ட வெட்ட கொட்டிக்கொண்டேயிருக்க்கும் செல்வ சுனைகள்.இவைகலை ஒன்று விடாமல் விழுங்குவதற்க்காகத்தான் பணக்கார நாய்கள் அரசோடு பல தொழில் ஒப்பந்தங்களை போடுகின்றன

டைட்டானியத்துக்காக 12000 ஏக்கரை பட்டாப் போட டாட்டா துடிப்பது போல அடுத்தடுத்து தமிழ்நாடு முழுவதையும் பல பண முதலைகல் பங்கு போட்டுக்கொல்லும்,கார் தொழ்ற்சாலை க்லர் ஃபிலிம் தொழிற்சாலை.செல்போன் தொழிற்சாலை மென் பொருள் பூங்கா ,மருந்து ரசாயன தொழிற்சாலை.பெப்சி கோக் என எண்ணற்ற சிறப்பு பொருளாதார மண்டலங்கலை அமைக்கவும் உணவு மற்றும் காய்கறிக்கான விவசாய சிறப்பு மண்டலங்களமைக்கவும் பணவெறியர்கலுக்கு மொத்த தமிழகமும் தேவை

பல்லாயிரக்கனக்கான நிலப்பரப்பில் தொழில் தொடங்கி சில நூறு பேர்கலுக்கு வேலை தருவார்களாம் .முழுக்க முழுக்க எந்திரமயமாக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப உற்ப்பத்தியில் பள்ளிக்கூடத்தையே தாண்டாத கோவன ஆண்டிகளான நமக்கென்ன வேலை கிடைக்கும்? ஐ ஐ டி, ஐ ஐ எம் போன்ற உயர் தொழில்நுட்ப படிப்புகலை தங்கலுக்கு மட்டுமே உடையது என பட்டாப் போட்டுக்கொண்ட பணக்கார நாய்கள் பார்ப்பனர்கள் உயர் சாதியினர் இவ்வேலைகலை கைப்பற்றிக்கொண்டு பணமுதலைகலுக்கு சேவை செய்து சொகுசு கார்கலில் பவனி வருவார்கள்.

இருப்பதை இழந்துவிட்டு நாம் எங்கு போவது, இதோ பிழைப்பு தேடி கூலிகலாக போன பீகார் மக்களை சுட்டுக்கொல்கிறார்களே அசாமில் அதை போல நாமும் நாடோடிகளாக்கப்பட்டு பிற இனத்தவரிடம் குட்டுப்பட்டு சூடுபட்டு சாக வேண்டியத்துதான்.இப்போதே கருனாடகாவிலும் மராட்டியத்திலும் தமிழர்கள் அடிவாங்கி உதைவாங்கி அனாதைகளாக செத்துக்கொண்டிருக்கிறார்கள் இதை உணர்ந்துதான் நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்கள் தலைமுறை தலைமுறையாக தங்களை தாலாட்டி சீராட்டி வளர்த்த தாய் மண்னை எந்த நாயும் தொடுவதற்க்கு விடமாட்டோம் என பொங்கியெழுந்து போராடுகின்றனர்.

ஆனால் அரசும் ஆளும் வர்க்கங்கலும் ஓட்டுப் பொறுக்கி கட்சிகலும் நிலக் கொள்ளையை தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு உருவாக்கம் முன்னேற்றம் எனக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிகின்றனர்.டாட்டா பிர்லா அம்பானிகலின் பங்காளியாக பெருத்துவிட்ட கருணாநிதி தமிழ்நாட்டை துண்டு போட்டு விற்பதுதான் முன்னேற்றத்துக்கான பாதை என்றும் இதற்கெதிராக போராடினால் எனது அனுகுமுறை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என மிரட்டுகிறார்.

குறுகிய கால அரசியல் கொள்ளை மூலமே எண்ணற்ற எஸ்டேட்டுகல் பழத்தோட்டங்கள், பங்களாகள், நட்ச்சதிர உணவகங்கள் என மக்களின் சொத்துக்கலை அபகரித்த செயலலிதா டாட்டாவின் நிலக் கொள்ளையை எதிர்ப்பதாக நாடகமாடுகிறார்,

மகன்.மருமகள் என அடுத்தடுத்து குடும்பத்தயே கட்சி பதவிகலில் அமர்த்தி குறுநில மன்னர் போல் ஆட்டமாடும் ராமதாசு மக்களிடம் நிலங்கலை கொடுக்க கூடாது என்றும்,அரசிடம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் ஆலை தொடங்க ஆலோசனைகலை கூறியும் குழப்பி மீன் பிடிக்க நினைக்கிறார்.

மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மக்களை படுகொலை செய்து டாட்டாவுக்கு அடியாள் படையாக செயல்படும் சி.பி.எம். கட்சி இங்கு மவுனமாக இருந்து கொண்டு எஜமானனை பாதுகாத்து மக்களுக்கு துரோகம் செய்கிறது.

தன்மானம் மிக்க தமிழ் மக்களே

தனியார்மயம்.தாராளமயம்.உலகமயம்,என்னும் அழிவு பாதை மூலம் பண முதலைகல் மக்களின் உழைப்பால் விளைந்த பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விழுங்கி விட்டன.லாப வெறி பேயாய் பிடித்து மக்களின் நிலங்கலையும்.இயற்க்கை வளங்களையும் சூறையாட தொடங்கி விட்டன.கொள்ளையர்களின் பிடியில் மண்ணை இழந்தால் என்னவாகும்?

திருப்பூரின் பனியன் தொழில் முதலாளிகலை பாருங்கள்.விவசாயிகலாக இருந்து பனியன் தொழிலில் அடி எடுத்து வைத்தவர்கள் லாப வெறி பிடித்து கோவை-ஈரோடு மாவட்டங்கலின் நிலம் அணைத்தையும் நஞ்சாக மாற்றியதோடு புகழ் பெற்ற நொய்யல் ஆற்றையும் அழித்துவிட்டனர்.தங்களதுசொந்த ரத்தங்கலான விவசாயிகளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று விடுகின்றனர்,இன்மண்ணில் பிறந்தவர்கலின் பேராசையால் இத்துணை பெருங்கேடுகள் விளைந்தபோது அந்நியர்கள் என்ன செய்வார்கள் எண்ணிப்பாருங்கள் ஆகவே டாட்டாவின் நிலக்கொள்ளைக்கு எதிராக போராடுவது நெல்லை தூத்துக்குடிக்கு மட்டுமேயான பிரச்சனையல்ல,விமான நிலைய விரிவாக்கம்.சாலை விரிவாக்கம்,உள் கட்டுமான சீரமைப்பு.சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என தமிழ் நாட்டையே சூறையாடும் மொத்த தமிழ்தேசிய பிரச்சனை.

எனவே கண் முணே நமது வாழ்க்கை களவாடப்படுவதை கண்டு

பொங்கி எழட்டும் தமிழ்த்தேசம்

இந்திய சிறையை நடுநடுங்கச் செய்யட்டும் நமது போராட்டம்

தமிழக மக்களே மேற்கு வங்க மக்களை கொன்று குவித்த டாட்டாவோடு கருணாநிதி கூட்டுநிலக் கொள்ளையர்கலின் பிடியில் தமிழ்நாடுதாய் மண்ணை காக்க சூழுரைப்போம்தமிழ் தேச விடுதலையை முன்னெடுப்போம்

Friday, January 11, 2008

இந்தியா ஒரு பல்தேசிய அரசு சமூகம்

இந்தியா ஒரு பல்தேசிய அரசு சமூகம்

அரசு சமூகம் என்பது தேசிய சமூகத்திலிருந்து வேறுபட்டதாகும்.தேசிய சமூகத்தில் மக்கள் ஒரு பொதுமொழியை கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அரசு சமூகத்தில் அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமிலை.இங்கு பொது மொழி என்று குறிப்பிடப்படுவது மக்கள் பேசும் மொழியேயன்றி அரசு நிர்வாகத்தில் இருக்கும் மொழி அல்ல.

இந்தியா ஒரு தேசிய சமூகமல்ல என்பதில் விவாதத்துக்கு இடமில்லை.இங்கு பல்வேறு மொழிகளை பேசுகின்ற தேசிய இனங்கள் இருக்கின்றன.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவான தேசிய இனம்,மத்திய காலத்திலும் அதன் பின்னரும் உருவான தேசிய இனங்கள்.சமீபத்தில் தேசிய இனங்களாக உருவாகிய உருவாகி வருகிற மக்கள் சமூகங்கள் என பற்பல உள்ளன.

உதாரணமாக தமிழ்த் தேசிய இனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவான மிக பழமையான தேசிய இனம்.தெலுங்கு கன்னடம்,மராத்தி,குஜராத்தி.ஒரியா வங்காளி,மலையாளம்.பஞ்சாபி,அசாமி.காஸ்மீரி போன்றவை மத்திய காலத்திலும் அதன் பின்னரும் உருவான தேசிய இனங்கள்.எவ்வாறாயினும் இவை எல்லாம் வளமான வளர்ச்சியடைந்த மொழியையும் இலக்கியங்களையும் கொண்டுள்ள தேசிய இனங்களாகும்.

இவை எல்லாம் மைய அரசின் கீழான மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருப்பினும் மைய அரசு இவற்றின் தேசிய தகுதியை அங்கீகரிக்கவில்லை.இவற்றின் மொழிகள் பிரதேச மொழிகள் என்றே குறிப்பிடப்படுகின்றன.இவற்றின் பிரதேச எல்லைகளை மைய அரசு அம்மக்களின் சம்மதம் இன்றியே மாற்றி அமைக்கும் அதிகாரம் பெற்றுள்ளது,

இவை தவிர வட இந்தியாவில் இருக்கும் உத்திரபிரதேசம்,மத்தியபிரதேசம்.ராஜஸ்தான்.பீகார் போன்ற மாநிலங்கள் மொழி வழியில் அமைக்கப்பட்ட மாநிலங்கள் அல்ல.

அதே போல வடகிழக்கு இந்திய பிரதேசங்கலும் மொழிவழி நிர்வாக அமைப்புகளாக பிரிக்கபட்டவை அல்ல.இவற்றில் எண்ணற்ற தேசிய இனங்களும் தேசிய இனங்களாக உருவாகி வரும் மக்கள் சமூகங்கலும் உள்ளன. அவற்றில் பல வளர்ச்சியடைந்த மொழியையும் இலக்கியங்களையும் கொண்டுள்ள தேசிய இனங்களாகும்.எனினும் அவற்றை மொழிவழி மாநிலங்களாககூட மைய அரசு அனுமதிக்கவில்லை.

மிகக்கடுமையான மக்கள் போராட்டங்கலுக்கு பிறகு மணிபுரி,திரிபுரா.மேகாலயா,நாகலாந்து.மிஜோ. போன்ற மாநிலங்கள் அமைக்கபட்டுள்ளதுடன்.மணிபுரி.நேபாளி,கொங்கணி மொழிகளுக்கு பிரதேச மொழித் தகுதி அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ளது.மணிபுரி மக்கள் தொகை 8 லட்சம்.நாகலாந்து மக்கள் தொகை 8 லட்சம்.மிஜோரம் 5 லட்சம்.கொங்கணிகள் 15 லட்சம்.நேபாளிகள் 14 லட்சம்.இவற்றில் மணிபுரியும் நேபாளியும் வளர்ச்சிய்டைந்த மொழிகள்.நாகலாந்தில் தற்போதுதான் பொதுமொழி ஒன்று (நாக்மிஸ்) உருவாகி வருகிறது.எனினும் இவர்களுடைய கடுமையான போராட்டங்களினால் தனிமாநிலங்களாக அங்கீகரிக்கபட்டிருக்கிறார்கள்,இவற்றை விட பன்மடங்கு மக்கள் தொகையை கொண்ட வளர்ச்சியடைந்த மொழியையும் இலக்கியங்களையும் கொண்டுள்ள பற்பல மக்கள் சமூகங்கள் வட iந்தியாவில் மாநில தகுதிகூட மறுகபட்டுள்ள நிலையில் உள்ளன.

உத்திரபிரதேசத்தில் மைதிலி கடிபோலி மொழிகள் பேசும் மக்கள் தனிதனி மாநிலங்களாக அமையும் தகுதி படைத்தவர்கள்.போஜ்புரி,மைதிலி,மகதி மொழி பேசும் மக்கள் 160 லட்சம் பேர் பீகாரில் உள்ளனர்.மேலும் பிலி மொழி பேசுவோர் 53 லட்சம்.முண்டாரி மொழி பேசுவோர் 12 லட்சம்,கோண்டி மொழி பேசுவோர் 52 லட்சம்,குருக் மொழி பேசும் ஓராக்கள் 17 லட்சம்,காரிபோலி பேசும் மக்கள் 16 லட்சம்,போடோக்கள் 6 லட்சம், தோக்கிரிகள் 13 லட்சம் கோர்காலியர்கள் 14 லட்சம், துளுவர்கள் 11 லட்சம், சந்தால் மொழி பேசுவோர் 2 கோடி என் எண்ணற்ற தனிதனியான மொழியையும் பண்பாட்டையும் கொண்டுள்ள மக்கள் சமூகஙகள் வடமாநிலங்களில் உள்ளன.

வடமாநிலங்களில் குறைந்தபட்சம் இரண்டுடஜன் மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கபட வேண்டுமென்று ராகுல் சாங்கிருத்தியாயன் கோரினார் என்பது அங்குள்ள தேசிய இனங்களின் எண்ணிக்கையை புரிந்துகொள்ள உதவுவதாகும்,ஆனால் நாகா,மிஜோ,மணிபுரிகளை விட அதிகமான மக்கள் தொகை கொண்ட மிக பல மக்கள் சமூகங்கள் தேசிய இனங்களாக அங்கீகரிக்கபடவில்லை என்பதோடு அவற்றுக்கு மாநில நிர்வாக தகுதிகூட வழங்கபடவில்லை,எனினும் தங்கள் மொழிகலுக்கு அரசியல் சட்ட தகுதி கோருவது,மாநில நிர்வாக தகுதி கோருவது என்ற வெவ்வேறு வடிவில் வெவ்வேறு அளவில் இந்த மக்கள் சமூகங்களில் கோரிக்கைகலும் போராட்டங்களும் தற்போது எழுந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறு இந்தியா பழமையான வளர்ச்சிய்டைந்த பல்வேறு தேசிய இனங்களையும் சமீபத்தில் தேசிய இனங்களாக வள்ர்ச்சியடைந்த வளர்சியடைந்து வருகிற எண்ணற்ற மக்கள் சமூக்ங்களையும் கொண்ட ஒரு பல்தேசிய அரசு சமூகமாக இருக்கிறதேயன்றி தேசிய சமூகமாக இல்லை.
இவ்வாறு வேறுபட்ட வளர்சி மட்டங்களுடனும் வரலாறுடனும்,கலை, இலக்கிய,பண்பாட்டுடனும் திகழும் தேசிய இனங்கள் அணைத்தும் முழுமையான நவீன தேசங்களாக வளரும் கட்டத்தில் வரலாற்று போக்கில் இருக்க்கின்றன,இந்த நிகழ்சிபோக்கின் வரலாற்று கட்டத்தின் நிறைவின் ஊடாகவே இந்தியாவில் சனனாயக புரட்சி வெற்றியடைய முடியும்


நன்றி தோழர் கே.எம்.

Saturday, January 5, 2008

தமிழர்களாக வாழ்வது குற்றம் என்றால் துணிவுடன் அதை தொடர்ந்து செய்வோம்

தமிழர்களாக வாழ்வது குற்றம் என்றால் துணிவுடன் அதை தொடர்ந்து செய்வோம்

நமக்கு மிக அருகாமையிலே மாபெரும் மனித படுகொலை நடந்துகொண்டிருக்கிறது.கொல்லப்படுபவர்கள் நமது சகோதர தேசிய இனமான ஈழத்தமிழ் மக்கள் .அமெரிக்கா.இந்தியா,பாகிஸ்தான்,சீனா என உலகப்பயங்கரவாதிகளோடு கூட்டு சேர்ந்து கொண்டு சிங்கள வெறிப்படை ஈழத் தமிழர்களை கொன்றொழிக்கிறது.

ஈழத்தமிழ் சமூகத்தை அழிவிலிருந்து காப்பதற்கு உயிரை கொடுத்து போராடுகின்றனர் விடுதலைப்புலிகள்.

நாம் ஈழ சகோதரர்களுக்காகப் போராடவில்லை,அவர்களின் துன்பத்தை கண்டு இரக்கப்படுகிறோம்.அவர்களின் மரணத்துக்காக அழுகிறோம்.அழுவதற்கு கூட அடிமைகளுக்கு உரிமை இல்லை என்று உத்தரவு போடுகின்றன இந்திய - தமிழக அரசுகள்.

ஆனால் சிங்கள வெறிப்படைக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிகொண்டும்,எப்படியெல்லாம் சித்திரவதை செய்து ஈழத்தமிழரை கொலை செய்யலாம் என்றும் என்னவெல்லாம் கொடுமைகள் செய்து ஈழத்தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தலாம் என்றும் சிங்கள வெறியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கிறது இந்திய அரசு.

இதை தட்டி கேட்க வக்கில்லாமல் கூட்டணி அமைத்து கொட்டமடிக்கிறது தமிழக அரசு.

இனியும் நாம் இந்தியனாக இருக்க வேண்டுமா ?

தன்மான போராளி தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணை காவிகூடாரமாக மாற்றியே தீருவோம் என்று இந்து மதவெறி பயங்கரவாதிகள் தமிழ்நாட்டை தாக்க தொடங்கியுள்ளனர்.கையெடுத்து கும்பிடவோ,மனமுருகி வேண்டி ஏமாறவோ கூட லாயக்கற்று கடலுக்குள் இருக்கும் மணற்திட்டை இராமன் பாலமென கூறி மக்களை மடையர்களாக்குகின்றனர்.இதை காரணம் காட்டி கருநாடக எல்லையில் இரண்டு தமிழர்களை உயிரோடு எரித்து கொலை செய்தனர்.தமிழக முதல்வரின் தலைக்கு விலை வைத்தனர்.தமிழ்நாட்டை இன்னொரு குஜராத்தாக மாற்றத் துடிக்கின்றனர்.

இதனை கண்டிக்கவோ,காரணமானவர்களை தண்டிக்கவோ நீதிதுறை.காவல் துறை போன்ற எந்த துறைக்கும் திராணியில்லை.

ஆனால் நாங்கள் இந்துவுமில்லை இந்தியனுமில்லை - நாங்கள் தமிழர்கள் என தமிழ்நாடு போர்குரல் உயர்த்தியவுடன் பார்ப்பன உச்சிகுடிமிகளின் நீதிமன்றம் கோபத்தில் தாண்டவமாடியது.தமிழர்கள் தன்மானம் பகுத்தறிவு பேசுவது குற்றம்: பார்ப்பன கட்டுகதைகளை நம்ப வேண்டும்.இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பதற்கு முட்டாளாக இருக்க வேண்டும் என உத்தரவு போட்டது.

ஈராயிரம் ஆண்டுகலுக்கும் மேலாக நம்மை ஒடுக்கி சுரண்டி கொழுத்து வரும் பார்ப்பனியத்தின் அதிகார குடுமியை அறுத்தெறிய வேண்டாமா?

இனியும் நாம் இந்துவாகவும் இந்தியனாகவும் இருக்க வேண்டுமா?

சட்டமன்றம்.பாராளுமன்றம்,நீதிமன்றம்,நடுவர் மன்றம் என எந்த மன்றத்துக்கு போனாலும் காவிரியில் கடுகளவு நீரும் தரமாட்டோம் என அடாவடி செய்கிறது கருநாடக அரசு.

கடலிலே கொட்டினாலும் தமிழர்களின் தவித்த வாய்க்கு துளி நீரையும் தராமல் முல்லை பெரியாறையும்.பவானியையும் முடக்கியே தீருவோம் என வஞ்சகம் செய்கிறது கேரள அரசு.

தட்டி கேட்க நாதியில்லாத தமிழர்களுக்கு நாங்கள் மட்டும் தண்ணீர் தர முடியுமா என் பாலாறை தடுத்து நிறுத்துகிறது ஆந்திர அரசு.

எந்த சிக்கலையும் தீர்க்கவிடாமல் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது இந்திய அரசு,கையாலாகாத்தனத்தோடு பல்லை இளிக்கிறது தமிழக அரசு.

இனியும் நாம் இந்தியனாக இருக்க வேண்டுமா?

இதுவரை நாம் இழந்த்தது போதாதா?

கச்சத்தீவை இலங்கையிடம் இழந்தோம்

பச்சை தமிழனின் பச்சை துரோகத்தால் பீர்மேடு,தேவிகுளம் பகுதிகளை இழந்தோம்.

தங்கவயல் வெங்காலூரை கருநாடகத்திடம் இழந்தோம்.

வளமிக்க நமது காடுகளை எல்லாம் தேயிலை தோட்ட கொள்ளையர்களிடம் இழந்தோம்.

விலைமதிக்க முடியாத மலைகலை எல்லாம் சிமென்ட் மற்றும் கிராணட் கொள்ளையர்களிடம் இழந்தோம்.

இன்று செல்வம் கொழிக்கும் கடல் வளங்களையும்.மீன்பிடிதொழிலையும் பணக்கார கடல்கொள்ளையர்களிடம் இழந்துகொண்டிருக்கிறோம்.நரிமணம் பெட்ரோலையும் நெய்வேலி நிலகரியையும் அதிலிருந்து பெறப்படும் மின்சாரத்தையும் இழந்துகொண்டிருக்கிறோம்.

உயிர் வாழ்வதற்கு ஒரே ஆதாரமான விளைநிலங்களையும் பணமுதலைகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்கலுக்காக இழந்து கொண்டிருக்கிறோம்.

நம் மண்ணையும் வாழ்வையும் பறித்துகொலுக்கும் இந்திய அரசு நமது தன்மானத்திற்கு சவால் விடுகிறது.மொழி இன உரிமைகளை பேசுவது இந்திய ஒற்றுமைக்கு எதிரானது என்று இல்லாத ஒன்றை காட்டி மிரட்டுகிறது.உயிர் வாழும் உரிமைக்காக போராடும் நமது ஈழச் சகோதரர்களை பயங்கரவாதிகள் என கொச்சப்படுத்துகிறது.ஈழ தமிழர்களுக்கு உத வேண்டிய நமது கடமையை பயங்கரவாதம் என கூறி கடுமையாக நசுக்குகிறது.

இந்த ஈனசெயல்கலுக்கெல்லாம் இந்திய அரசின் எடுபிடியான தமிழக அரசு துணை போகிறது.

இனியேனும் விழிப்போம்.இழந்தத்தை மீட்ப்போம்.இருப்பதை காப்போம்.

நொடிகளின் இடைவெளியில் வாழ்ந்தாலும் மின்னலாய் மின்னுவதன்றி அடிமை சாசனத்துக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம் என முழங்குவோம்

ஈழ விடுதலையை ஆதரிப்போம்

சிங்கள வெறி படைக்கு துணை போகும் இந்திய அரசை எதிர்ப்போம்

இராமன் பாலம் மற்றும் இதிகாச குப்பைகளை எரிப்போம்

பார்ப்பன குடுமிகளின் உச்ச நீதிமன்றத்தை ஒழிப்போம்

காவிரி,முல்லை பெரியாறு,பவானி.பாலாறு உரிமைகலுக்காக உயிரையும் கொடுப்போம்.

தமிழர் வாழ்வுக்கு தடையாக இருக்கும் இந்திய சிறையை தகர்ப்போம்

தன்மான புரட்சி தமிழ் தேசம் படைப்போம்

Wednesday, January 2, 2008

மொழி.தமிழ் ஒரு பார்வை மற்றும் சில தகவல்கள்

மொழி என்பது மக்கள் வாயில் வழங்கும் ஒலித்தொகுதியேயன்றி அவரினும் வேறான ஓர் உயரி அல்லது உருவம் அன்று.மக்கள் தம் தாய்மொழியை பேசினால் அன்றேல் அது வாளும் அன்றேல் மாளும்.ஒரு மொழி வழக்கிற்க்கு இன்றியமையாத சார்பு அல்லது நிலைக்களம் அதை பயன்பாட்டிலிருத்தும் மக்களே. - மொழிஞாயிறு தேவனேய பாவாணர்

மொழி என்பது நம்முடைய சிந்தனை,புலன் உணர்வு மனவெழுச்சி மற்றும் நம் சமுதாயப் பண்புகளை மதிப்பிட பயன்பட கூடிய கருவி மட்டுமல.மொழி அது அடிப்படையில் ஒரு சமூகத்தின் அடையாளம். - எட்வர்ட் சேப்பியர்

மொழியே நம் சிந்தனையின் விளக்கு - சான் டூவர்ட் மில்.

மொழி என்பது நம் சிந்தனை மற்றும் உணர்வை மேம்படுத்துவது அல்ல.அது நம்முடைய உண்மையை பற்றிய பார்வையையும் தீர்மானிக்கிறது. - பெஞ்சமின் வார்ட்.

மொழி என்பது ஒரு முக்கியமான கருவி அது கருத்தையும் சிந்தனையையும் பறிமாறிகொள்ள பயன்படுகிறது மட்டுமல்ல இது நட்பு,கலாசாரம் மற்றும் வணிகம் அணைத்தையும் தொடர்புபடுத்தும். ஒரு மொழியின் முகாமையான பயன்பாடு என்பது உயர்ந்த எண்ணங்களை ஊட்டுவதும்.ஊக்கமூட்டுவதும்,மற்றும் உயர்த்துவதும் மொழியே.

உலகில் கிட்டத்தட்ட 7000 மொழிகள் உள்ளன,இந்த நூற்றண்டின் இறுதிக்குள் 3000 மொழிகள் அழியும் தருவாயில் உள்ளது - யுனெஸ்கோ

உலகில் உள்ள மொழிகள்
ஆப்பிரிக்கா 2092
அமெரிக்கா 1002
ஆசியா 069
ஐரோப்பா 239
பசிபிக் 1310

ஆசியாவிற்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்காவில் அதிக மொழிகள் பேசப்படுகிறது,அமெரிக்காவில் குறைந்த நபர்களினால் அதிக மொழிகள் பயன்படுத்தப்படுகிறது,ஆசியாவில் அதிக மொழிகள் பெருவாரியான மக்களால் பேசப்படுகிறது.இந்தியாவில் உள்ள மொழிகள் 1961 ஆம் ஆண்டு கணக்குபடி மொத்த தாய்மொழிகள் 1652.இவை 826 மொழி கூட்டங்களாக வகுகப்பட்டன.இந்தியாவின் தேசிய மொழிகளாக 15 ,இவற்றுள் 380 தாய்மொழிகள் அடங்குகின்றன.தேசிய மொழிகள் என்று தகுதி பெறாத பெருமொழிகள் 17 இவற்றில் 241 தாய்மொழிகள் அடங்குகின்றன.71 தாய்மொழிகள் ஐந்து லட்சம் பேர் பேசுகின்றனர்.857 தாய்மொழி ஒரு இலட்ச்சம் பேருக்கும் குறைவானோரால் பேசப்படுகிறது.இந்திய மொழிகள் அல்லாத தாய்மொழிகள் 103.இதில் 244 தாய்மொழிகளை வகைப்படுத்த 60 மொழிபிரிவுகளாகவும் மீதியுள்ள 613 வகைப்படுத்த முடியாத தாய்மொழிகளாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன

14 தேசிய மொழிபேசுவோர் எண்ணிக்கை விழுக்காட்டில் 1991 கணக்கெடுப்பின்படி
சமஸ்கிருதம் 0.000

மணிப்பூர் 0.002

காசுமீர் 0.001

நேப்பாளி 0.01

சிந்தி 0.07

தெலுங்கு 0.15

கொங்கனி 0.16

கன்னடம் 0.37

மலையாளம் 0.43

தமிழ் 0.43

பஞ்சாபி 0.44

உருது 0.50

மராத்தி 0.76

குஜராத்தி 0. 90

ஒரியா 1.04

அசமி 1.47


செவ்வியல் மொழிக்கான வரயறை அம்மொழிக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்க வேண்டும்,அது வேறெந்த பாரம்பரியத்திலிருந்து பிரிந்து வந்ததாக இருக்க கூடாது.தன்னை சார்ந்து நிற்கும் மொழிகளுக்கு அடிப்படையை கொடுத்திருக்க வேண்டும்.வேறு எந்த மொழியும் இதன் மீது பலகாலம் ஆதிக்கம் செலுத்தியிருந்தபோதிலும் இது தன் நிலையில் தளர்ச்சி பெற்றிருக்க கூடாது.தானாக உருவாகி இருக்க வேண்டும் அதற்கென்று பழமையான செல்வாக்கான இலக்கியங்கள் இருக்க வேண்டும்.தமிழ் மொழி

தொனமை முன்மை எண்மை ஒண்மை
தனிமை இனிமை தாய்மை தூய்மை
செம்மை மும்மை கலைமை தலைமை
இளமை வளமை முதுமை புதுமை

ஆகிய 16 இயன்மொழி கூறுகளை கொண்ட நம் தமிழ் செவ்வியல் மொழிகளை காட்டிலும் உயர்வானது.

தாய்மொழி பிறப்பின் அடிப்படையில் அல்லது மூதாதையரிடமிருந்து இயல்பாக வருவது.சுருங்கசொல்லின் ஒரு தாயின் இடத்தை பிடித்து.தாயை போலிருந்து ஒருவரை உருவாக்கி அவரை முழுமையாக வெளிப்படுத்த,அடையாளப்படுத்தும் மொழியே தாய்மொழி.

மொழியியல் புலமையின் தந்தை என போற்றப்படும் டாக்டர் எமினே தமிழ்மொழியின் கட்டமைப்பு குறித்து கூறுகையில் உலகத்து மொழிகலிலேயே அதிக வேற்சொற்களையுடைய மொழி தமிழ் என்று கூறுகிறார்.

மொழித்தூய்மை நடந்த மொழிகளில் சில எடுத்துக்காட்டுகள்

துருக்கு மொழியில் - அரபும்,பாரசீகமும்

ருசிய மொழியில் - பிரெஞ்ச்

பிரஞ்ச் மொழியில் - இலத்தீனும் பிறமொழிகளும்
இவைகளெல்லாம் களையெடுக்கப்பட்டு மொழித்தூய்மை செய்யப்பட்டன.

மலையாளத்தில் குஞ்சன நம்பியார் தலைமையில் கி.பி 18 ஆம் நூற்றாண்டில் மொழித்தூய்மை மேற்கொள்ளப்பட்டது.சமஸ்கிருதம் கலக்காதது பச்சை மலையாளம் எனப்பட்டது.

கன்னடத்தில் கி.பி 9 ம் நூற்றாண்டில் நிருதுங்க வர்மன் எனும் மன்னனால் தனிக்கன்னடம் எழுப்பப்பட்டது.தனிகன்ன்டம் அல்லது அச்சகன்ன்டம் என்று அது அழைக்கப்பட்டது.

தெலுங்கில் 18ம் நூற்றாண்டில் தூய தெலுங்கு இயக்கமே நடந்த்தது, அது அச்ச தெலுங்கு என்பபட்டது.தனி தெலுங்குகான நிகண்டே வெளியிடப்பட்டது.

மும்பை தமிழராய்.இலங்கைத் தமிழராய்,மலேசிய தமிழராய்.சிங்கப்பூர் தமிழராய்.மொரீசியஸ் தமிழராய்.வெங்காளூருத் தமிழராய்.பிஜி தீவு தமிழராய்.ஆப்பிரிக்க தமிழராய் இப்படை மொழி மறந்து வெற்று தமிழராய்.உலகெல்லாம் ஈனத்தனமாய் நடத்தப்படும் ஏதிலி தமிழராய்.ஏன் இன்று தாய்தமிழகத்திலேயே அடிமை தமிழராய் நடத்தப்படுகிறோம்.எல்லாம் மொழி மறந்த்ததால் வந்த விளைவு.தமிழ் மொழி உணர்வுள்ள தமிழராய் என்று மாறுகிறோமோ அன்றுதான் தமிழர்க்கு விடுதலை