Saturday, January 12, 2008

சிறப்பு பொருளாதார மண்டலங்கள்

தமிழக மக்களே எச்சரிக்கை

பாழும் வயிற்றுப் பாட்டுக்காக
வாழும் நிலத்தை பறிகொடுப்பதா

பெற்ற் தாயை விட்டு பிழைப்பவர் போல
பிறந்த மண்ணை விற்றுப் பிழைப்பதா

மண்ணையும் மானத்தையும் இழந்து விட்டு
நடுத்தெருவில் நாய்கள் போல திரிவதா

பண முதலைகலுக்காக மக்களை பலிகொடுக்கும்
மானங்கெட்ட அரசுகளை விட்டு வைப்பதா

என நெல்லை தூத்துக்குடி மக்கள் உயிர் வாழும் உரிமைக்கான போராட்டத்தில் குதித்துள்ளனர்

40000 குடும்பங்கலை விரடியடித்துவிட்டு அவர்களின் 12000 ஏக்கர் நிலப்பரப்பை பிடுங்கி மேற்கு வங்க மக்களை கொன்று குவித்த டாடாவுக்கு தாரைவார்க்க துடிக்கிறது துரோகி கருணானிதியின் தமிழக அரசு

இப்பகுதி எங்கும் பரவி கிடக்கும் டைட்டானியம் டை-ஆக்ஸைடு என்ற மதிப்பு மிக்க இயற்க்கை கனிம வளத்தை கொள்ளையடிக்கவே இக் கொலைகார கூட்டணி அலைபாய்ந்துகொண்டிருக்கிறது நெல்லை தூத்துக்குடியில் மட்டுமல்ல தமிழ்நாடு எங்கும் இயற்க்கை செல்வங்கள் கொட்டிக் கிடக்கிறது.

நெய்வேலியில் நிலக்கரி நரிமணத்தில் பெட்ரோல் தஞ்சை முதல் பாண்டிச்சேரி வரையிலான கற்கறையை ஒட்டிய பகுதிகலில் புதைந்து கிடக்கும் எண்ணற எண்ணெய் கிண்னற்கள்.வட தமிழகமெங்கும் விறவிக் கிடக்கும் கிரானைட் கல் பாறைகள்.தேயிலை தோட்டங்கலுக்காக அழிக்கப்பட்டதையும் தாண்டி செழித்துக் கிடக்கும் காடுகள்,சந்தனம் மற்றும் விலை உயர்ந்த மரங்கள்.அரிய மூலிகை செடிகள் .வளமான விளை நிலங்கள்.ஆறுகள் மற்றும் நீராதாரங்கள்.வசதியும் வாய்ப்பும் நிறைந்த துறைமுகங்கள் மீன் மற்றும் கடல் வளங்கள்.தூத்துக்குடி முத்து பல நிறத்தில் மின்னி விலை போகும் குமரி கடல் மணல்.பலவகை கணிம தாதுக்கலை கொண்டு மலைகலாஇ உயர்ந்து கிடக்கும் குமரி மாவட்ட மணவாலக் குறிசியின் மணல் குவியல்கல் என எங்கும் எத்திசையும் தமிழ்நாடு முழுவதும் இயற்க்கை செல்வங்கள் இறைந்து கிடக்கின்றன.

எல்லாமே அள்ள அள்ள குறையாத அமுத சுரபிகள்.வெட்ட வெட்ட கொட்டிக்கொண்டேயிருக்க்கும் செல்வ சுனைகள்.இவைகலை ஒன்று விடாமல் விழுங்குவதற்க்காகத்தான் பணக்கார நாய்கள் அரசோடு பல தொழில் ஒப்பந்தங்களை போடுகின்றன

டைட்டானியத்துக்காக 12000 ஏக்கரை பட்டாப் போட டாட்டா துடிப்பது போல அடுத்தடுத்து தமிழ்நாடு முழுவதையும் பல பண முதலைகல் பங்கு போட்டுக்கொல்லும்,கார் தொழ்ற்சாலை க்லர் ஃபிலிம் தொழிற்சாலை.செல்போன் தொழிற்சாலை மென் பொருள் பூங்கா ,மருந்து ரசாயன தொழிற்சாலை.பெப்சி கோக் என எண்ணற்ற சிறப்பு பொருளாதார மண்டலங்கலை அமைக்கவும் உணவு மற்றும் காய்கறிக்கான விவசாய சிறப்பு மண்டலங்களமைக்கவும் பணவெறியர்கலுக்கு மொத்த தமிழகமும் தேவை

பல்லாயிரக்கனக்கான நிலப்பரப்பில் தொழில் தொடங்கி சில நூறு பேர்கலுக்கு வேலை தருவார்களாம் .முழுக்க முழுக்க எந்திரமயமாக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப உற்ப்பத்தியில் பள்ளிக்கூடத்தையே தாண்டாத கோவன ஆண்டிகளான நமக்கென்ன வேலை கிடைக்கும்? ஐ ஐ டி, ஐ ஐ எம் போன்ற உயர் தொழில்நுட்ப படிப்புகலை தங்கலுக்கு மட்டுமே உடையது என பட்டாப் போட்டுக்கொண்ட பணக்கார நாய்கள் பார்ப்பனர்கள் உயர் சாதியினர் இவ்வேலைகலை கைப்பற்றிக்கொண்டு பணமுதலைகலுக்கு சேவை செய்து சொகுசு கார்கலில் பவனி வருவார்கள்.

இருப்பதை இழந்துவிட்டு நாம் எங்கு போவது, இதோ பிழைப்பு தேடி கூலிகலாக போன பீகார் மக்களை சுட்டுக்கொல்கிறார்களே அசாமில் அதை போல நாமும் நாடோடிகளாக்கப்பட்டு பிற இனத்தவரிடம் குட்டுப்பட்டு சூடுபட்டு சாக வேண்டியத்துதான்.இப்போதே கருனாடகாவிலும் மராட்டியத்திலும் தமிழர்கள் அடிவாங்கி உதைவாங்கி அனாதைகளாக செத்துக்கொண்டிருக்கிறார்கள் இதை உணர்ந்துதான் நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்கள் தலைமுறை தலைமுறையாக தங்களை தாலாட்டி சீராட்டி வளர்த்த தாய் மண்னை எந்த நாயும் தொடுவதற்க்கு விடமாட்டோம் என பொங்கியெழுந்து போராடுகின்றனர்.

ஆனால் அரசும் ஆளும் வர்க்கங்கலும் ஓட்டுப் பொறுக்கி கட்சிகலும் நிலக் கொள்ளையை தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு உருவாக்கம் முன்னேற்றம் எனக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிகின்றனர்.டாட்டா பிர்லா அம்பானிகலின் பங்காளியாக பெருத்துவிட்ட கருணாநிதி தமிழ்நாட்டை துண்டு போட்டு விற்பதுதான் முன்னேற்றத்துக்கான பாதை என்றும் இதற்கெதிராக போராடினால் எனது அனுகுமுறை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என மிரட்டுகிறார்.

குறுகிய கால அரசியல் கொள்ளை மூலமே எண்ணற்ற எஸ்டேட்டுகல் பழத்தோட்டங்கள், பங்களாகள், நட்ச்சதிர உணவகங்கள் என மக்களின் சொத்துக்கலை அபகரித்த செயலலிதா டாட்டாவின் நிலக் கொள்ளையை எதிர்ப்பதாக நாடகமாடுகிறார்,

மகன்.மருமகள் என அடுத்தடுத்து குடும்பத்தயே கட்சி பதவிகலில் அமர்த்தி குறுநில மன்னர் போல் ஆட்டமாடும் ராமதாசு மக்களிடம் நிலங்கலை கொடுக்க கூடாது என்றும்,அரசிடம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் ஆலை தொடங்க ஆலோசனைகலை கூறியும் குழப்பி மீன் பிடிக்க நினைக்கிறார்.

மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மக்களை படுகொலை செய்து டாட்டாவுக்கு அடியாள் படையாக செயல்படும் சி.பி.எம். கட்சி இங்கு மவுனமாக இருந்து கொண்டு எஜமானனை பாதுகாத்து மக்களுக்கு துரோகம் செய்கிறது.

தன்மானம் மிக்க தமிழ் மக்களே

தனியார்மயம்.தாராளமயம்.உலகமயம்,என்னும் அழிவு பாதை மூலம் பண முதலைகல் மக்களின் உழைப்பால் விளைந்த பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விழுங்கி விட்டன.லாப வெறி பேயாய் பிடித்து மக்களின் நிலங்கலையும்.இயற்க்கை வளங்களையும் சூறையாட தொடங்கி விட்டன.கொள்ளையர்களின் பிடியில் மண்ணை இழந்தால் என்னவாகும்?

திருப்பூரின் பனியன் தொழில் முதலாளிகலை பாருங்கள்.விவசாயிகலாக இருந்து பனியன் தொழிலில் அடி எடுத்து வைத்தவர்கள் லாப வெறி பிடித்து கோவை-ஈரோடு மாவட்டங்கலின் நிலம் அணைத்தையும் நஞ்சாக மாற்றியதோடு புகழ் பெற்ற நொய்யல் ஆற்றையும் அழித்துவிட்டனர்.தங்களதுசொந்த ரத்தங்கலான விவசாயிகளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று விடுகின்றனர்,இன்மண்ணில் பிறந்தவர்கலின் பேராசையால் இத்துணை பெருங்கேடுகள் விளைந்தபோது அந்நியர்கள் என்ன செய்வார்கள் எண்ணிப்பாருங்கள் ஆகவே டாட்டாவின் நிலக்கொள்ளைக்கு எதிராக போராடுவது நெல்லை தூத்துக்குடிக்கு மட்டுமேயான பிரச்சனையல்ல,விமான நிலைய விரிவாக்கம்.சாலை விரிவாக்கம்,உள் கட்டுமான சீரமைப்பு.சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என தமிழ் நாட்டையே சூறையாடும் மொத்த தமிழ்தேசிய பிரச்சனை.

எனவே கண் முணே நமது வாழ்க்கை களவாடப்படுவதை கண்டு

பொங்கி எழட்டும் தமிழ்த்தேசம்

இந்திய சிறையை நடுநடுங்கச் செய்யட்டும் நமது போராட்டம்

தமிழக மக்களே மேற்கு வங்க மக்களை கொன்று குவித்த டாட்டாவோடு கருணாநிதி கூட்டுநிலக் கொள்ளையர்கலின் பிடியில் தமிழ்நாடுதாய் மண்ணை காக்க சூழுரைப்போம்தமிழ் தேச விடுதலையை முன்னெடுப்போம்

Friday, January 11, 2008

இந்தியா ஒரு பல்தேசிய அரசு சமூகம்

இந்தியா ஒரு பல்தேசிய அரசு சமூகம்

அரசு சமூகம் என்பது தேசிய சமூகத்திலிருந்து வேறுபட்டதாகும்.தேசிய சமூகத்தில் மக்கள் ஒரு பொதுமொழியை கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அரசு சமூகத்தில் அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமிலை.இங்கு பொது மொழி என்று குறிப்பிடப்படுவது மக்கள் பேசும் மொழியேயன்றி அரசு நிர்வாகத்தில் இருக்கும் மொழி அல்ல.

இந்தியா ஒரு தேசிய சமூகமல்ல என்பதில் விவாதத்துக்கு இடமில்லை.இங்கு பல்வேறு மொழிகளை பேசுகின்ற தேசிய இனங்கள் இருக்கின்றன.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவான தேசிய இனம்,மத்திய காலத்திலும் அதன் பின்னரும் உருவான தேசிய இனங்கள்.சமீபத்தில் தேசிய இனங்களாக உருவாகிய உருவாகி வருகிற மக்கள் சமூகங்கள் என பற்பல உள்ளன.

உதாரணமாக தமிழ்த் தேசிய இனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவான மிக பழமையான தேசிய இனம்.தெலுங்கு கன்னடம்,மராத்தி,குஜராத்தி.ஒரியா வங்காளி,மலையாளம்.பஞ்சாபி,அசாமி.காஸ்மீரி போன்றவை மத்திய காலத்திலும் அதன் பின்னரும் உருவான தேசிய இனங்கள்.எவ்வாறாயினும் இவை எல்லாம் வளமான வளர்ச்சியடைந்த மொழியையும் இலக்கியங்களையும் கொண்டுள்ள தேசிய இனங்களாகும்.

இவை எல்லாம் மைய அரசின் கீழான மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருப்பினும் மைய அரசு இவற்றின் தேசிய தகுதியை அங்கீகரிக்கவில்லை.இவற்றின் மொழிகள் பிரதேச மொழிகள் என்றே குறிப்பிடப்படுகின்றன.இவற்றின் பிரதேச எல்லைகளை மைய அரசு அம்மக்களின் சம்மதம் இன்றியே மாற்றி அமைக்கும் அதிகாரம் பெற்றுள்ளது,

இவை தவிர வட இந்தியாவில் இருக்கும் உத்திரபிரதேசம்,மத்தியபிரதேசம்.ராஜஸ்தான்.பீகார் போன்ற மாநிலங்கள் மொழி வழியில் அமைக்கப்பட்ட மாநிலங்கள் அல்ல.

அதே போல வடகிழக்கு இந்திய பிரதேசங்கலும் மொழிவழி நிர்வாக அமைப்புகளாக பிரிக்கபட்டவை அல்ல.இவற்றில் எண்ணற்ற தேசிய இனங்களும் தேசிய இனங்களாக உருவாகி வரும் மக்கள் சமூகங்கலும் உள்ளன. அவற்றில் பல வளர்ச்சியடைந்த மொழியையும் இலக்கியங்களையும் கொண்டுள்ள தேசிய இனங்களாகும்.எனினும் அவற்றை மொழிவழி மாநிலங்களாககூட மைய அரசு அனுமதிக்கவில்லை.

மிகக்கடுமையான மக்கள் போராட்டங்கலுக்கு பிறகு மணிபுரி,திரிபுரா.மேகாலயா,நாகலாந்து.மிஜோ. போன்ற மாநிலங்கள் அமைக்கபட்டுள்ளதுடன்.மணிபுரி.நேபாளி,கொங்கணி மொழிகளுக்கு பிரதேச மொழித் தகுதி அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ளது.மணிபுரி மக்கள் தொகை 8 லட்சம்.நாகலாந்து மக்கள் தொகை 8 லட்சம்.மிஜோரம் 5 லட்சம்.கொங்கணிகள் 15 லட்சம்.நேபாளிகள் 14 லட்சம்.இவற்றில் மணிபுரியும் நேபாளியும் வளர்ச்சிய்டைந்த மொழிகள்.நாகலாந்தில் தற்போதுதான் பொதுமொழி ஒன்று (நாக்மிஸ்) உருவாகி வருகிறது.எனினும் இவர்களுடைய கடுமையான போராட்டங்களினால் தனிமாநிலங்களாக அங்கீகரிக்கபட்டிருக்கிறார்கள்,இவற்றை விட பன்மடங்கு மக்கள் தொகையை கொண்ட வளர்ச்சியடைந்த மொழியையும் இலக்கியங்களையும் கொண்டுள்ள பற்பல மக்கள் சமூகங்கள் வட iந்தியாவில் மாநில தகுதிகூட மறுகபட்டுள்ள நிலையில் உள்ளன.

உத்திரபிரதேசத்தில் மைதிலி கடிபோலி மொழிகள் பேசும் மக்கள் தனிதனி மாநிலங்களாக அமையும் தகுதி படைத்தவர்கள்.போஜ்புரி,மைதிலி,மகதி மொழி பேசும் மக்கள் 160 லட்சம் பேர் பீகாரில் உள்ளனர்.மேலும் பிலி மொழி பேசுவோர் 53 லட்சம்.முண்டாரி மொழி பேசுவோர் 12 லட்சம்,கோண்டி மொழி பேசுவோர் 52 லட்சம்,குருக் மொழி பேசும் ஓராக்கள் 17 லட்சம்,காரிபோலி பேசும் மக்கள் 16 லட்சம்,போடோக்கள் 6 லட்சம், தோக்கிரிகள் 13 லட்சம் கோர்காலியர்கள் 14 லட்சம், துளுவர்கள் 11 லட்சம், சந்தால் மொழி பேசுவோர் 2 கோடி என் எண்ணற்ற தனிதனியான மொழியையும் பண்பாட்டையும் கொண்டுள்ள மக்கள் சமூகஙகள் வடமாநிலங்களில் உள்ளன.

வடமாநிலங்களில் குறைந்தபட்சம் இரண்டுடஜன் மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கபட வேண்டுமென்று ராகுல் சாங்கிருத்தியாயன் கோரினார் என்பது அங்குள்ள தேசிய இனங்களின் எண்ணிக்கையை புரிந்துகொள்ள உதவுவதாகும்,ஆனால் நாகா,மிஜோ,மணிபுரிகளை விட அதிகமான மக்கள் தொகை கொண்ட மிக பல மக்கள் சமூகங்கள் தேசிய இனங்களாக அங்கீகரிக்கபடவில்லை என்பதோடு அவற்றுக்கு மாநில நிர்வாக தகுதிகூட வழங்கபடவில்லை,எனினும் தங்கள் மொழிகலுக்கு அரசியல் சட்ட தகுதி கோருவது,மாநில நிர்வாக தகுதி கோருவது என்ற வெவ்வேறு வடிவில் வெவ்வேறு அளவில் இந்த மக்கள் சமூகங்களில் கோரிக்கைகலும் போராட்டங்களும் தற்போது எழுந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறு இந்தியா பழமையான வளர்ச்சிய்டைந்த பல்வேறு தேசிய இனங்களையும் சமீபத்தில் தேசிய இனங்களாக வள்ர்ச்சியடைந்த வளர்சியடைந்து வருகிற எண்ணற்ற மக்கள் சமூக்ங்களையும் கொண்ட ஒரு பல்தேசிய அரசு சமூகமாக இருக்கிறதேயன்றி தேசிய சமூகமாக இல்லை.
இவ்வாறு வேறுபட்ட வளர்சி மட்டங்களுடனும் வரலாறுடனும்,கலை, இலக்கிய,பண்பாட்டுடனும் திகழும் தேசிய இனங்கள் அணைத்தும் முழுமையான நவீன தேசங்களாக வளரும் கட்டத்தில் வரலாற்று போக்கில் இருக்க்கின்றன,இந்த நிகழ்சிபோக்கின் வரலாற்று கட்டத்தின் நிறைவின் ஊடாகவே இந்தியாவில் சனனாயக புரட்சி வெற்றியடைய முடியும்


நன்றி தோழர் கே.எம்.

Saturday, January 5, 2008

தமிழர்களாக வாழ்வது குற்றம் என்றால் துணிவுடன் அதை தொடர்ந்து செய்வோம்

தமிழர்களாக வாழ்வது குற்றம் என்றால் துணிவுடன் அதை தொடர்ந்து செய்வோம்

நமக்கு மிக அருகாமையிலே மாபெரும் மனித படுகொலை நடந்துகொண்டிருக்கிறது.கொல்லப்படுபவர்கள் நமது சகோதர தேசிய இனமான ஈழத்தமிழ் மக்கள் .அமெரிக்கா.இந்தியா,பாகிஸ்தான்,சீனா என உலகப்பயங்கரவாதிகளோடு கூட்டு சேர்ந்து கொண்டு சிங்கள வெறிப்படை ஈழத் தமிழர்களை கொன்றொழிக்கிறது.

ஈழத்தமிழ் சமூகத்தை அழிவிலிருந்து காப்பதற்கு உயிரை கொடுத்து போராடுகின்றனர் விடுதலைப்புலிகள்.

நாம் ஈழ சகோதரர்களுக்காகப் போராடவில்லை,அவர்களின் துன்பத்தை கண்டு இரக்கப்படுகிறோம்.அவர்களின் மரணத்துக்காக அழுகிறோம்.அழுவதற்கு கூட அடிமைகளுக்கு உரிமை இல்லை என்று உத்தரவு போடுகின்றன இந்திய - தமிழக அரசுகள்.

ஆனால் சிங்கள வெறிப்படைக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிகொண்டும்,எப்படியெல்லாம் சித்திரவதை செய்து ஈழத்தமிழரை கொலை செய்யலாம் என்றும் என்னவெல்லாம் கொடுமைகள் செய்து ஈழத்தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தலாம் என்றும் சிங்கள வெறியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கிறது இந்திய அரசு.

இதை தட்டி கேட்க வக்கில்லாமல் கூட்டணி அமைத்து கொட்டமடிக்கிறது தமிழக அரசு.

இனியும் நாம் இந்தியனாக இருக்க வேண்டுமா ?

தன்மான போராளி தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணை காவிகூடாரமாக மாற்றியே தீருவோம் என்று இந்து மதவெறி பயங்கரவாதிகள் தமிழ்நாட்டை தாக்க தொடங்கியுள்ளனர்.கையெடுத்து கும்பிடவோ,மனமுருகி வேண்டி ஏமாறவோ கூட லாயக்கற்று கடலுக்குள் இருக்கும் மணற்திட்டை இராமன் பாலமென கூறி மக்களை மடையர்களாக்குகின்றனர்.இதை காரணம் காட்டி கருநாடக எல்லையில் இரண்டு தமிழர்களை உயிரோடு எரித்து கொலை செய்தனர்.தமிழக முதல்வரின் தலைக்கு விலை வைத்தனர்.தமிழ்நாட்டை இன்னொரு குஜராத்தாக மாற்றத் துடிக்கின்றனர்.

இதனை கண்டிக்கவோ,காரணமானவர்களை தண்டிக்கவோ நீதிதுறை.காவல் துறை போன்ற எந்த துறைக்கும் திராணியில்லை.

ஆனால் நாங்கள் இந்துவுமில்லை இந்தியனுமில்லை - நாங்கள் தமிழர்கள் என தமிழ்நாடு போர்குரல் உயர்த்தியவுடன் பார்ப்பன உச்சிகுடிமிகளின் நீதிமன்றம் கோபத்தில் தாண்டவமாடியது.தமிழர்கள் தன்மானம் பகுத்தறிவு பேசுவது குற்றம்: பார்ப்பன கட்டுகதைகளை நம்ப வேண்டும்.இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பதற்கு முட்டாளாக இருக்க வேண்டும் என உத்தரவு போட்டது.

ஈராயிரம் ஆண்டுகலுக்கும் மேலாக நம்மை ஒடுக்கி சுரண்டி கொழுத்து வரும் பார்ப்பனியத்தின் அதிகார குடுமியை அறுத்தெறிய வேண்டாமா?

இனியும் நாம் இந்துவாகவும் இந்தியனாகவும் இருக்க வேண்டுமா?

சட்டமன்றம்.பாராளுமன்றம்,நீதிமன்றம்,நடுவர் மன்றம் என எந்த மன்றத்துக்கு போனாலும் காவிரியில் கடுகளவு நீரும் தரமாட்டோம் என அடாவடி செய்கிறது கருநாடக அரசு.

கடலிலே கொட்டினாலும் தமிழர்களின் தவித்த வாய்க்கு துளி நீரையும் தராமல் முல்லை பெரியாறையும்.பவானியையும் முடக்கியே தீருவோம் என வஞ்சகம் செய்கிறது கேரள அரசு.

தட்டி கேட்க நாதியில்லாத தமிழர்களுக்கு நாங்கள் மட்டும் தண்ணீர் தர முடியுமா என் பாலாறை தடுத்து நிறுத்துகிறது ஆந்திர அரசு.

எந்த சிக்கலையும் தீர்க்கவிடாமல் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது இந்திய அரசு,கையாலாகாத்தனத்தோடு பல்லை இளிக்கிறது தமிழக அரசு.

இனியும் நாம் இந்தியனாக இருக்க வேண்டுமா?

இதுவரை நாம் இழந்த்தது போதாதா?

கச்சத்தீவை இலங்கையிடம் இழந்தோம்

பச்சை தமிழனின் பச்சை துரோகத்தால் பீர்மேடு,தேவிகுளம் பகுதிகளை இழந்தோம்.

தங்கவயல் வெங்காலூரை கருநாடகத்திடம் இழந்தோம்.

வளமிக்க நமது காடுகளை எல்லாம் தேயிலை தோட்ட கொள்ளையர்களிடம் இழந்தோம்.

விலைமதிக்க முடியாத மலைகலை எல்லாம் சிமென்ட் மற்றும் கிராணட் கொள்ளையர்களிடம் இழந்தோம்.

இன்று செல்வம் கொழிக்கும் கடல் வளங்களையும்.மீன்பிடிதொழிலையும் பணக்கார கடல்கொள்ளையர்களிடம் இழந்துகொண்டிருக்கிறோம்.நரிமணம் பெட்ரோலையும் நெய்வேலி நிலகரியையும் அதிலிருந்து பெறப்படும் மின்சாரத்தையும் இழந்துகொண்டிருக்கிறோம்.

உயிர் வாழ்வதற்கு ஒரே ஆதாரமான விளைநிலங்களையும் பணமுதலைகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்கலுக்காக இழந்து கொண்டிருக்கிறோம்.

நம் மண்ணையும் வாழ்வையும் பறித்துகொலுக்கும் இந்திய அரசு நமது தன்மானத்திற்கு சவால் விடுகிறது.மொழி இன உரிமைகளை பேசுவது இந்திய ஒற்றுமைக்கு எதிரானது என்று இல்லாத ஒன்றை காட்டி மிரட்டுகிறது.உயிர் வாழும் உரிமைக்காக போராடும் நமது ஈழச் சகோதரர்களை பயங்கரவாதிகள் என கொச்சப்படுத்துகிறது.ஈழ தமிழர்களுக்கு உத வேண்டிய நமது கடமையை பயங்கரவாதம் என கூறி கடுமையாக நசுக்குகிறது.

இந்த ஈனசெயல்கலுக்கெல்லாம் இந்திய அரசின் எடுபிடியான தமிழக அரசு துணை போகிறது.

இனியேனும் விழிப்போம்.இழந்தத்தை மீட்ப்போம்.இருப்பதை காப்போம்.

நொடிகளின் இடைவெளியில் வாழ்ந்தாலும் மின்னலாய் மின்னுவதன்றி அடிமை சாசனத்துக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம் என முழங்குவோம்

ஈழ விடுதலையை ஆதரிப்போம்

சிங்கள வெறி படைக்கு துணை போகும் இந்திய அரசை எதிர்ப்போம்

இராமன் பாலம் மற்றும் இதிகாச குப்பைகளை எரிப்போம்

பார்ப்பன குடுமிகளின் உச்ச நீதிமன்றத்தை ஒழிப்போம்

காவிரி,முல்லை பெரியாறு,பவானி.பாலாறு உரிமைகலுக்காக உயிரையும் கொடுப்போம்.

தமிழர் வாழ்வுக்கு தடையாக இருக்கும் இந்திய சிறையை தகர்ப்போம்

தன்மான புரட்சி தமிழ் தேசம் படைப்போம்

Wednesday, January 2, 2008

மொழி.தமிழ் ஒரு பார்வை மற்றும் சில தகவல்கள்

மொழி என்பது மக்கள் வாயில் வழங்கும் ஒலித்தொகுதியேயன்றி அவரினும் வேறான ஓர் உயரி அல்லது உருவம் அன்று.மக்கள் தம் தாய்மொழியை பேசினால் அன்றேல் அது வாளும் அன்றேல் மாளும்.ஒரு மொழி வழக்கிற்க்கு இன்றியமையாத சார்பு அல்லது நிலைக்களம் அதை பயன்பாட்டிலிருத்தும் மக்களே. - மொழிஞாயிறு தேவனேய பாவாணர்

மொழி என்பது நம்முடைய சிந்தனை,புலன் உணர்வு மனவெழுச்சி மற்றும் நம் சமுதாயப் பண்புகளை மதிப்பிட பயன்பட கூடிய கருவி மட்டுமல.மொழி அது அடிப்படையில் ஒரு சமூகத்தின் அடையாளம். - எட்வர்ட் சேப்பியர்

மொழியே நம் சிந்தனையின் விளக்கு - சான் டூவர்ட் மில்.

மொழி என்பது நம் சிந்தனை மற்றும் உணர்வை மேம்படுத்துவது அல்ல.அது நம்முடைய உண்மையை பற்றிய பார்வையையும் தீர்மானிக்கிறது. - பெஞ்சமின் வார்ட்.

மொழி என்பது ஒரு முக்கியமான கருவி அது கருத்தையும் சிந்தனையையும் பறிமாறிகொள்ள பயன்படுகிறது மட்டுமல்ல இது நட்பு,கலாசாரம் மற்றும் வணிகம் அணைத்தையும் தொடர்புபடுத்தும். ஒரு மொழியின் முகாமையான பயன்பாடு என்பது உயர்ந்த எண்ணங்களை ஊட்டுவதும்.ஊக்கமூட்டுவதும்,மற்றும் உயர்த்துவதும் மொழியே.

உலகில் கிட்டத்தட்ட 7000 மொழிகள் உள்ளன,இந்த நூற்றண்டின் இறுதிக்குள் 3000 மொழிகள் அழியும் தருவாயில் உள்ளது - யுனெஸ்கோ

உலகில் உள்ள மொழிகள்
ஆப்பிரிக்கா 2092
அமெரிக்கா 1002
ஆசியா 069
ஐரோப்பா 239
பசிபிக் 1310

ஆசியாவிற்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்காவில் அதிக மொழிகள் பேசப்படுகிறது,அமெரிக்காவில் குறைந்த நபர்களினால் அதிக மொழிகள் பயன்படுத்தப்படுகிறது,ஆசியாவில் அதிக மொழிகள் பெருவாரியான மக்களால் பேசப்படுகிறது.இந்தியாவில் உள்ள மொழிகள் 1961 ஆம் ஆண்டு கணக்குபடி மொத்த தாய்மொழிகள் 1652.இவை 826 மொழி கூட்டங்களாக வகுகப்பட்டன.இந்தியாவின் தேசிய மொழிகளாக 15 ,இவற்றுள் 380 தாய்மொழிகள் அடங்குகின்றன.தேசிய மொழிகள் என்று தகுதி பெறாத பெருமொழிகள் 17 இவற்றில் 241 தாய்மொழிகள் அடங்குகின்றன.71 தாய்மொழிகள் ஐந்து லட்சம் பேர் பேசுகின்றனர்.857 தாய்மொழி ஒரு இலட்ச்சம் பேருக்கும் குறைவானோரால் பேசப்படுகிறது.இந்திய மொழிகள் அல்லாத தாய்மொழிகள் 103.இதில் 244 தாய்மொழிகளை வகைப்படுத்த 60 மொழிபிரிவுகளாகவும் மீதியுள்ள 613 வகைப்படுத்த முடியாத தாய்மொழிகளாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன

14 தேசிய மொழிபேசுவோர் எண்ணிக்கை விழுக்காட்டில் 1991 கணக்கெடுப்பின்படி
சமஸ்கிருதம் 0.000

மணிப்பூர் 0.002

காசுமீர் 0.001

நேப்பாளி 0.01

சிந்தி 0.07

தெலுங்கு 0.15

கொங்கனி 0.16

கன்னடம் 0.37

மலையாளம் 0.43

தமிழ் 0.43

பஞ்சாபி 0.44

உருது 0.50

மராத்தி 0.76

குஜராத்தி 0. 90

ஒரியா 1.04

அசமி 1.47


செவ்வியல் மொழிக்கான வரயறை அம்மொழிக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்க வேண்டும்,அது வேறெந்த பாரம்பரியத்திலிருந்து பிரிந்து வந்ததாக இருக்க கூடாது.தன்னை சார்ந்து நிற்கும் மொழிகளுக்கு அடிப்படையை கொடுத்திருக்க வேண்டும்.வேறு எந்த மொழியும் இதன் மீது பலகாலம் ஆதிக்கம் செலுத்தியிருந்தபோதிலும் இது தன் நிலையில் தளர்ச்சி பெற்றிருக்க கூடாது.தானாக உருவாகி இருக்க வேண்டும் அதற்கென்று பழமையான செல்வாக்கான இலக்கியங்கள் இருக்க வேண்டும்.தமிழ் மொழி

தொனமை முன்மை எண்மை ஒண்மை
தனிமை இனிமை தாய்மை தூய்மை
செம்மை மும்மை கலைமை தலைமை
இளமை வளமை முதுமை புதுமை

ஆகிய 16 இயன்மொழி கூறுகளை கொண்ட நம் தமிழ் செவ்வியல் மொழிகளை காட்டிலும் உயர்வானது.

தாய்மொழி பிறப்பின் அடிப்படையில் அல்லது மூதாதையரிடமிருந்து இயல்பாக வருவது.சுருங்கசொல்லின் ஒரு தாயின் இடத்தை பிடித்து.தாயை போலிருந்து ஒருவரை உருவாக்கி அவரை முழுமையாக வெளிப்படுத்த,அடையாளப்படுத்தும் மொழியே தாய்மொழி.

மொழியியல் புலமையின் தந்தை என போற்றப்படும் டாக்டர் எமினே தமிழ்மொழியின் கட்டமைப்பு குறித்து கூறுகையில் உலகத்து மொழிகலிலேயே அதிக வேற்சொற்களையுடைய மொழி தமிழ் என்று கூறுகிறார்.

மொழித்தூய்மை நடந்த மொழிகளில் சில எடுத்துக்காட்டுகள்

துருக்கு மொழியில் - அரபும்,பாரசீகமும்

ருசிய மொழியில் - பிரெஞ்ச்

பிரஞ்ச் மொழியில் - இலத்தீனும் பிறமொழிகளும்
இவைகளெல்லாம் களையெடுக்கப்பட்டு மொழித்தூய்மை செய்யப்பட்டன.

மலையாளத்தில் குஞ்சன நம்பியார் தலைமையில் கி.பி 18 ஆம் நூற்றாண்டில் மொழித்தூய்மை மேற்கொள்ளப்பட்டது.சமஸ்கிருதம் கலக்காதது பச்சை மலையாளம் எனப்பட்டது.

கன்னடத்தில் கி.பி 9 ம் நூற்றாண்டில் நிருதுங்க வர்மன் எனும் மன்னனால் தனிக்கன்னடம் எழுப்பப்பட்டது.தனிகன்ன்டம் அல்லது அச்சகன்ன்டம் என்று அது அழைக்கப்பட்டது.

தெலுங்கில் 18ம் நூற்றாண்டில் தூய தெலுங்கு இயக்கமே நடந்த்தது, அது அச்ச தெலுங்கு என்பபட்டது.தனி தெலுங்குகான நிகண்டே வெளியிடப்பட்டது.

மும்பை தமிழராய்.இலங்கைத் தமிழராய்,மலேசிய தமிழராய்.சிங்கப்பூர் தமிழராய்.மொரீசியஸ் தமிழராய்.வெங்காளூருத் தமிழராய்.பிஜி தீவு தமிழராய்.ஆப்பிரிக்க தமிழராய் இப்படை மொழி மறந்து வெற்று தமிழராய்.உலகெல்லாம் ஈனத்தனமாய் நடத்தப்படும் ஏதிலி தமிழராய்.ஏன் இன்று தாய்தமிழகத்திலேயே அடிமை தமிழராய் நடத்தப்படுகிறோம்.எல்லாம் மொழி மறந்த்ததால் வந்த விளைவு.தமிழ் மொழி உணர்வுள்ள தமிழராய் என்று மாறுகிறோமோ அன்றுதான் தமிழர்க்கு விடுதலை

Monday, December 31, 2007

மனு அதர்மம்

பொதுதளத்தில் இருக்கும் தமிழர் பலருக்கும் இந்து என்கிற அடையாளத்தின் உண்மையான உள் அர்த்தம் தெரியாததாலும் பார்ப்பனிய ஊடகங்கள் பரப்பும் நாம் இந்து என்கிற உணர்வுக்கு எளிதாக பலியாவதாலும் ஓட்டு பொறுக்கி அரசியலில் சமீப தேர்தல்களில் இந்து பயங்கரவாத கும்பல்கள் பெரும் வெற்றிகள் அந்த கூட்டத்தின் கொட்டத்தை அதிகபடுத்தியிருப்பதாலும் இந்து என்றால் பார்ப்பான் மட்டுமே மற்றவர்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்திகொள்ள மனு அதர்மத்தின் சில பகுதிகளை இப்பொழுது இங்கே பதிவிடுகிறேன்


(அத் 1 : 31) உலக விருத்தியின் பொருட்டு ப்ரம்மாவானர் தன்னுடைய முகம் புஜம் துடை கால் இவைகளினின்று முறையே பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் இவர்களை உண்டுபண்ணினார்

(அத் 1 : 87) அந்த ப்ரம்மாவானவர் இந்த உலகத்தை காப்பாற்ற தன் முகம் தோள் துடை பாதம் இவைகளினின்று உருவான பிராமண சத்திரிய வைசிய சூத்திரவருனத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களை தனிதனியாக பகுத்தளித்தார்(பிறப்பின் அடிப்படையில்)

(அத் 1 :100) பிராமணன் முதல் வருணத்தான் என்பதாலும் ப்ரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்தவன் ஆகையாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகலவருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்

(அத் 1 :101) ஆதலால் பிராமணன் ஒருவரிடத்தில் தானம் வாங்கினலும் தன்பொருளையே சாப்பிடுகிறான் தன் வஸ்த்திரத்தையே உடுத்துகிறான் தன் சொத்தையே தானஞ்சய்கிறான் மற்றவர்கள் அவனுடைய கருணையினாலே அவற்றை அனுபவிக்கிறார்கள்.

(அத் 9 :318 319)ஒளியுள்ள அக்னியானது மயானத்தில் பிணத்தை தகித்தாலும் நிந்தனையில்லாமல் யாகத்தில் எப்படி ஃஒமத்தில் விர்த்தி செய்யப்படுகிறதோ அப்படியே பிராமணர்கள் கெட்ட செயல்கலில் ஈடுபட்டிருந்தாலும் சகலமான சுபகாரியங்கலிலும் பூசிக்கத்தக்கவர்கள் மேலான தெய்வம் அவர்கள்

(அத் 10 : 73) பிராமணன் தொழிலை செய்தாலும் சூத்திரன் பிராமண சாதியாகமாட்டான்.ஏனென்றால் அவனுக்கு பிராமனஜாதி தொழில் அதிகாரமில்லையல்ல்வா? சூத்த்ரன் தொழிலை செய்தாலும் பிராமணன் சூத்திரஜாதியாக மாட்டான்.ஏனென்றால் அவன் ஈனத்தொழிலை செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்ததல்லவா? இப்படியே இந்த விசயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார்

(அத் 11 :84)பிராமணன் பிறவி சிறப்பாளன்: தேவரும் மதிக்க தக்கவன்: மனிதரில் உயர்ந்தவன்: தேவமந்திரமே அவன் உயர்வுக்கு காரணம்.எனவே எல்லோரும் அவன் முடிவுப்படி நடக்க வேண்டும்

(அத் 2 : 135) பத்து வயதுள்ள பிராமணனையும் நூரு வயதுள்ள சத்திரியனையும் தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டுவது.பிராமணன்(பத்து வயது பையன்) தகப்பன் மரியாதையும் நூஒரு வயதுள்ள சத்திரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டுவது.


அத் 2 : 31) பிராமணனுக்கு மங்களத்தையும் சத்திரியனுக்கு பலத்தையும் வைசியனுக்கு பொருளையும் சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இட வேண்டியது.

(அத் 2: 32) பிராமணனுக்கு சர்மவென்றும் சத்திரியனுக்கும் வர்மவென்றும் வைசியனுக்கு பூதியென்றும் சூத்திரனுக்கு தாசனென்றும் பெயரை இட வேண்டியது.

(அத் 2 : 155) பிராமணனுக்கு ஞானத்தினாலும்(பிறவி) சத்திரியாளுக்கு வீரியத்தினாலும்,வைசியனுக்கு தானிய்ம் பொருள் இவைகளினாலும் சூத்திரனுக்கு வயதினாலும்( பிறப்பின் அடிப்படையிலேயே சூத்திரன் தாழந்தவன் என்று அர்த்தம்) மேன்மையுன்டாகிறது.

பெண்கள் பற்றி (அத் 2 : 213) மாதர்களின் சுபாவமே சிரிங்கார சேஸ்ட்டைகளினால் தோசத்தையுன்டுபண்ணும் ஆதலால் தெரிந்தவர்கள் அவர்களிடத்தில் அசாக்கிரதையாய் இருக்க மாட்டார்கள்

(அத் 2 : 214) ஜிதேந்திரியனாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனை மாதர்கள் தன் சம்பத்தினால் காமகுரோததுதுக்கு உட்ப்பட்டவனாக செய்கிறார்கள்

(அத் 215) தாய் தங்கை இவர்கலுடனும் தனியாக ஒன்றாக உட்காரகூடாது இந்திரியங்களின் கூட்டமானது மிகவும் பலமுடையது அது தெரிந்தவனையும் மயக்கிவிடும்.

(அத் 2 : 240) மாதர்கள் இரத்தினங்கள் தர்மம் ஆசாரம் நல்ல வசனம் இன்னுன் நல்ல சிற்பசாஸ்த்திரம் இவைகளை எவ்விடத்தில் இருந்தாலும் கிரகித்துகொள்ளலாம்(மாதர்கள் என்று பெண்களையும் பொருள்களின் வரிசையில் வைத்துவிட்டார்கள்)

(அத் 3 :13) சூத்திரனுக்கு தன்சாதியிலும் வைசியனுக்கு தன்சாதியிலும் சூத்திரசாதியிலும்.சத்திரியனுக்கு தன்சாதியிலும் வைசிய சூத்திரசாதியிலும்,பிராமணனுக்கு தன்சாதியிலும் மற்ற மூன்று சாதியிலும் விவாகம் செய்துகொள்ளலாம்.

சூத்திரன் தன்சாதியை தவிர்த்து பிற சாதிகளில் விவாகம் செய்ய கூடாது

வைசியரும் சத்திரியரும் கூட பிராமண பெண்களை மனக்க கூடாது.

(அத் 3 : 14) பிராமணன் சத்திரியன் இவர்களுக்கு தன் வருணத்து கன்னிகை அகப்படாத ஆபத்து காலத்திலும் சூத்திர கன்னியை விவாகம் செய்ய கூடாது.

(அத் 3 : 15) தன்சாதிக்கு தாழ்ந்த சாதியில் விவாகஞ்செய்து கொள்ளுந் துவிஜர்கள் தன் குலத்தையும் புத்திராளையும் சூத்திரதன்மையை அடைவிக்கிறார்கள்( மறுபடியும் பிறப்பின் அடிப்படையிலேயே சூத்திரன் தாழ்ந்தவன் என்கிறார்கள்)

(அத்3 : 17) படுக்கையிலே சூத்திர கன்னிகையோடு சமமாய் படுத்திருக்கிற பிராமணன் நரகத்தையடைகிறான்.பிள்ளையுண்டு பன்னினால் பிராமண தண்மையிலிருந்து(பிறப்பின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் பிராமண தண்மையிலிருந்து) நீங்கி விடுகிறான்.

(அத் 3 :18) எவனுக்கு தன்சாதியில் பிள்ளையில்லாமல் சூத்திர சாதியிற் பிறந்தவன் வைதீக கர்மங்களை செய்கிறானோ அந்த அவிசை தேவர்களும் பிதுர்க்களும் புசிக்கமாட்டார்கள் ஆகையால் அவனுக்கு சுவர்க்காதி புண்ணியலோகமில்லை.

(அத் 3 : 19) சூத்திர ஸ்திரியின் அதரபாணஞ் செய்தவனுக்கும் அவள் மூச்சுகாற்று மேல்பட்டவனுக்கும்,அவளிடத்தில் பிறந்தவனுக்கும் பிராயச்சித்தமே கிடையாது.

(அத் 3 : 241) பன்றி மோத்தலினாலும் கோழிசிறகின் காற்றினாலும் நாய் பார்வையினாலும் சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகிறது.

(அத் 3 : 249) எவன் சிரார்த்தஞ்செய்து மிகுந்த அன்னம் முதலியவற்றை சூத்திரனுக்கு போடுகிறானோ அந்த மூடன் காலசூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான்.

(அத் 4 : 14) அவனவன் வருணாசிரமங்கலுக்கு தக்கதாக வேதத்திலும் தருமசாஸ்த்திரத்திலும் சொல்லப்பட்டிருக்கிற நித்திய கருமங்களை நாள்தோறும் சோம்பலில்லாமல் செய்யவேண்டியது.அவைகளை செய்கிறவன் மேலான கதியை அடைகிறான்.

(அத் 4 : 165) துவிஜாதியானாலும் பிராமணனை அடிக்கவேண்டுமென்று ஆயுதத்தை கையினாற் தூக்கினால் தாமிசிரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான்.

(அத் 4 : 166) பிராமணனை செத்தை முதலியவறால் தெரிந்து கோபங்கொண்டு அடித்தால் இருபத்தோரு ஜென்மம் நாய் முதலிய பாபசாதியில் பிறக்கிறான்.

(அத் 4 :245) பிராமணன் வேதத்தினாலும் உயர்ந்தோரிடத்தில் சகவாசம் பண்ணிகொண்டும் ஈனர்கலுடன் சகவாசஞ்செய்யாமலும் இருந்தால் சிரேஸ்ட்டதன்மையடைவான் இல்லாவிட்டால் சூத்திரனுக்க்கு சமமாவான்.


(அத் 5 : 147)பாலியமாயிருந்தாலும் யவ்வனமாக இருந்ததாலும் வார்திபமாகவிருந்தாலும் ஸ்திரிகள் தன்றன் வீடுகளில் தன்மனம்போனபடி ஒரு காரியத்தையும் செய்யகூடாது.

(அத் 5 : 148) பாலியத்தில் தகப்பன் ஆக்ஞையிலும் யவ்வனத்தில் கணவன் ஆக்ஞையிலும் கணவனிறந்த பிறகு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்கவேண்டியதே அல்லாது ஸ்த்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதுமிருக்க கூடாது.

(அத் 5 : 164) கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரிலோலனாயிருந்தாலும் நற்குனமில்லாதவனாயிருந்தாலும் பதிவிரதையான ஸ்த்திரியானவள் அவனை தெய்வத்தை போல பூசிக்க வேண்டியது.

(அத் 7 : 37) அரசன் தினம்தோறும் காலையில் எழுந்து மூன்று வேதத்தையும் ஓதினவர்களாகவும் நீதிசாஸ்த்திர வித்வானகளாகவும் இருக்கிற பிராமணாளை உபசரித்து அவர்கள் சொல்கிறபடி நீதி செலுத்த வேண்டும்

(1870 வரை இந்திய மன்னர்கள் அப்ப்டியேதான் மனு நீதி செலுத்தி வந்தார்கள்,இஸ்லாமிய மன்னர்களும் இதில் விதிவிலக்கல்ல தண்டனை சட்டத்துக்கு இஸ்லாமிய சட்டங்களையே இந்துக்களுக்கு கடைபிடித்த அவர்கள் மற்ற வழக்குகலுகு மனு அதர்மத்தின் படிதான் (அ)நீதி செலுத்தினார்கள்.

(அத் 7 :133) அரசன் எளியவனாக இருந்தாலும் வேதமோதின பிராமணனிடத்தில் ஒருபோதும் தீர்வை வாங்க கூடாது.அந்த பிராமணனும் தன் தேசத்தில் பசியினால் துன்பப்பட கூடாது.

(அத் 7 :134) எந்த அரசன் ராச்சியத்தில் வேதமோதியவன் சாப்பாடுக்கில்லாமல் துண்பப்படுகிறானோ அந்த அரசனின் தேசம் சாபத்தினால் துன்பப்பட்டு அழிந்துவிடும்.

(அத் 8 : 20) பிராமண குலத்தில் பிறந்து கர்மானுஸ்ட்டமில்லாத பிராமணேனும் அரசன் செய்ய வேண்டிய தீர்மானங்களை செய்யலாம்.சூத்திரன் ஒருபோதும் தீர்மானம் செயலாகாது.

(அத் 8 : 21) எந்த தேசத்தில் அரசன் செய்ய வேண்டிய தருமவிசாரணையை சூத்திரன் செய்கிறானோ அந்த தேசம் முழுவதும் பார்த்துகொண்டிருக்கும்போழுதே சேற்றிலகப்பட்ட பசுவைப்போல துன்ப்பப்படுகிறது.

(அத் 8 22) எந்த தேசத்தில் சூத்திரர் தெய்வத்தை நிந்திக்கிறவர்கள் இவர்கள் அதிகமாயும் ஜாதிகளில்லாமலும் இருக்கிறார்களோ அத்தேசம் முழுவதும் வறுமைநோய் இவைகளால் துண்பபட்டு சீக்கிரத்தில் அழிந்துபோய்விடும்(பார்ப்புகளுக்கு பிழைக்க வழியில்லாத ஊர் அழிந்து போகும் என்று அர்த்தம்)

(அத் 8 24) வழக்கின் உயர்வு தாழ்வு லாபம் னஸ்ட்டம் தருமம் அதர்மம் இவைகளை நன்றாக அறிந்து வருணாசிரம கிரமத்தின்படி (சூதிரனுக்கு ஒரு நீதி.பார்ப்பானுக்கு ஒரு நீதி) வழக்கை விசாரிக்க வேண்டியது.(அத் 8 38) அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியை பிராமணர்களுக்கு தானஞ்செது மற்றதை தன் பொக்கிசத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டியது.

(அத் 8 : 270) சூத்திரன் துவிஜர்களை கொடுமையாக திட்டினால் அவன் தாழ்ந்தவிடமாகிய காலில் பிறந்ததால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்.

(அத் 8 : 271) துவிஜர்களை பெயர் ஜாதி இவைகளை சொல்லி இகழ்ச்சியாக திட்டுகிற சூத்திரம் வாயில் பத்தங்குலமுள்ள எக்கு கம்பியை காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டும்.

(அத் 8: 272) அகங்காரத்தால் நீயிதை செய்ய வேண்டுமென்று பிராமணனுக்கு தருமத்தை உபதேசிக்கிற சூத்திரனுடைய வாயிலுங் காதிலும் எண்ணையை காய்ச்சி ஊற்ற வேண்டியது.

(அத் 8 :273) ஒருவனை பார்த்து நீ சாஸ்த்திரம் ஓதவில்லை நல்லதேயத்தில் பிறந்தவனல்ல நல்லகுலத்தானுமன்று,சாதகம் கர்மம் முதலிய சரீரசமுஸ்காரமும் உனக்காகவில்லை என்று இவ்விதமாக அக்கிரமமாக அதட்டுகிற துவிஜர்கலுக்கு இருநூரு பணம் தண்டம் விதிக்க.

(அத் 8 : 279) சூத்திரன் துவிஜாதிகளினது எந்தெந்த அவயங்களை கையினாலாவது ஆயுதங்கலினாவது அடிக்கிறானோ அவனுடைய அந்தந்த அவயங்களை துண்டிக்க வேண்டும்.

(அத் 8 : 280) கோபத்தினால கையையாவது தூக்கியடித்தால் அவன் கைய்யையும் உதைத்தால் அவன் காலையும் துண்டிக்க வேண்டும்.(அத் 8:281) பிராமணனுடன் சூத்திரன் சரியாசனத்தில் அமர்ந்தால் அந்த சூதிரனை அவனுக்கு இடுப்பிற் சூடு போட்டாவது ஆசனத்தை அறுத்தாவது ஊரைவிட்டே துரத்தி விட வேண்டும்.

(அத் 8 :282................)

(அத் 8 : 283) அகங்காரத்தால் பிராமணனின் தலைமயிர் கால் தாடி மீசை இவைகளை பிடிக்கிற சூத்திரன் கைகளை யோசிக்காமல் வெட்ட வேண்டும்.

(அத் 8 : 379 பிராமணனுக்கு தலையைமுண்டஞ்செய்து கொல்லும் கொலை தண்டனை விதிக்க கூடாது.மற்ற வருணத்தாருக்கு கொலை தண்டனை உண்டு.

(அத் 8 : 380) பிராமணன் எல்லா பாவஞ்செய்தாலும் அவனைகொல்லாமல் காயமின்றி அவன்பொருளுடன் ஊரைவிட்டு துரத்த வேண்டும்.

(அத் 8 :381) பிரம்மஹத்தியை விட அதிகமான பாவம் உலகதில்கிடையாது என்பதால் பிராமணனை கொல்ல வேண்டுமேன்று அரசன் மனத்தாலும் நினைக்க கூடாது.

(அத் 8 : 413) பிராமணன் சம்பளங்கொடுத்தேனும் கொடுக்காமலும் சூத்திரனிடம் வேலை வாங்கலாம் ஏனெனில் சூதிரர்கள் பிராமணனுக்கு பணிவிடை செய்வதற்காகவே படைக்கபட்டிருக்கிறார்கள் ப்ரம்மாவால்.

பொதுதளத்தில் வெளியிட முடியாத அளவுக்கு கீழ்தரமான விசயங்களாக இருப்பதால் இத்தோடு நிறுத்திகொள்கிறேன் இங்கே பதிவிட்டதற்கு முக்கிய காரணமே இந்து பயங்கரவாதிகள் அமைப்போம் என்று சொல்லிகொண்டிருக்கிற ராமராஜியத்தில் எல்லோருக்குமான சட்டமாக அமைய்யபோவது இந்த மனு அதர்மம்தான் இதை நான் சொல்லவில்லை சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்று முக்கிய மன்னிக்கவும் முழக்கிய லோஓஓஓகமான்ய பால கங்காத திலகர் என்பவரும் சொன்னது.மராட்டிய சித்பவன் பிராமணர்களின் கும்பலால் தொடங்கப்பட்டு கொலைவெறியாட்டம் ஆடி வரும் இந்து பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியது ஜனனாயக சக்திகளின் சவாலான கடமை ஆகும்

Sunday, December 30, 2007

தொடரும் சாதிவெறி கொடுமைகளும் ஓட்டு பொருக்கிகளின் பித்தலாட்டங்களூம்

தொடரும் சாதி வெறி கொடுமைகள்

இந்திய சுதந்திரத்தின் பொன் விழா முடிந்து வைர விழாவும் வரபோகின்றது.ஆனால் தாழ்த்தப்பட்டவர்கலுக்கு பொது மண்டபத்தில் காதணி விழா நடத்தக்கூடாது என்று நம்பியூரில் சாதிஆதிக்கத் திமிர் வெறியாட்டம் போடுகின்றது இந்திய குடிமகன் ஒவ்வொருவனும் இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்றும்,உலகத்திலேயே மிகபெரிய சனனாயக நாடு இந்தியா என்றும் ஆளும் வர்க்கங்கலும் பிழைப்புவாத ஓட்டு கட்சிகலும் என்னதான் கூப்பாடு போட்டாலும் புளுத்துப்போன பார்ப்பனிய சாதிஆதிக்கத்தின் முடைநாற்றத்தை மூடி மறைக்க முடிவதில்லை பொதுகினறில் நீர் எடுக்க தடை.ஊருக்குள் நிலம் வாங்கவோ,குடியிருக்கவோ தடை.செத்தால் புதைக்க பொது சுடுகாட்டுக்குத் தடை,கோவிலுக்குள் நுழையத்தடை.இரட்டை குவளை முறை.சேரியில் வாழ்க்கை என்று தாழ்த்தப்பட்டவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது கீழ்வெண்மனி.சமயநல்லூர்,திண்ணியம்.பாப்பாபட்டி.கீரிப்பட்டி.நாட்டார்மங்கலம்.கண்டதேவி என சாதியாதிக்க திமிருக்கு அடங்க மருத்து தாழ்த்தப்பட்ட மக்கள் போராட எழும்போதெல்லாம் சாதி ஆதிக்கவாதிகலும்,அவர்களை பாதுகாக்கும் அதிகாரவர்க்க அரசு எந்திரமும் பிழைப்புவாத ஓட்டுகட்சிகலும் ஓரணியில் நின்று அடக்கு முறைகளை கட்டவித்து விடுகின்றனர்.


நம்பியூர் பிலியம்பாளைத்தை சேர்ந்த விஜயா - மாரியப்பன் ஆகியோர் தமது குழந்தையின் காதணி விழா நடத்த மண்டபம் கேட்டபோது தாழ்த்தபட்டவனுக்கெல்லாம் மண்டபம் தர முடியாது என்று சாதி திமிரோடு அவமானப்படுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர் கவுண்டர்.முதலியார் சாதியை சேர்ந்த சாதியாதிக்க வாதிகள்அதற்கு பணியாது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பாதுகாப்பும் உரிமையையும் பெற்றுத்தர வேண்டும் என் போராடியபோது பேச்சுவார்த்தை என்கிற போர்வையில் மண்டபம் தர முடியாது என்று சொல்வது அவர்களது உரிமை என்று ஆதிக்க சாதி திமிருக்கு உரிமை பட்டம் சூட்டி சாதி விசத்தை கக்கினார் கோபி வட்டாச்சியர்.144 தடை உத்தரவு போட்டு ஊரைவிட்டே துரத்தியடித்திருக்கிறது அதிகார வர்க்க கூட்டம்.எத்தணைதான் வன்கொடுமைகளை தாங்கள் நடத்தினாலும் தாழ்த்தப்பட்ட்வன் போராட கூடாது.உரிமை கேட்க்க கூடாது என்று அடாவடியாய் நின்ற சாதியாதிக்கவாதிகள் கவுண்டர்,முதலியார் மற்றும் பிற சாதியில் உள்ள உழைக்கும் மக்களிடம் இன்று மண்டபம் கேட்ப்பான் நாளை நம் வீட்டு பெண்ணையே கேட்பான் என்று அவர்களிடம் உள்ள சாதிய உணர்வை தூண்டி சாதிவெறியூட்டி தாழ்த்தபட்ட மக்களுக்கு எதிராக கொம்பு சீவி விடுகின்றனர்.இதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை பாதுகாத்துக்கொள்கின்றனர்.மறியல் பேரணி கடையடைப்பு,கருப்புக்கொடி ஏந்துதல் என்று தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

சாதிவெறியர்களின் கூடாரமாகவே உள்ள ஓட்டு கட்சிகளின் தலைவர்களான காங்கிரசு மாவட்ட தலைவர் மொடக்குறிச்சி எம் எல் ஏ பழனிசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சரவணன்,பவானிசாகர் திமுக எம் எல் ஏ ஜீவா சுப்பிரமணி,அதிமுக மும்மாள் எம்பி வி.கே.சின்னசாமி,தேமுதிக.ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உட்ப்பட பலர் த்மது சாதி ஆதிக்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராக அணி சேர்ந்துள்ளனர்.தாழ்த்தப்பட்டோரை போலவே கவுண்டர்.முதலியார் மற்றும் பிற சாதி உழைக்கும் மக்களும் சூத்திரர்களாக இழிவுபடுத்தப்பட்டு பார்ப்பனியத்தின் காலடியில் மண்டியிட்டு கிடக்கின்றனர்.இது அந்த சாதிவெறியர்கலுக்கு கேவலமாகப்படவில்லை.பார்ப்பனியத்தின் சாதியாதிக்க சுரண்டல் நலனில் பங்கு போட்டுக்கொள்ளும் இந்த கும்பல் தாழ்த்தபட்டோரிடத்தில் தனது சாதி திமிரை காட்டுகின்றது.உயர்சாதி உழைக்கும் மக்களிடத்தில் சாதிய வெறியை ஊட்டி பார்ப்பனியத்தை பாதுகாக்கின்றது அன்பார்ந்த தமிழக உழைக்கும் மக்களே சாதியாதிக்கவாதிகளின் உயர்சாதி திமிரால் தன்மானம் இழந்து இனியுமா அடங்கி கிடப்பது உயர் சாதி திமிரை ஒழித்துக்கட்டுவோம் உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம் சாதிவெறியர்கலுக்கு துணை நிற்கும் அரசியல்கட்சிகளை விரட்டியடிப்போம்

எரியும் பனிக்காடு நாவல் முன்வைக்கும் அரசியல் ஒரு பார்வை

சாதீ ....... மண்ணை பொன்னாக்கும் மாய வித்தைகாரன் உழைப்பாளி.அவனின் குருதியை குடித்துகொலுக்க உருவாக்கப்பட்டது கொடுஞ்சாதி.அடித்தும் உதைத்தும் - எரித்தும் கொலை செய்து,பெண்களை மானபங்கபடுத்தி அடிமைத்தனத்தை நிலைனிறுத்துகிறது உயர்சாதி.இவ்வகையான அச்சுறுத்தல்கள்,அழிவு நடவடிக்கைகள் மீது அமர்ந்துகொன்டு கொள்ளையடிக்கிறான் பண்ணை - முதலாளிஆகவேதான் இங்கு சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான வர்க்க போராட்டமானது சாதி ஒழிப்பு போராட்டத்திலிருந்து தவிர்க்கமுடியாதது என்பதை வலியுறுத்துகிறது வரலாறு.தமிழ்தேச வரலாற்றில் அழியாத வலியாக நிளைத்திருக்கிறது வெண்மனி சம்பவம்,சாணிபால் சவுக்கடி மூலம் தங்களின் மனித மாண்பை மறுத்து உழைப்பை சுரண்டிய தஞ்சை பண்ணைகளுக்கு எதிராக தடந்தோள் உயர்த்தினர் தாழ்த்தப்பட்ட மக்கள் சினந்து செங்கொடியின் கீழ் அணிதிரண்ட மக்களை ஒடுக்க சதிதிட்டம் தீட்டியது பண்ணை கூட்டம்.இந்த ஓநாய்கூட்டத்தில் ஒருவனான கோபாலகிருட்டின நாயுடு 1968 திசம்பர் 25 இல் அப் படுபாதக செயலை செய்து முடித்தான்.உரிமைக்காக போராடிய தாழ்த்தப்பட்ட மக்களில் பிள்ளைகள் பெண்கள் ஆண்கள் என 44 பேரை ஒரு குடிசையில் அடைத்து உயிரோடு எரித்தான்.ஆண்டுகள் 40 ஆகிறது சாதிய கொடுமை தடையின்றி மேலவளவு பாப்பாபட்டி,கீரிப்பட்டி நாட்டார்மங்கலம்,கண்டதேவி,திண்ணியம்,செகுடந்தாழி.காளப்பட்டி ....... என தொடர்ந்து தலை விரித்தாடுகிறது.பட்டியலிடப்படும் இவ்வரலாற்று பதிவுகளை காட்டிலும் வெளிவராது புதைந்து கிட்டப்பவை ஏராளம்.அவற்றில் ஒன்றைத்தான் தோண்டி எடுத்து நமக்கு வழங்குகிறது எரியும் பனிக்காடு நாவல்

குறையா வளமுடைய நமது பெருங்காடுகளை அழித்து வெள்ளையனின் கொள்ளைக்காக உருவாக்கப்பட்டவை தேயிலை தோட்டங்கள்.மலைக்காடுகலில் கொடிய மிருகங்கலுக்கும்,நச்சு நோய்கலுக்கும் இலட்ச்சக்கனக்கானவர்களை பலிகொடுத்து உருவாக்கபட்டவைகள்தான் இன்றைய எஸ்ட்டேட்டுகள்.பலியிடப்பட்டவர்களில் பெரும்பானமையோர் தாழ்தப்பட்ட மக்கள்.அமெரிக்காவின் இயற்கையை சூறையாட கருப்பின மக்களை அடிமையாக கொன்டு சென்றதை போல் வெள்ளையர்கள் இங்கு தாழ்த்தப்பட்ட மக்களையும் ஏழைகளையும் அடிமையாக்கி எஸ்ட்டேட்டுகளை உருவாக்கினர்,தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா மலேசியா,சிங்கப்பூர்,இலங்கை மொரீசியஸ் என உலகின் பலநாடுகலுக்க்ம் தமிழ்நாட்டு மக்கள் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.சங்கிலி தொடராக நீளும் வரலாற்றின் ஒரு முனையை நம் கையில் கொண்டு வந்து தருகிறது நாவல்.வால்பாறை எஸ்ட்டேட்டுகளில் நடைபெற்ற அடிமைமுறை கொடுமைகள் நம்மை நடுங்க செய்கின்றன.வெள்ளைத்தோல் திமிரோடு ஆங்கிலேய ஆண்டைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது புரிந்த வண்புனர்சிகலும் வன்கொடுமைகலும் நம்மை பதைபதைக்க வைக்கின்றன.நூல் நேரடியாக சொல்வதை காட்டிலும் அதிகமாக நம்மை சிந்திக்க தூண்டுகிறது.ஈராயிரம் ஆண்டுகலுக்கும் மேலாக பார்ப்பனிய சாதி அடிமை தளையை தகற்பதற்க்கான வழியை திறந்து வைத்தது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் என்கிற மதிப்பீட்டில் இடியாய் இறங்குகிறது இவ்வரலாற்று உண்மை.ஆங்கில ஏகாதிபத்தியம் தனது கொள்ளை அதிகாரத்திற்கான படை மற்றும் அரசு துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய மக்களை கடைநிலை பணிகளில் அமர்த்திவிட்டு எண்ணிலடங்கா மக்களை நாடற்றவர்களாகவும் நாதியற்றவர்களாகவும் மாற்றி அடிமைகளாக ஆக்கியதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.


வெள்ளை ஏகாதிபத்தியம் புகுத்திய தொழில்துறையும் அதன் சீர்திருத்த நடவடிக்கையும் சரி இன்றைய உலகமயமாக்கலின் விளைவுகளான தரகு உற்பத்தி முறையும் சரி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவையோ விடுதலையையோ வழங்கவில்லை மாறாக சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் அவல நிலையைதான் உருவாக்கியுள்ளது.கதையின் களமான வால்பாறை எஸ்ட்டேட்டுகளிலிருந்து ஆயிரக்கனக்கான குடும்பங்கள் வேலை பறிக்கப்பட்டு வெளியேற்றப்படுவது இன்றைய தொடர் கதையாகி உள்ளது.பணமுதலைகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்கலுக்காகவும் வேளான் மண்டலங்கலுக்காகவும் நகரங்கள் நவீனமயமாக்கலுக்கும் - கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் வளமான பகுதிகளிலிருந்தும் விரட்டியடிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.மறுப்பவர்களும்,போராடுபவர்களும் கொலை செய்யப்படுவது சாதாரணமாகிவிட்டது.பாதிக்கப்படுவோரில் முதல் இடத்தில் இருப்பது தாழ்த்தப்பட்ட மக்களே,தொடரும் இச்சாதிகொடுமைகளை இல்லாதொழிப்பது எப்படி? இந்தியா முழுவதும் சாதிகள் உள்ளன ஆனாலும் இந்தியா எங்குமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஓரணியில் திரட்ட முடியுமா?இதோ கர்நாடகாவிலும் மகாராட்டிரத்திலும் தமிழர்கள் என்ற வகையில் தாகுதளுக்குள்ளாவோரில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட மக்களே,இவர்களை தாகுகிறவர்களில் பெரும்பாலோர் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களே,பிழைப்புக்காக அசாமுக்கு சென்ற தாழ்த்தப்பட்ட மக்களை கொல்வதும் அசாமின் பழங்குடி மக்களே

ஏன்? ஏனென்றால் ஒவ்வொரு மொழி வழி தேசிய இனத்திலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் அதனடிப்படையிலான உழைப்பு சுரண்டலையும் எதிர்த்து தங்களின் சொந்த ஆதிக்க சக்திகலுக்கு எதிராக போராடுகிறார்கள்.இப்போராட்டம் கூலி உயர்வு போராட்டமாகவோ,அரசியல் போராட்டமாகவோ,ஆயுத போராட்டமாகவோ இருக்கலாம் ஆனால் வெளிபகுதியிலிருந்து உழைக்கும் மக்கள் இங்கு உள்நுழையும்போது நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது.தமிழ்நாட்டில் சாதி சமூக கொடுமைகலுக்கு உள்ளாகும் உழைக்கும் மக்களுக்கு திருப்பூர் போன்ற தொழில்நகரங்கள் வடிகாலாக உள்ளது.ஆனால் பிழைப்பு தேடி வரும் பிற தேசிய இன மக்களின் வரத்தும் - குறைந்த கூலியில் அவர்கள் உழைக்க வேண்டியிருப்பதும் தமிழக உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் நெருக்கடியை உருவாக்க தொடங்குகிறது.இது மாதிரியான நிலைமைகள் ஒவ்வொரு தேசிய இனத்திலும் உள்ள சாதி ஆதிக்க சக்திகளையும்.சுரண்டல் பேர்வழிகளையும் ஊட்டம்பெற செய்கிறது.உழைக்கும் மக்களிடையே நிகழும் சாதிய மோதல்களோடு மொழி- இன மோதல்களையும் உருவாக்கி ஆளும் வர்க்கங்கள் இலாபம் அடைய வழி வகுக்கிறது.எனவே சாதியை ஒழிப்பதும் - மனித மாண்பை மீட்ப்பதும் வேலை வாய்ப்பை தேடி சொந்த மண்னை விட்டு வெளியேறுவதன் மூலம் நடைபெறக்கூடியதல்ல.


சொந்த மண்ணின் மீது நமது உரிமையை நிலைநாட்டுவதிலும் அதற்கான அதிகாரத்தை அடைவதிலும் நடைபெறக்கூடியதாகும்.சொந்த மண்ணை மீட்ப்பதற்கு தடையாகவும் அதிக்கசக்திகளிடம் பலியாகியும் கிடக்கும் மேல்சாதி மக்களிடையே உள்ள உயர்சாதி திமிரை ஒழிக்க போராடுவதன் மூலம் நிறைவேறகூடியதாகும்.வேற்பட்ட - ஏற்றத்தாழ்வான - இயற்கை வளங்களை வாழ்வாதாரமாக கொண்ட தனித்தனியாக சொந்த நிலபரப்பை உடைய ஒவ்வொரு தேசிய இனத்திற்குள் மட்டுமே நடைபெற கூடியதாகும்.மக்களின் செல்வங்களை சூறையாடும் தரகு - பார்ப்பனியத்தை வீழ்த்தி தமிழ்தேசிய விடுதலை புரட்சியை முன்னெடுப்பதன் மூலமே சாத்தியமாகும்.